''உலகமே தலை கீழாக மாறிவிட்டதே ஸார் '' என்று ராகவேந்திர ராவ் ரொம்ப கவலைப் பட்டுக்கொண்டு ரெண்டு வேர்க்கடலையை வாயில் போட்டுக்கொண்டார்.
''எப்படி சொல்கிறீர்கள் ராவ்ஜி? எனக்கு உலகம் மாறியதாக எப்போதும் தோன்றியதில்லை.நாம் தான் மாறுகிறோம்.''
''அதெப்படி சார். எல்லாமே மாறிவிட்டது தெரியலையா உங்களுக்கு?'' என்கிறார் ராவ்ஜி.
யோசித்தேன்.
அப்போதெல்லாம் ஸ்கூல் bag முதுகில் சுமந்தவர்கள் இப்போது ஆணும் பெண்ணும் பெரிய முதுகில் தொங்கும் பையோடு ஊருக்கு போவது போல் வேலைக்கு செல்கிறார்கள்.
அப்போது யானை வாட்டர் மார்க் பேப்பர் நோட் புக் உபயோகித்தோம். இப்போது எலக்ட்ரானிக் நோட்புக்.
அப்போது ஹீரோ சைக்கிள். இப்போது ஹீரோ ஹோண்டா யமஹா என்று பூதங்கள் மேல் வேகமாக மிதிக்காமல் சவாரி.
அப்போது அணிந்த அரை நிஜார் வளர்ந்து கிழிந்த நார் நாராக தொங்கும் முழு நிஜாரான ஜீன்ஸ்.
அப்போது நமக்கு தெரிந்தது பிளாஸ்டிக் கார். பாட்டரி போட்டால் லைட் அடித்து பீம் பீம் என்று கத்திக்கொண்டு நாய்க்குட்டி போல் சுற்றி சுற்றி வரும். இப்போது எவரிடமும் ஒரு பெட்ரோல் டீ ஸல் கார்.
அப்போது நமக்கு தெரிந்தது பிளாஸ்டிக் கார். பாட்டரி போட்டால் லைட் அடித்து பீம் பீம் என்று கத்திக்கொண்டு நாய்க்குட்டி போல் சுற்றி சுற்றி வரும். இப்போது எவரிடமும் ஒரு பெட்ரோல் டீ ஸல் கார்.
அப்போது வாத்தியார் பரிக்ஷை என்றால் பயம். இப்போது ஆபிஸ் பாஸ், அவர் இடும் அசுரத்தனமான target. இலக்கு. அதை அடையமுடியுமோ என்ற பயம் எல்லோர் முகத்திலும்.
எப்படியாவது முதல் மாணவனாக அப்போது முயன்றோம். இப்போதோ ''இந்த மாத சிறந்த ஊழியன்'' பட்டம் பெற ஆர்வம்.
அப்போது இருந்த காலாண்டு தேர்வு, இப்போது காலாண்டு ரிசல்ட். முடிவு.
அப்போதெல்லாம் விறுவிறுப்பாக ஆவலாக எதிர்பார்த்தது பள்ளி வருடாந்திர மலர். இப்போது கம்பெனியின் வருடாந்திர கணக்கு நாடி ரிப்போர்ட். annual report.
அப்போதைய வருடாந்திர பரிக்ஷை இப்போது வருடாந்திர கணிப்பு annual appraisal
அப்போது கிடைத்தது அப்பா அம்மா கொடுக்கும் சில்லறை காசு. இப்போது பேங்க் அக்கவுண்டில் சம்பளம்.
அப்போது தீபாவளி பட்டாசு கொடுப்பார்களா என்று இருந்த ஆர்வம் இப்போது தீபாவளி போனஸ் கிடைப்பதில் இருக்கிறது.
நல்ல மதிப்பெண் பெறவேண்டும், உயர்ந்த ரேங்க் வாங்கவேண்டும், வெள்ளி கப் பரிசாக பெறவேண்டும் என்றிருந்தவர்கள் இப்போது வருடாந்திர முடிவில் ஊக்கம் தொகை, உத்யோக உயர்வு எதிர்பார்க்கிறார்கள்.
கார்ட்டூன் பார்ப்பதே ஒரு பெரிய விஷயம் அப்போது. இப்போது விறல் இடுக்கில் எத்தனையோ டமால் டுமீல் படங்கள். பார்க்க நேரம் எங்கே ?
பன்னீர் சோடா, கலர் என்கிற கோலா, ஆரஞ்சு கலர் இனிப்பு பானம் இப்போது என்னென்னவோ போதை பொருளாகி விட்டது.
இப்படி அடுக்கிக்கொண்டே போனால் மாறுதல் உலகில் இல்லை, நம்மிடம் தான் என்று புரியாதா ராவ்ஜி என்று கேட்க திரும்பியபோது ராவ்ஜியைக் காணோம்.
No comments:
Post a Comment