Saturday, December 21, 2019

HISTORY


சென்னையின் சரித்திரத்தில் சில பக்கங்கள் - J K SIVAN
மனிதர்களில்  சுயநலம் மட்டுமே கருது பவர்களும் உண்டு,  பொதுநலத்தை  மனதில் கொள்பவர்களும் உண்டு.  ரெண்டாம் வகையினரை நாம்  நன்றியோடு நினைவில் வைத்த்துக் கொள்கிறோம்.    இந்தியாவிற்கு எத்தனையோ  வெளிநாட்டவர்கள்  வந்துள் ளார்கள், நம்மையும்  நம் நாட்டையும்  நன்றாக பயன் படுத்திக் கொண்டிருக் கிறார்கள்.  விரல் விட்டு எண்ணமுடியாத அளவு அவர்கள் செய்த செயல்களும்  நமது துன்பங்களும் என்றும்  காயமாக வடுவாக உள்ளது.   அவர்களில் ஒரு சிலர் நமது நன்மைக்கும்   பாடு பட்டிருக் கிறார்கள். அவர்களை வணங்குவோம்.

அர்மீனியா  என்ற தேசம்  ஒருகாலத்தில்  சோவியத் ரஷ்யாவுடன் இணைந்திருந்தது.  அர்மீனிய மக்கள் கத்தோலிக்க  கிறிஸ்து வர்கள்.  ஆசியாவுக்கும்  ஐரோப்பாவுக்கும் இடையே  பொதிந்திருக்கும் சிறு நாடு அர்மீனியா.  சென்னையில் அர்மீனியன் தெரு இன்றும் உள்ளது. அங்கு ஒரு  புராதன தேவாலயம் உள்ளது.   அர்மீனிய  வியாபாரி களும்  வெள்ளைக் காரர்களோடு  இந்தியாவில் வந்து  பிழைத்தவர்கள்.  அவர்களில் ஒருவர் கோஜா பீட்டர்ஸ்   உஸ்கன். (1680 - 1751)   1723ல்  நமது  சென்னைக்கு, ( அப்போது அதன் பெயர்  மதராஸ் ) வந்தார்.  ரொம்ப பணக்கார அர்மீனியன் அவர்.   அவரைப் போல  நிறைய  அர்மீனியர்கள்  வட மதராஸில் ஒரே இடத்தில் வாழ்ந்தனர்.

இன்றும் பிரதி  செவ்வாய் கிழமை  அர்மீனியன் தெரு பக்கம்  செல்வது கடினம்.  அங்குள்ள  புராதன  சர்ச்சுக்கு  கூட்டம் அலைமோதும்.  அர்மீனியனாக இருந்தும்    உஸ்கன்  கிழக் கிந்திய கம்பெனிக்கார  வெள்ளையர் களுக்கு  நல்ல  நண்பராக இருந்தார்.  அப்போது  மதராஸ்  கர்நாடக நவாப்  ஆதிக்கத்தில் இருந்தது. நவாப்  உஸ்கனுக்கு பேராதரவு கொடுத்தார்.  மதராஸில்  நீயும்  வியாபாரம் செய்யலாம்  என்று அனுமதி தந்தார்.  உஸ்கன்  பெருந்தனவானாகவும்  தர்மிஷ்டனாகவும்  இருந்தார். சாந்தோமில் இருக்கும்  செயின்ட் ரீட்டா  சர்ச் அவர்  சொந்த செலவில் கட்டியது.  அந்த சர்ச்சில்  இன்றும்   ஒரு கல்வெட்டு  இருக்கிறது. ''in memory of the Armenian  nation 1729'' .

சைதாப்பேட்டை செல்கிறோமே  அங்கே  பஸ்  நிலையத்தை  தாண்டியதும்  இடது பக்கம் ஒரு  பெரிய  பிரிட்ஜ் வாராவதி  அடையார் நதி மேல் கட்டப்பட்டு  ஒரு பக்கம் சைதாப்பேட்டை,  அண்ணா சாலை, இன்னொரு பக்கம்  மைலாப்பூர் அடையார் போகும் வழி என்று இருக்கிறதே,   அந்த பிரிட்ஜ் அருகே ஒரு பழைய  வெள்ளை நிற  பிரிட்ஜ் இன்னும் இருக்கிறதே  பார்த்த துண்டா?  .  அது 250 -300 வருஷங்கள் வயதானது.  அதற்கு மர்மலாங் பிரிட்ஜ் என்று பெயர். அந்த பிரிட்ஜ் மேல் சைக்கிளில்  சென்றிருக்கிறேன். அதன் ஆரம்பத்தில்  இன்னும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது.  அதில்  பாரசீக, லத்தின், ஆர்மேனியன் பாஷைகளில் இங்கிலீஷில் எழுதி இருக்கிறது.  அது தான்  மதராஸில் அடையார் நதிமேல் கட்டப்பட்ட முதல்  பாலம்.    1728ல் உஸ்கன் சொந்த செலவில் கட்டியது.  இப்போது   உபயோகத்தில் அதன் பக்கத்தில் இருக்கும் பெரிய  tபாலம்  தான்  மறைமலையடிகள் பாலம்.  நமது   அரசு நமது பணத்தில்  கட்டியது. மர்மலாங் மறைமலை  ஆகிவிட்டது.

1726ல்  உஸ்கன் அளித்த  இன்னொரு கத்தோலிக்க சர்ச் சேவை என்ன தெரியுமா?  இன்றும்  பரங்கிமலை மேல் உள்ள  ஒரு சர்ச்சுக்கு செல்ல வழி இருக்கிறதே. அதில் கிருஸ்தவர்கள் சுலபமாக கஷ்டமின்றி   மலை மேலே   ஏறுவதற்கு  படிகள் இருக்கிறதே  அந்த படிகள்  உஸ்கன்   நிறுவியவை.
அங்குள்ள  கல் வெட்டு   உஸ்கன்  அந்த சர்ச்  பராமரிப்புக்கு  1500 பகோடா ( நாம் சாப்பிடும் பக்கோடா இல்லை. அந்த கால  நாணயம்) தர்மமாக அளித்தார் என்று சொல்கிறது.   கிழக்கிந்திய கம்பெனியின்  ஆலோசகராக  உஸ்கன்  நியமிக்கப் பட்டார்.  கிழக்கிந்திய கம்பனி பெயரில்  நாணயங்கள்   வெள்ளி  செம்பில் உருக்கி  செய்ய அதிகாரம் பெற்றவர்.   மின்ட் தெரு  என்ற பெயர் அவர்  நாணயம் உருக்கும் தொழிற்சாலை வைத்திருந்த இடம்.

வேப்பேரியில் உள்ள  ஒரு பெரிய கத்தோலிக்க கிருஸ்தவ  தேவாலயமான   '' Our Lady of Miracles''  அவர் நிர்வாகத்தில் கடைசி வரை, 1751ல் அவர் மறையும் வரை  இருந்தது.  அங்கே தான் அவர் அடக்கம் செய்யப்பட்டார். இந்த  சர்ச் பின்னர்  ப்ரோட்டஸ்டண்ட்ஸ் வசம் சென்றது.
அந்த  அற்புத மனிதன்  உஸ்கன்  பணத்தை பணம் என்று பாராமல் தண்ணீராக அனைவருக்கும் உதவும்  நல்ல காரியங்களுக்கு வாரி தந்த வள்ளல். கடை எழுவள்ளல்களில் அவரை எட்டாவதாக சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் கூட தப்பே இல்லை என்பேன்.

பிரிட்ஜ் கட்டுகிறேன் பேர்வழி என்று மக்கள் பணத்தை சூறையாடும் பொதுநலவாதிகள் உள்ள இந்த  காலத்தில்,  சென்னையில் ஒருவர் தன்னுடைய சொந்த செலவில் ஒரு பெரிய பாலத்தை கட்டியிருக்கிறார். அதுவும் இடியாமல் விழாமல் கரையாமல் நூறு இருநூறு வருஷங்கள் உழைத்து  விட்டு  வயதாகியதால்  ஓய்ந்து விட்டது.

1740ல்   கர்நாடகத்தின்  மீது  (மதராஸ் மைசூர் பகுதி ) மராத்திய  தளபதி ரகுஜி  பான்ஸ்லே   ஆக்கிரமிப்பு  செய்தபோது   கிழக்கிந்த கம்பெனி அரசு  உஸ்கன் தயவை நாடியது.  உஸ்கன்   பான்ஸ்லேயுடன்  பேச்சு வார்த்தை நடத்தி  சண்டையை தடுத்தார்.  சமாதானத் துக்கு வழி வகுத்தார்.  பான்ஸ்லேக்கு  உஸ்கனை ரொம்ப பிடித்து போய்விட்டதால்  ஆங்கில அரசு திருச்சிராப்பள்ளி யையும்  ஆட்சி செய்து நிர்வகிக்கட்டும் என்று   உரிமை   போனஸ்  வேறு கொடுத்துவிட்டு சென்றான்.

1746ல்  பிரெஞ்சுக்காரர்கள்  டூப்ளெ தலைமை யில்  படை அனுப்பி  மதராஸில் இருந்த  உஸ்கனின் சொத்துக்களை சூறையாடி  பாண்டிச்சேரிக்கு கொண்டு சென்றனர்.  உஸ்கன் உயிர்தப்பி  ஒரு டேனிஷ் கப்பலில் ஏறி சென்றுவிட்டார்.  டூப்ளெ  ஒரு கண்டிஷன் போட்டான்.
''உஸ்கா , நீ  எங்களோடு சேர்ந்துகொள். எங்களுக்கு உழை. உன் சொத்துக்களை திருப்பி தருகிறோம். இங்கே பாண்டிச்சேரிக்கு வந்து விடு''  என்று.   ஆனால் உஸ்கன்
''அடே  டூப்ளெ , உன் டூப்பை  உன்னோடு வைத்துக் கொள் . எனக்கு இத்தனை காலம் ஆதரவு தந்த  ஆங்கிலேயர் களுக்கு விரோதமாக நான் எதுவும் செய்யமாட்டேன். என்   சொத்து எல்லாம் திருடிய  நீயே  வைத்துக் கொள் '' என்று பதிலளித்தார்.

1749ல்   மதராஸ் மீண்டும் வெள்ளையர் ஆளுமைக்கு திரும்பியது  செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்  உஸ்கன் வந்து பாதுகாப்பாக  தங்க  வெள்ளை அரசாங்கம் அழைத்தது.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...