Monday, December 16, 2019

VISHNU SAHASRANAMAM



ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்  J K  SIVAN 


                                 ஆயிர நாமன்  (313 - 328)


313. வ்ரிஷா: பகவான் தர்ம ஸ்வரூபி. ஒவ்வொரு ஜீவனும் ஆன்மாவை உணர்வது  ஸ்வதர்மம். நமது ஆன்மாவே விஷ்ணு.

314. க்ரோதஹா: கோபத்தை அழிப்பவர். கோப உணர்ச்சியே பாபம் செய்ய தூண்டிவிடும் ஒரு முக்யகாரணம். ஆகவே  கோபத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.

315. க்ரோதக்ரித் கர்த்தா: கீழ்த்தர குணங்களை, எண்ணங்களை, நாட்டங்களை,  கோபத்தோடு வெறுக்க வைப்பவர்.

316. விஸ்வபாஹு: எண்ணற்ற கரங்களை கொண்டவர். அவையே பிரபஞ்ச கார்யங்களை புரிகின்றன.

317.மஹீதரா: பூமியின் ஆதாரம் விஷ்ணுவே. துணிக்கு பஞ்சு எப்படி மூலமோ அப்படி பக்தனின் உள்ளத்தில் கசியும் பக்தியே தான்  விஷ்ணு.

35. அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: ||

 318. அச்சுத: ஸ்திதி மாறாதவர். ஒரே நிலையில் உள்ளவர். உபநிஷத்துகள் விஷ்ணுவை சாஸ்வதன் ,தெய்வீகன், மாறாதவன் என்று கூறுவது இதனால் தான்.

319. பிரதித : எங்கும் காணப்படுபவர். தூணிலும் துரும்பிலுமிருப்பவர். அங்கிங்கெங்கெனாதபடி  எங்கும்  பிரகாசமாக திகழ்பவர்.

320: பிராண: வாழ்வின் சகல பரிமாணமும் பிராணனே. சர்வ ஜீவன்களிலும் பிராணனாக இருப்பவர் விஷ்ணுவே. உயிர்ச்சக்தி.

321. ப்ராணதா : உயிர்களுக்கு பிராண சக்தியை அளிப்பவர். எல்லோர் உள்ளத்திலும் வெள்ளமாக அமைதியை, சாந்தியை நிரப்புபவர்

322. வாசவானுஜ : இந்திரனின் சகோதரன். வாமனனாக அதிதிக்கு பிறந்ததால் இப்படி ஒரு உறவு.
323. அபாம் நிதி: ஜல மயம். சாகரம். ''அடே அர்ஜுனா, நீரில் நான் சமுத்திரம் '' கிருஷ்ணன் கீதையில். மனக்கடலில் ஆன்மாவாக இருப்பவர்.

324. அதிஷ்டானம்: பிரபஞ்சத்தின் மூலாதாரம்.

325. அப்ரமத்தா: தனது நீதியில், நேர்மையில் துளியும் தவறாதவர்.

326. ப்ரதிஷ்டிதா : பிரபஞ்சமே ஏதோ ஒன்றை அதன் காரணமாக நம்புகிறது. காரணம் காணமுடியாத காரணன் விஷ்ணு.   சர்வம் விஷ்ணுமயம் என்று இந்த ஜகத் இருக்கும்போது எது காரணம், எங்கே காரணம்?
36. ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: ||

 327. ஸ்கந்தா:  பரமசிவனின் இளைய குமாரன் சுப்ரமணியன். புராணங்களில் ஸ்கந்தன், கந்தன் என்று போற்றி வணங்கப்படுபவன்.  வடக்கே  கார்த்திக், குமாரன், என்று  அறியப்படுபவன்.  தேவ சேனாபதி.

 328. ஸ்கந்ததர: ஸ்கந்தனின் தந்தை  பரமேஸ்வரன்.

ஆயிரம் நாமன்  புத்தகமாக  இருக்கிறது.வேண்டுமென்று விருப்பப்படுவோர்  என்னை வாட்சப்பில்  உங்கள் பெயர், விலாசத்தோடு அணுகினால் அனுப்புகிறேன்.  ஜே கே சிவன்  9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...