திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
23 ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே
கிருஷ்ணனின் தாத்தா சூரசேனர். அப்பா வசுதேவர். அம்மா தேவகி. அவன் எட்டாவது குழந்தை. பிறந்தது மதுராவில் ஒரு சிறையில்.
கிருஷ்ணன் பிறக்கும்போது தனது சுய உருவான நாராயணனாக சங்கு சக்ரங்களோடு பிறந்தார். குழந்தை பிறந்ததும் விஷயம் எட்டி கம்சன் சிறைக்கு நேரில் வந்து தனது கையால் அந்த குழந்தையை கொல்ல காத்திருந்தான்.
தேவகி தனக்கு பிறந்தது மனித குழதை அல்ல, தெய்வமே என்று தெரிந்ததும். இரு கரம் கூப்பி ''பகவானே, ஸ்ரீமந் நாராயணா, தாங்களே வந்து எனக்கு மகனாக பிறந்தது என் பூர்வ ஜென்ம பாக்யம். சங்கு சக்ர கதாயுதங்களோடு தோற்றம் வேண்டாம். சக்ரத்தை, மறைத்துக் கொள் தெய்வமே, சாதாரண குழந்தையாகவே உருவெடுங்கள்'' என்று கேட்டுக் கொள்கிறாள். வசுதேவரும் சேர்ந்து அதை சொல்கிறார்.. எப்படியோ அந்த குழந்தை கம்சனின் வாளிலிருந்து தப்பவேண்டுமே என்ற கவலை.
ஆனால் கிருஷ்ணரோ ஒரு காரண நிமித்தமாக அங்கே வந்து பிறந்தவர். ஆகவே தன்னை எங்கே கொண்டு சேர்க்கவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று அழகாக வசுதேவருக்கு அறிவிக்கிறார். அவ்வாறே நடந்து கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் வளர்கிறார்.
தெய்வமே குழந்தையாக வந்தது தெரிந்தும் அந்த தாயின் தூய பாச மனது அவனைத் தான் எப்படியாவது காப்பாற்ற நினைத்தது அல்லவா.? இது தான் அதன் சிறப்பு. பகவானையே நீ பல்லாண்டு வாழவேண்டும் என்று பெரியாழ்வார் மனது அதனால் தான் பாடியது.
திருக்கோளூர் பெண் ராமாநுஜரிடம் ஐயா நான் எவ்விதம் இந்த புண்ய தேசத்தில் திருக்கோளூரில் வாழ தகுதி பெற்றவள்? என் மனது ஒரு நாளேனும் தேவகியை போல வசுதேவரைப் போல ஸ்ரீ மந்நாராயணன் மீது கொஞ்சமாவது அக்கறை கொண்டு இருந்ததா? நீங்களே சொல்லுங்கள்'' என்கிறாள்.
No comments:
Post a Comment