Friday, December 20, 2019

BACK PAIN



முதுகுவலி  J K SIVAN


முத்துசாமிக்கு  முதுகு சாமி என்று பெயர்.  எப்போதும் முதுகு வலிக்கிறது என்பான். ஆபிசில் எப்போதும் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பான். குனிந்தால் முதுகு வலி என்று ஒரு பெரிய  பலகையை  நாற்காலியின் ரெண்டு கைகள்  மேல் பரத்திக் கொண்டு  நாற்காலியில் சாய்ந்து கொண்டே எழுதுபவன். அப்படியே தூங்கியும் போவான். யாரும் அவனை கண்டு கொள்வதில்லை.

முதுகுவலி மட்டுமில்லை, கால் கடைசிவிரல் நகம் கொஞ்சம் பெயர்ந்தாலும் போதும். உடல் முழுதும் வலிக்கும்.  என்ன ஒற்றுமை இந்த உடம்புக்கு. பல்வலி, கண்வலி, காதுவலி, மூட்டுவலி, தலைவலி, வயிற்றுவலி  சகலமும் ஒன்று வந்தால் போதும்.  உடம்பை ஒரு  வேலையும் செய்ய விடாது
நேராக  சிப்பாய் போல் உட்கார்ந்தால் முதுகு வலிக்காது.  கூன் போட்டு உட்கார்ந்தால் , குனிந்து உட்கார்ந்தால்  தான் வலிக்கும்.  அப்பப்போ கொஞ்சம்  எழுந்து நின்றால் சுகமாக இருக்கும். 

அதிக பளுவை தூக்கினாலும் முதுகு வலி மட்டும் அல்ல. தோளிலும்  பந்துக்கிண்ண மூட்டு கழன்றுவிடும். நான் சொல்வது  முக்கியமாக  என் போன்ற  கிழங்களுக்கு . இடுப்பு சுளுக்கிக் கொள்ளும்.  பளு தூக்குவதால் இந்த வலி என்று சொல்வதை விட, எப்படி தூக்கினால் இந்த வலி வராது என்று புரிந்து  கொள்ளவேண்டும்.  தூக்கவேண்டிய  தண்ணீர் பக்கெட், அல்லது கனமான வஸ்து அருகே சென்று முழங்காலை மடக்கி  காலுக்கு பலம் கொடுத்து தூக்கினால் முதுகு இடுப்பு, கைக்கு கொஞ்சம்  ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரெட்டை  நாடி சரீரங்களுக்கு  முதுகுவலி வருவது சகஜம்.  உடலில்  பளு அதிகமானால் அது முதுகுக்கு ஒரு சுமை.  நம்ப வெயிட்டை நம்ம முதுகு   தாங்க  கஷ்டப்படுதுன்னு  அர்த்தம்.   ஒல்லி  ஆட்கள் கொடுத்து வைத்த வர்கள். இந்த தொந்தரவு இல்லை. முதுகு வலிக்கு எத்தனையோ காரணங்கள்.  முதுகிலே அடிபட்டா நிச்சயம் வலிக்கும் . அதுக்கு இதைப்  படிச்சா போதாது. டாக்டருக்கு அழ வேண்டி யதை  தந்தே  ஆகணும்.

கோனமாணா என்று படுத்தாலும் முதுகு வலி வரும். ஜாக்கிரதை.  ஒரே பக்கம்  ரொம்ப நேரம் படுக்க கூடாது.  மெத்தை ஏதோ சீப்பா கிடைச்சுதுன்னு அலைஅலையா இருப்பதை வாங்கி அதன் மேல் படுத்தாலும் முதுகு வலி வரும். கட்டை படுக்கை நல்லது.  நாங்க எல்லாம்  பெஞ்சில் படுத்தவங்க சார். 

 தலைகாணி  ரெண்டு மூன்று என்று அடுக்கி வைத்துக்கொண்டு படுத்தாலும்  முதுகுத் தண்டு கஷ்டப்படும்.  கஷ்டபடுத்தும். வெறும்  இடது கையை தலைக்கு  மடித்து வைத்துக் கொண்டு படுப்பதில் உள்ள சுகம் எந்த தலையணையிலும்  கிடைக்காது.

தினமும்  சின்னதாக  ஏதாவது குனிந்து நிமிர்ந்து கழுத்தை சுற்றி ஆமாம் சாமி  போட்டு பழகவேண்டும். வேகம் கூடாது. மெதுவாக. முதுகை நிமிர்த்தி  மூச்சை   உள்ளிழுத்து  சீராக வெளி விட்டு கொஞ்ச நிமிஷம்  பண்ணால்  நல்லது.ஆகு பஞ்சர் என்று மெல்லிசு  ஊசியால் நறுக் நறுக் என்று குத்தி வலியை குறைக்கி றார்கள். அது ஒரு சுகமான நிவாரணி.தரையில் பாயில் படுக்கும் பழக்கம் மறைந்து விட்டது. அது ரொம்ப நல்லது.  நல்லதை எல்லாம் நாம்  தொலைத்து விடுகிறோம். 

இதெல்லாம் மீறியும்  வலி இருந்துகொண்டே இருந்தால்  டாக்டருக்கு   சேர வேண்டிய பணத்தை  நீங்கள் ஏன்  வைத்திருக்க வேண்டும்? அது தப்பில்லையா. உடனே போய் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்து  ஆவென்று வாயை திறக்க சொன்னால்  திறக்கலாம். வலிக்கும் முதுகிலே  ஒரு ஊசியால் குத்தினாலும் பொறுத்துக் கொள்ளவேண்டியது தான். 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...