ஒரு கனவு புத்தாண்டு J K SIVAN
தாத்தா உங்க கிட்ட புத்தாண்டு வாழ்த்து வாங்க என் பிரெண்ட்ஸ் வந்திருக்காங்க.
ஒருவரை ஒருவர் வாழ்த்த புத்தாண்டு என்ன பழைய ஆண்டு என்னடா? வரச்சொல்.
எல்லோரும் ஹாலில் உட்கார்ந்திருக்காங்க நீங்க வாங்க அங்கே.
வெகு நேரம் உட்கார்ந்திருந்ததில் ரத்த ஓட்டம் நின்று எனது பழைய கால்கள் எழுந்து நிற்க மறுத்தது.
''காலே, நீ ரொம்ப நல்லவன் அல்லவா? 2019 மாதிரி நல்லபிள்ளையா எனக்கு 2020 லேயும் நடக்கிறியா?'' மெதுவாக உதறி விட்டுக் கொண்டே ஹாலுக்கு நடந்தேன்.
20 சிறுவர் சிறுமியர் எல்லாம் 10-15வயதுக்குள். '' வணக்கம் தாத்தா, நிறைய விஷயங்களை நீங்கள் எங்களுக்கு சொல்லித்தருகிரீர்கள். இன்றும் உங்கள் பேச்சைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.''
''குழந்தைகளே, கடவுளிடம் நாம் பிரார்த்திப்பது என்பது நமது தேவைகளை பூர்த்தி செய்ய சொல்வது அல்ல. என் ஆத்மாவில் வந்து குடி கொள். நான் செய்த தவறுகளை இனி செய்யாமல் திருத்து. பிராத்தனையில் இதயம் மட்டும் இருந்தால் போதும், வெறும் வார்த்தைகள் மட்டும் இருந்தால் பயனில்லை. இப்படி சொன்னவர் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தாத்தா. காந்தி தாத்தா.
''ஏன் தாத்தா இந்த உலகத்திலே நாம் அனுபவிக்கிற சுகம் உண்மையில்லை என்கிறீங்களே எப்படி தாத்தா?''
உதாரணத்தோட சொன்னாதான் உங்களுக்கு இது புரியும். சொல்றேன். ஒரு பெரிய தவளை. அதை ஒரு பாம்பு பிடிச்சுடுத்து. பாம்பின் வாயிலே தவளை. அதோடைய பாதி உடம்பு பாம்பு வாயிலே இருக்கு. அப்பவும அந்த தவளை அந்த நேரத்திலே கூட அது வாய்க்கு எதிரே ஒரு பூச்சியைப் பாத்துட்டுது. டக்குன்னு நாக்கை நீட்டி அந்த பூச்சியை பிடித்து விழுங்குது. நாமும் தவளை போலே தான். காலம் என்கிற பெரிய பாம்பின் பிடியில் இருக்கிறோம். இதை உணராமலே, புலன் இன்பத்தில் திளைத்து வாழ்வது சாஸ்வதம் என்று மனப்பால் குடிக்கிறோம். இதற்காக இரவும் பகலும் பிரயாசைபடுகிறோம்.. இப்போது தெரிகிறதா?"".
தாத்தா நாங்க வரும்போது நீங்க ஏதோ உரக்க பாடிக் கொண்டிருந்தீன்களே அது என்ன பாட்டு.
உங்களுக்கு சொன்ன விஷயமே தான். மறுபடியும் பாடறேன் கேளுங்க
''ஆங்காரமும் ஒடுங்கார், அடங்கார் , ஒடுங்கார், பரமானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறுப்பும் அற்றார் தினைப்போது அளவும்
ஓங்காரத்து உள் ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார் யம தூதருக்கே''
இதன் அர்த்தம் என்ன தெரியுமா பசங்களா, எவன் ஒருவன் தன்னுடைய ஆங்காரம், அகம்பாவம் இதெல்லாவற்றையும் துண்டித்து புதைக்கவில்லையோ, எவன் அவனது புலன்கள் இழுத்துச் செல்லும் வழியில் ஒரு வித கட்டுப்பாடும் இன்றி போகிறானோ, எவன் ஒரு தினை அளவு கூட இறைவனை நினைக்கவில்லையோ, ஓம் என்கிற பிரணவ ஸ்வரூபமாக உள்ளே இருக்கும் முருகனை உணர வில்லையோ, எவன் தேவையற்ற எண்ணங்களில் உழன்று, என்றும் ஸாஸ்வதமான உள்ளே உள்ள ஆத்மாவை மறந்த நிலையில் இருக்கிறானோ, பாவம் எம தூதர்கள் கையில் பாசக்கயிருடன் அவனைக் கட்டி நரகத்துக்கு இழுத்துச் செல்லும்போது என்ன செய்வான்? இப்படி கவலைப்படுபவர் யார் ? தெரியுமா?
''நீங்களா தாத்தா?'' ஒரு பையன் பட்டென்று என்னைக் கேட்டான்.
''இல்லேடா பையா. இப்படி நமக்காக எண்ணுபவர் அருணகிரிநாதர். இது கந்தரலங்காரத்தில் வருகிறது.
போய் விளையாடுங்கோ. நான் நிறைய அப்பறமா சொல்றேன்.
ஒரு குட்டி பெண் ''தாத்தா புது வருஷம் ரெண்டு நாளிலே வருதே. உங்களுக்கு ஹாப்பி நியூ இயர் என்று சொல்லி விட்டு ஓடியது..'
புது வருஷம் என்றால் இத்தனை நாள் கிழித்த காகிதம் தீர்ந்து போய் புது அட்டை தேவைப்படுவது என்று தான் எனக்கு அர்த்தம். நமக்கும் ஜனவரி 1க்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது. வெள்ளைக்காரன் போய்விட்டாலும் இன்னும் நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ப்ராரப்தம்.
அந்த கால வெள்ளைக்காரர்கள் ஜூலியன் காலண்டர் ரோமன் காலண்டர்கள் உபயோகப்படுத்தி ஜனவரி 1ல் இருந்து வருஷத்தை எண்ணினார்கள்.
ஏற்கனவே இருந்த பழைய கிராமத்தின் பெயரை மறைத்து கே கே நகர் அண்ணாநகர் என்று பெயர் மாற்றி அழைப்பது போல் இது நமக்கு ஒரு கனவு மாற்றம். .
புது வருஷம் என்பது அவரவர் நம்பிக்கையில் முன்னோர் வழக்கப்படி கொண்டாடுவது. வெள்ளைக்காரர்களை நாம் ஏன் முன்னோர்களாக கொண்டு அவர்க
ள் பழக்கத்தை பின்பற்றவேண்டும். நாம் கூப்பிடாமலேயே வந்து நம்மை ஆண்டு அவர்கள் பழக்க வழக்கங்களை திணித்து அதற்கு பதிலாக நமது செல்வங்களை வாரி அள்ளி கொண்டுசென்றவர்களின் புது வருஷம் நமக்கு எதற்கு.ஏன் அன்று விடுமுறை?நம்மை போன்ற பெரிய தேசம் சீனாவில் அவர்கள் புது வருஷம் ஜனவரி 1 அல்ல. சின்ன தேசம் வியெட்னாமிலும் திபெத்திலும் கூட ஜனவரி 1 புதுவருஷம் இல்லை.ஈரானில் நவ்ரோஸ் புதுவருஷம் ஜனவரியில் இல்லை.பாலி தீவு காரர்கள் கூட புத்துவருஷம் மார்ச்சிலிருந்து எப்போதோ ஆரம்பிக்கிறார்கள். நமக்கு சித்திரை ஏப்ரலில் இருந்து ஆரம்பம்.நமது தேசத்திலேயே கன்னட, தெலுங்கு புது வருஷம் அப்போது தான் வரும். காஷ்மீர்கார்கள் அப்போது தான் புது வருஷம் தொடங்குகிறார்கள்.மஹாராஷ்ட்ரா குடி பட்வா, கோவாவில் சன்ஸ்கார் பட்வா , சிந்திக்கார்களுக்கு எல்லாம் கூட மார்ச் ஏப்ரலில் தான் புதுவருஷம்.பஞ்சாபில் ஏப்ரல் தான் .. வைசாகி நானக்சஹி காலண்டர் அப்போது தான் புதுவருஷம் காட்டும். நேபாளத்திலும் அப்படியே

இந்தியாவின் பல பாகங்களை, உலகின் பல நாட்டு பழக்கங்களை பற்றி இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். எதுவுமே ஜனவரி 1ல் புதுவருஷம் ஆரம்பிப்பதில்லை.
நாம் இங்கிலீஷிலேயே பேசுகிறோம், அவனை அனுப்பிவிட்டு அவன் பழக்கங்களை வழக்கங்களை வைத்துக்கொண்டிருக்கும் வரை ஜனவரி 1 ஒரு கனவு புதுவருஷம் நமக்கு.
No comments:
Post a Comment