திருவெம்பாவை J K SIVAN
பாகம் பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர்
13. ''பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.''
அர்த்தநாரி என்ற பெயர் கொண்ட ஆதி சிவனுக்கு பாதி பரமசிவன் என்ற பெயர் அவனது வாம பாகத்தில் உமை இருக்கும் உண்மையால் தான் இந்த பெயர். தூத்துக்குடியில் நான் வசித்த சில காலத்தில் தினமும் அங்கே உள்ள பழைய சிவன் கோவில் ரொம்ப பிடிக்கும். சங்கரராமேஸ்வரர் பாகம் பிரியாள் என்று சிவனுக்கும் உமைக்கும் பெயர்.

பெண்களே, இதோ வந்து விட்டோமே நமது ஊரிலேயே மிகவும் பெரிய ஆழமான குளத்துக்கு. அங்கே பாருங்கள் ஒரு அதிசயத்தை. அழகிய நீலோத்பல புஷ்பம் மலர்ந்திருக்கிறது.அதன் அருகிலேயே தெரிகிறதல்லவா செந்தாமரை மலர். இது இரண்டும் யாரா? இது கூடவா தெரியாது? நீலோத்பலம் தான் மஹேஸ்வரி. சிவப்பாக இருப்பதாலேயே அது சிவன் என்று செந்தாமரை உணர்த்திவிட்டதே. சிவனா இல்லையா என்று சந்தேகப் படுகிறாயா? உற்றுப்பார் சிவந்த அந்த செந்தாமரை மலர்க்கொடியில் அழகிய வழுவழுப்பான அரவம், பாம்பு அதை பின்னிக் கொண்டிருக்கிறதே. அப்படியென்றால் செந்தாமரை வேறு யாராக இருக்க முடியும்.
படித்துறையில் இறங்குங்கள். உடல் அமிழ்ந்து குளிப்போம். களிப்போம் . உடல், உள்ள, அழுக்கு எல்லாமே நீங்கட்டும். கலகலவென்ற உங்கள் வளையல்கள் ஒலிக்க, கால் தண்டை கொலுசு சப்தங்கள் கலீர் கலீர் என்று ஒலிக்க நீரில் பாய்ந்து விளையாடி .அவனைப் பாடுவோம்.

கிழக்கே ஒரு கடல் வாணிப துறைமுகம் தூத்துக்குடி. உப்பு நகரம். அமைதியான மக்கள், கிறித்தவ ஹிந்து நாடார் சமூகம் நிறைந்தது. சரித்திரத்தில் அழிக்கமுடியாத பெயர் கொண்ட வ.வு சி, ஆஷ் துரையை கொன்ற வாஞ்சி, சம்பந்தப்பட்ட ஊர்.
எழுநூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஆலயம் சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் ஆலயம். சங்கரராம பாண்டியன் எனும் அரசன் புத்ரபாக்யம் வேண்டி இங்கே வந்து இறைவனை வேண்டியதில் பலனடைந்து நன்றியோடு சங்கரராமேஸ்வருக்கு ஆலயம் கட்டினான் என்று சரித்திரம். ரிஷிகள் காஷ்யபர், கௌதமர், அத்ரி, பாரத்வாஜர் ஆகியோர் வந்து வணங்கிய சிவன். அறுபத்து மூவரில் இருவர் எறிபத்த நாயனார் புகழ் சோழ நாயனார் வசித்த ஊர். தூத்துக்குடிக்கு திருமந்திர நகரம் என்று ஒரு பெயர் உண்டு. ஏனென்றால் பரமேஸ்வரன் உமாதேவிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த ஊர்
சில மாதங்கள் வசித்தாலும் மிகவும் அற்புதமான மறக்கமுடியாத நினைவுகளை எனக்கு தந்த ஊர் தூத்துக்குடி, அதிலும் முக்கியமாக இந்த சிவாலயத்திற்கு சென்று சில நிமிஷங்களாவது தியானித்து அமைதி பெறாத நாளே கிடையாது.
No comments:
Post a Comment