Friday, December 6, 2019

SRI VISHNU SAHASRANAMAM




ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  J K SIVAN 


                  ஆயிர நாமன் 

மஹாபாரதத்தில்  வேத வியாசர் குருக்ஷேத்திர யுத்த பூமியில் பிதாமகர் பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடந்தவாறு தனது தேக வியோகத்துக்கு  உத்தராயண புண்ய காலம் வரை காத்திருக்கும்போது இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஸ்ரீ கிருஷ்ணன் பாண்டவன் யுதிஷ்டிரனிடம், ''யுதிஷ்டிரா பீஷ்மர் ஒரு ஞானி, சத்யஸ்வரூபம், அவரை அணுகி அவரிடம் ஆசி பெற்று, உபதேசங்கள் நீ பெறவேண்டும்'' என்கிறார்.  யுதிஷ்டிரருக்கு அவ்வாறே  அநேக நீதி நெறி முறைகள் அறிவுரைகள் சொல்லும் பீஷ்மர்  விஷ்ணுவின் ஆயிர நாமங்களை உபதேசிக்கிறார்.  அதில்  222 நாமங்கள் இதுவரை பார்த்தோம். இனி மேலே செல்வோம்:


233. வாஹ்னி: அக்னி. தீ. தெய்வமாக யாகத்தில் யஃனத்தில் வழிபடப் படுபவன், கர்மபலனை அளிப்பவன்.
 

234. அநிலா: வெவ்வேறு அர்த்தம் கொண்ட வார்த்தை: வாயு, வாழும் ஜீவன்கள், தோற்றம் அறிய முடியாத வன்.பிறப்பற்றவன்.உண்பவன்.தனக்கென ஒரு இடம் இல்லாதவன் -- எங்கும் நிறைந்தவன்.
 

235. தரணீதரன்: பூமி நாயகன். நமது அனுபவங்களுக்கு காரணமானவன்.
 

26. ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
 
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: ||
 

236. சுப்ரஸாதா: - தெய்வாம்சம் நிரம்பியவர். எளிதில் முழு திருப்திஅடைபவர். ''உள்ளன்போடு, துளி யூண்டு என் மீது நம்பிக்கையோடு, பக்தியோடு எது கொடுத்தாலும் எனக்கு திருப்தியே'' -- கிருஷ்ணன், கீதையில்.
 

237. ப்ரசன்னாத்மா: அளவில்லாத சாஸ்வத பரிசுத்தன். குணங்களுக்கு அப்பாற்பட்ட, துக்கம், துன்பம், உணர்ச்சிகள், நெருங்காத சாந்தஸ்வரூபன்..
 

238. விஸ்வத்ரிக் : உலகில் எங்கும் எதிலும் காணும் உணர்வுகள், எண்ணங்கள், செயல்கள் வெல்லமுடியா சக்தி. அலைகள் இல்லாத ஆழ்ந்த சமுத்திரம்.
 

239. விஸ்வபுக்: உலகின் சர்வ மாயா அனுபவங்க ளையும் தான் ஒட்டாமல் ரசித்து ருசிப்பவன்.
 

240. விபு: எண்ணற்ற மாயத் தோற்றங்களாக காண்பவன். ஆனால் எல்லாமே ஒன்றேயானவன். 

241. ஸத்கர்த்தா : சாதுக்களை,பக்தர்களை, ஞானிகளை, போற்றுபவன். தர்மத்தை விரும்பி ரக்ஷிப்பவன்.
 

242. ஸத் கிருதா: நல்லோராலும் எல்லோராலும் நாடப்படுபவன்.
 

243. சாது: தார்மீகமான வழியை பின்பற்றுபவன். சாது.எளிமையானவர். யோகமார்கம் கடைபிடிப்பவன். சாதுக்களின் சிறந்தவர் விஷ்ணு
 
.
 
244. ஜஹ்னு : ஜனங்களுக்கு அதிபதி.வழி காட்டி.
 

245. நாராயணா: என்னால் விளக்கமுடியாத ஒரு வார்த்தை. சொல்லி மாளாத. விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர். அயணம் = பாதை. நரேன்-- மனிதன். மனிதன் போகவேண்டிய சரியான, தார்மீக, நேர்மையான பாதையை காட்டுபவர்: அகம்பாவம் இருந்தால் நரன். அது அழிந்தால் நாராயணன். நரன் என்றால் ஈஸ்வரன். அவனிடமிருந்து வெளிப்படும் தத்வம் '' நார'' எனப்படும். அதில் ஈடுபடுத்துபவன் நாராயணன். ''நாரா'' என்றால் நீர். பிரபஞ்சமே பிரளய ஜலத்தில் தோன்றியது. அந்த நாராயணன் உயிரினத்தை படைத்தவன். அவன் இருப்பதே பாற்கடலில். எனவே ''நாரா''யணன். மனு இப்படித்தான் பாகவதத்தில் விவரிக்கிறார்.
 

246. நர: ஜீவராசிகளை சனாதன தர்ம வழியில் நடக்க வழிகாட்டுபவர்.விஷ்ணு.

27. அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருத் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: ||

247. அஸந்கயேய:  எண்ணிக்கை இல்லாதவன். எண்ணற்ற பேரும்  உருவமும் கொண்டவன். பிரபஞ்சத்தில் காணும் யாதுமாகி நிற்பவன்.

248. அப்ரமேய ஆத்மா:   ஆத்மாவை புத்தியால் கட்டுப்படுத்தவோ உணரவோ முடியாது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...