Saturday, October 31, 2020

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் J K SIVAN

ஆசார்யாளும் அரியக்குடியும். 5

தேவகோட்டையில் அந்த பழைய சிறிய வீட்டின் பின்புறம் இவ்வளவு கூட்டமா? எவ்வளவு நிசப்தம். பெரியவா அந்த குறுகிய அறையில் உள்ளே இருக்கிறார். ஜன்னல் வழியாக பேசுகிறார். வெளியே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கைகட்டி அமர்ந்திருக்கிறார். அந்த இடத்தில் தான் அவ்வளவு கூட்டமும். பெரியவா தைல தாரை போல முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வாழ்க்கையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். கையில் எந்த குறிப்பும் இல்லை. எல்லாம் மனசிலே எப்போதும் இருக்கும் ஒரே மஹான்.
''அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்றேன். ஒரு தீபாவளி நாளில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் தேகவியோகம் அடைந்தார். தீபாவளிக்கு ஆறாவது நாள் தான் ஸ்கந்த சஷ்டி இல்லையா?. முருக பக்தர்கள் தீபாவளி அன்னிலேருந்தே, அடுத்த ஆறுநாளும் உபவாசம் இருப்பா. என்ன ஆச்சர்யம் பாருங்கோ! முத்துஸ்வாமி தீக்ஷிதர் வாழ்க்கையில் அவர் மரணமும் கூட சுப்ரமண்யன் சம்பந்தப்பட்டிருக்கு.
தீக்ஷிதரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு க்ஷேத்ரமா போவார்னு சொன்னேனே. அங்கே எல்லாம் என்ன கோவில் இருக்கோ, விக்னேஸ்வரரோ, விஷ்ணுவோ, தேவியோ, சிவனோ, யாரா இருந்தாலும் சந்நிதிலே அமர்ந்து ஒரு க்ரிதி இயற்றி பாடிட்டு தான் வெளியே வருவார். தானாகவே அந்த க்ரிதி அங்கே உருவாகும். ஒவ்வொரு க்ரிதியிலும் எங்கே அதை இயற்றினார்னு அடையாளம் காட்டுவார். சுவாமி பேர், க்ஷேத்ரம் பேர், அங்கே உள்ள புராண சரித்ர சம்பந்தம், சுவாமி பற்றிய யந்த்ர மந்த்ர ரஹஸ்யம். எல்லாம் அதிலே கோடி காட்டுவார்.
இந்த ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே க்ரிதியிலே, அப்படி உள்ளே எந்த ரஹஸ்யமும் ஏன் தெரியலே? எங்கே இயற்றினார்? ஒருவேளை எல்லா இடத்திலேயும் இருக்கும் சுப்ரமண்யன்களை ஒருமைப் படுத்தி இதை இயற்றியிருப்பாரோ. அதனாலே தான் குறிப்பாக ஒரு க்ஷேத்ரத்தை சொல்லவில்லையோ? அது எப்படி புலப்படறது?
நிறைய நமஸ்தே சொல்லிட்டு ''மனஸிஜ கோடி கோடி லாவண்யாய '' என்று நமஸ்தே மாதிரி ரெண்டு ''கோடி'' சொல்றார். கோடியை கோடியாலே பெருக்கினா என்ன வரும்? கோடானு கோடி. மனஸிஜன் என்றால் மன்மதன். மனசிலேருந்து உண்டாகிறவன், காமன். அதாவது பேரன்பு. இதிலே ஒரு புராண கதையும் ஒட்டிண்டு இருக்கு. மஹாவிஷ்ணுவின் பிள்ளை மன்மதன். விஷ்ணு நினைத்த மாத்திரம் அவர் மனசிலே உருவானவன். மகாலட்சுமிக்கு பிறந்தவன் இல்லை. விஷ்ணுவிடமிருந்து தோன்றிய இன்னொருவன் ப்ரம்மா. பரமாத்மா நாபியில் உதித்தவன். மஹா விஷ்ணு அலகிலா விளையாட்டு டையவன் அல்லவா. இது போன்ற அதிசயங்கள் நிறைய உண்டு. மன்மதன் அழகுக்கு பேர் போனவன். ஆகவே தான் சுப்ரமண்யனை '' மனஸிஜனை விட கோடி கோடி தடவை அதிக லாவண்யம்'' உடையவன் என்கிறார் தீக்ஷிதர்.
சுப்ரமணியன் யார்? சிவனின் நேத்ர அக்னியில் பிறந்தவன். அதே நெற்றிக்கண் அக்னியால் மன்மதனை சுட்டெரித்து சாம்பலாக்கினார் . சுப்ரமணியன் ஞானத்தின் வடிவம். இன்னொருவன் காமத்தின் வடிவம். ஞானாக்நியிலிருந்து பிறந்தவன் ஒருபக்கம். அக்னியால் காமமாக இருந்து அழிந்த ஒருவன் இன்னொரு பக்கம். வடக்கே குமார் என்பார்கள். தெற்கே குமரன். குமாரன், பிள்ளை என்ற அர்த்தம். அதனால் தான் சிவனின் இன்னொரு பிள்ளையின் பெயர் பிள்ளையார்.குமார் என்பதை வடக்கே இளைய பிள்ளை என்ற அர்த்தத்தில் உபயோகிப்பார்கள். இளையவன் சுப்ரமண்யனை குமரன், குமாரசாமி என்று பாணின் தெற்கே அழைக்கிறோம். வாலமீகி ராமாயணத்தில் விஸ்வாமித்ரர் ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் சுப்ரமணியன் கதையை சொல்வது தான் குமார சம்பவம். காளிதாசனின் கற்பனையில் பிறந்த அற்புத சமஸ்க்ரிதம் தாண்டவமாடும் படைப்பு.
மன்மதனுக்கு இன்னொரு பெயர் மாரன். சுப்ரமணியன் பெயர் குமாரன். தீக்ஷிதர் குமாரனை மனஸிஜ கோடி கோடி லாவண்யன் என்று க்ரிதியில் சொல்கிறார். தமிழில் முருகு என்றால் அழகு, அழகனாக இருப்பவன் முருகன். மன்மதன் சாம்பலான பிறகு அவனது கரும்பு வில்லை, மலரம்புகளை அம்பாள் எடுத்துக்கொண்டு அவனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அவளுக்கு காமேஸ்வரி என்றும் ஒரு பெயர்.நெருப்பு பொறியில் இறந்த ஒரு அழகன் அதே நெருப்பு பொறியில் இன்னொரு அதிக அழகுள்ள மகனாக பிறக்கிறான். காமமாக இருந்து அக்னியில் அழிந்து அது ஞானமாக பிறந்தவன் . அம்பாள் அழகானவள் என்பதால் அவளைப் போல் மூன்று லோகங்களிலும் அழகி இல்லை என்ற அர்த்தத்தில் திரிபுர சுந்தரி என்றும் அவளுக்கு ஒரு பெயர்.
அடுத்தது தீக்ஷிதர் இந்த பாட்டில் ''தீன சரண்யாய'' என்கிறாரே அதற்கு என்ன அர்த்தம்? அழகு மட்டும் இருத்தால் போதுமா, அருளும் பேரன்பும் கருணையும் அமோகமாக இருக்கவேண்டாமா?நமக்கு அருள் தானே வேண்டும்.? தீனர்களாகிய, துன்பத்தில் வாடும், ஏழைகள், கதியற்றவர்கள், எளியோர்கள் நாம் அவனைச் சரணடைந்து சுகம் பெற, இன்பமுற, அருள்புரிபவன். நமக்கு அடைக்கலம் தருபவன்.
சுப்ரம ''ண்யாய'' சர' 'ண்யாய'' என்று முடிவில் எதுகை மோனை போல் வருகிறதே. இதை ''அந்தியபிராஸம் '' என்பார்கள். பாடும்போது இந்த இடத்தை சொளக்க காலத்தில், விளம்ப காலத்தில் மெதுவாக, மிருதுவாக எடுக்கிறார். ராகத்தை நிரவல் செய்ய, அலச,, சௌகர்யம். தீக்ஷிதர் கிருதிகள் வித்வான்களுக்கு பாட லட்டு மாதிரி. வார்த்தைகள் கம்பீரமாக பிரயோகமாகும். பாடும்போது கேட்பவர்களுக்கு ஒரு யானை அட்டகாசமாக மெஜஸ்டிக் majestic க்காக ஊர்வலம் நடந்து வருவது போல் இருக்கும்.
அடுத்து மகா பெரியவா அரியக்குடி ராமாநுஜய்யங்காருக்கு சொல்வது போல் நமக்கெல்லாம் அடுத்த வரிகளை விளக்குகிறார்.
''பூசுராதி சமஸ்தாசன பூஜிதாப் ஜ சரணாய
வாசுகி தக்ஷாதி சர்ப்ப ஸ்வரூப தரணாய
வாசுவாதி சகலதேவ வந்திதாய, வரேண்யாய
தாச நாபீஷ்ட ப்ரதக்ஷதராக்ரகண்யாய ,,,
நாம் எல்லோருமே அவசரக் குடுக்கைகள். மனசாலும் தேகத்தாலும் தான் சொல்கிறேன். சில சமயம் இப்படி யாராவது இப்படி ஸ்லோவாக slow வாக, மெதுவாக பாடும்போது நெளிவோம். கொட்டாவி விடுவோம். இதை அறிந்து தான் தீக்ஷிதர் கடகடவென்று மெயில் வேகத்தில் அடுத்து சில அக்ஷரங்களை அமைத்திருக்கிறார். சவுக்க காலத்திலிருந்து மத்யம காலம் காலத்தில் நுழைகிறார். இனிப்பு லட்டுக்கு இடையே கருப்பாக ஆணி போல் லவங்கம் இருக்குமே அது போல. இனிப்புக்கு ருசி கூட்ட. இந்த க்ரிதியில் பல்லவியும் சரணமும் முடிகிறபோது மத்யம காலத்தில் அமைக்கிறார். தீக்ஷிதரின் வேறு சில கிருதிகளில் அனுபல்லவி, சரணம் கடைசியில் தான் மத்யம காலம் அமைந்திருக்கும். ஏன் இதில் மட்டும் இப்படி ?
தெரிந்துகொள்ள மஹா பெரியவா சொல்வதை அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

PESUM DEIVAM


 பேசும் தெய்வம் J K SIVAN


ஆசார்யாளும் அரியக்குடியும். 4

இந்த பாரத தேசத்தில் பிறந்து அதிக புண்யம் பண்ணவர்களை எல்லாம் ஒன்றாக கட்டிக் கொண்டுவா என்று தர்மராஜன் ஒரு கட்டளை இட்டான் என்றால் அதை நிறைவேற்றுவது நிச்சயம் ரொம்ப ரொம்ப முடியாத காரியம். ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் அது சுலபமான வேலை. துளி கூட கஷ்டமே இல்லை. ஆமாம். அன்று ஒருநாள் சாயங்காலம் தேவ கோட்டையில் ஒரு சிறிய வீட்டின் பின்புறம் இருந்தவர்கள் அத்தனைபேரும் யாரும் பண்ணாத புண்யம் பண்ணவர்கள். மஹா பெரியவா நடுநடுவே பாடிப் பேசியபடி, ஒரு சிறந்த முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ரிதியை அரியக்குடி ராமாநுஜய்யங்காரை விட்டு காம்போதி ராகத்தில் பாட வைத்ததை நேரில் கேட்டார்கள் பாருங்கள் அவர்கள் தான் அந்த அதிக புண்யசாலிகள்.

மஹா பெரியவா அர்த்தம் சொல்லிக் கொண்டே வருகிறார்:

''வேத மந்த்ரங்கள் சொல்வதில் முக்கிய விஷயம் என்ன? அக்னியை உபாசிப்பது. சுப்ரமணிய சுவாமி தான் அக்னிஸ்வரூபம். சிவனின் நெற்றிக்கண் நெருப்புப் பொறி களில் இருந்து உருவானவர். திரிபுரமெரித்த தீயின் ஜ்வாலை. ஆறு பொறிகளால் சிவனின் நேத்ராக்னியால் உருவானவர். ஆகவே, சுப்பிரமணியன் வேதங்களின் தலைவன், தேவன், அப்பனுக்கே பிரணவ மந்திரத்தை பாடம் சொன்ன சுப்பையா .

ஆதி சங்கரரின் ''சுப்ரமணிய புஜங்கத்தில், ''மஹீதேவ தேவம், மஹா வேத பாவம்,'' (bha ) என்று வரும். மஹீதேவா என்றால் பிராம் மணர்கள். மஹீதேவதேவம் என்றால் பிராமணர்களின் தெய்வம். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் கூட ஒரு இடத்தில் முருகனின் ஆறுமுகம் ஒவ்வொன்றும் பக்தனின் வித விதமான ஆசைகளை, வேண்டுதலை நிறைவேற்றும் என்று சொல்கிறார். ''ஒருமுகம் மந்த்ர விதியின் மரபுளி வாழா அந்தணர் வேள்வியோர்க் கும்மே'' .

திருவேரகம் எனும் சுவாமிமலையில் பண்டிதர் கள், அக்னி ஹோம யஞங்களை சுப்ரமண்ய னுக்கு பண்ணுகிறார்கள். வேதம் ஓதி இப்படி ஒரு யஞ கர்மா பண்ணுபவன் தான் ரித்விக். 16 விதமான ரித்விக் குகள் இருக்கிறார்களே அதில் ஒருவன் ஸ்ரீ சுப்ர மணியன்.

சங்கீத மும்மணிகள், திரிமூர்த்திகளில் ஒருவ ரான முத்து சுவாமி தீக்ஷிதர் சுப்ர மணிய பக்தர். ஆதி சங்கரரைப் போலவே இவரும் பல க்ஷேத்ரங் களுக்கு சென்று சுவாமி மேல் பாடியவர். தேவி உபாசகர். தீக்ஷித ருடைய கடைசி க்ரிதி ஞாபகம் இருக்கிறதா? '' ''மீன லோசனி பாச ''.... என்று மதுரை மீனாட்சி அம்மன் மேல் தியானத்தோடு மறைந்தவர். பிறந்தது வளர்ந்தது கிருதிகள் இயற்றியது எல்லாம் சுப்ரமணியன் சம்பந்தப் பட்டவை. அவர் பேரே முத்துசாமி. முத்துக்குமாரசுவாமி சுப்பிரமணியன் பெயர் அல்லவா?.
வைத்தீஸ்வரன் கோவிலில் அற்புத மான சந்நிதி கொண்டவன். தீக்ஷிதருக்கு அந்த பெயர் வந்த காரணம் என்ன தெரியுமா? தீக்ஷிதர் அப்பா ராமஸ்வாமி சாஸ்திரிகள் ஸ்ரீ வித்யா உபாஸகர் . நாற்பது வயதாகியும் புத்ர பாக்யம் இல்லாமல் சோகம். வைத்தீஸ்வரன் கோவில் வந்து, தம்பதிகள் பக்தி ஸ்ரத்தையோடு 45 நாள் விரதம் இருந்தனர்.ராமஸ்வாமி சாஸ்த்ரிகளின் மனைவி கனவில் வயதான ஒரு சுமங்கலி அவள் வயிற்றில் மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு தாம்பூல மங்கள வஸ்துக்களை முடிந்து விடுகிறாள். ஏதோ ஒரு ஒளி அவள் கருப்பையில் குடியேறு கிறது. உரிய காலத்தில் பங்குனி க்ரித்திகையில் வைத்டீஸ்வரன் கோவில் முத்துகுமாரஸ்வாமி முத்துஸ்வாமியாக பிறக்கிறான். ஸ்ரீ வித்யா உபாசனை அப்பியாசம் பெறுகிறான். சங்கீதம் கற்கிறான். காசி யில் குருகுல வாசம். தேக வியோகம் அடையும் முன் முத்துசாமியின் குரு,

''நீ தெற்கே போ. முதலில் திருத்தணி சுப்ர
மணியனை நமஸ்கரித்து வணங்கு. அவன் உன் வாழ்க்கையை அப்புறம் எப்படி நடக்க வேண்டும் என்று வழி நடத்துவான் '' என்கிறார்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் திருத்தணி சென்றார். கோவில் புஷ்கரணியில் ஸ்னானம் செய்தார். மலை ஏறும்போது எதிரே ஒரு வயதான முதியவர் ''முத்துசாமி இங்கே வா'' என்று கூப்பிடுகிறார். அவரை அணுகி வணங்கிய முத்துஸ்வாமியி்ன் வாயில் ஒரு கல்கண்டை போட்டுவிட்டு ஆசிர்வதித்து கிழவர் மறைகி றார் '' வந்தது யார் என்று முத்துஸ்வாமிக்கு புரிந்து விட்டது. அந்த கணம் முதல் கல்கண்டு போல் இனிமையான சாஹித்யங்கள் அவரிட மிருந்து புறப்பட்டது.
அந்த க்ஷேத்ரத்திலேயே எட்டு கிருதிகள். எட்டு வேற்றுமைகளில் வழங்கினார்.

அவரது ஒவ்வொரு க்ரிதியிலும் ''குரு குஹ'' என்று வரும். அது மாதிரி வரும் பாடல்கள் முத்து சாமி தீக்ஷிதர் இயற்றியவை என அடையாளம். ''முத்திரை'' என்று சொல்வது. குகன் குகையில் இருக்கிறான் என்று அர்த்தம். குகை மனம். நெஞ்ச குகையில் வீற்றிருக்கும் குகன் சுப்ரமணியன்.''


மஹா பெரியவா முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றி, அவர் கீர்த்தனை ''சுப்ரமண்யாய நமஸ்தே'' பற்றி அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம் சொல்லியதை மேற்கொண்டு அறிவோம்.

Friday, October 30, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்      J K  SIVAN  

                                      
     ஆசார்யாளும்  அரியக்குடியும்.  3

''மஹா  பெரியவாளால்  எப்படி  சின்ன சின்ன  விஷயங்களைக் கூட  கவனமாகப்  பார்த்து பரிசீலனை செய்ய முடிகிறது என்பது உலக அதிசயம். அவரது ஞாபக சக்தியும், தெளிந்த சிந்தனைகளும் எத்தனையோ  பிரச்னைகளுக்கு  தீர்வாக , கேள்விகளுக்கு சரியான பதிலாக அமைந்து பலபேர் வாழ்க்கையில் மலர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

மஹா பெரியவா  சங்கீதத்தைப் பற்றி  அரியக் குடி ராமானுஜ ஐயங்காரிடம்  மடை திறந்த வெள்ளம்போல் சொல்லிக்  கொண்டிருக்கிறார்: 

''பழங்காலம் முதல் இப்போது வரை  தேவாரங் களும் , அவற்றைப் பாடும் முறையும், பண்  இசையும் ஓதுவா மூர்த்திகளால் தலைமுறை தலைமுறையாக   பக்தி ஸ்ரத்தையோடு உரிய  ராகத்தில்   கால ப்ரமாணத்தோடு  பாடப் பட்டு,  பாதுகாக்கப்பட்டு இன்றும்    முறை தவறாமல்   நமக்கு  கிடைக்கிறது.  உதாரணமாக  சங்கரா பரணம், நீலாம்பரி, பைரவி  போன்ற ராகங்கள்  பண்  வகையைச் சேர்ந்தவை. அதே போல் தான்   சௌராஷ்ட்ரம், , கேதார கௌளம் , காம்போதி யும்  கூட.   காம்போதிக்கு அக்காலத்தில்  பண்  வகையில் தக்கேசி  என்று பெயர். காம்போதி மேளகர்த்தா ராகம் இல்லை தானே?

''ஆமாம் பெரியவா.  ஹரிகாம்போதி  மேள  கர்த்தா ராகம்.  காம்போதி  அதன் ஜன்ய ராகம். இருந்தாலும்  காம்போதி பிரபலம்.  அப்பாவை விட பிள்ளை  பேரும்  புகழும் வாய்த்தவன், பிரபலமானவன் போல '' என்கிறார்  அரியக்குடி.

''ஓஹோ.  அப்போது  வேறே சில  ஜன்ய ராகங்க ளும் இப்படி பிரபலமாக இருக்கிறதா. சொல்?''   என ஆர்வமாக கேட்கிறார் பெரியவா.

''ஆமாம்  பெரியவா,  நடபைரவியின் ஜன்யராகம் பைரவி என்றாலும் பைரவி பிரபலமான ராகம். .

''ஆஹா  உன்னோடு பேசும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.  சரி நேரத்தை நான் வீணடித்துக் கொண்டிருக்கிறேனே. நீ பாடு கேட்போம். உன்னைக் கூப்பிட்டதே  பாடத்தானே.''

அற்புதமாக ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே  கீர்த்தனையை  அய்யங்கார்  பாடினார்.  ஒரு அபூர்வமான  பாடல் அது.   சுருதி பெட்டியோ , தாள  பக்க வாத்யமோ எதுவும் இல்லாமலே வெளுத்து வாங்கிவிட்டார்.  கண்களை மூடிக் கொண்டு தன்னை மறந்து  அரியக்குடியின்  காம்போதியில் லயித்துப் போய்விட்டார்  மஹா பெரியவா. 

''என்ன ஆச்சர்யம் பார்த்தாயா,   தம்புரா,  பக்க வாத்யம் எதுவுமேயில்லாமல்  நீ  முழு கீர்த்தனை யையும்  உன் அற்புதக் குரலில் ஒலி  பெருக்கி போன்ற  மிஷின்கள் எதுவும் மில்லாமல்   முழுதும் வெறும்  ராகம் பாவம், தாள அர்த்தத் தோடு  தூய்மையாக, முழு  அழகோடு,  நான் கேட்க எவ்வளவு அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறேன்'' அக்ஷரங்கள் ஸ்படிகம் பாதிரி பளிச்சென்று இருந்தது.   வார்த்தை புரிந்தது.  சந்தோஷமாக சொல்கிறேன்  '' திருப்தோஸ்மி''   எனக்கு  ரொம்ப

திருப்தி.   

இன்னொரு தடவை பாடு.   எதுக்கு ரெண்டாம் தடவை கேட்கிறேன் தெரியுமா? 

 ஒவ்வொரு வரி நீ பாடும்போதும்   நான் அதை  நிறுத்தி  அதன் அர்த்தம் சொல்லப்போகிறேன்.   உனக்கு அர்த்தம் தெரியாது என்று  நான் நினைக்
கலே,  அதற்காக இல்லை.  என் மனதை  முத்து ஸ்வாமி தீக்ஷிதர் மனசோடு இணைத்து அதை இயற்றும்போது   அந்த ஒவ்வொரு பொருத்தமான  சொல் கட்டு,  வார்த்தைக்  கோர்வை அழகில் அவர் மனநிலை எப்படி சந்தோஷப்பட்டு  இருந்திருக்கும்னு  ரசித்து மகிழ.  ஓர்   பெரிய  ஈடற்ற சங்கீத மூர்த்தியின்  க்ரிதியை ,  பகவான்  அனுக்கிரஹம் பெற்றவரின்  கீர்த்தனையின் உன்னத அர்த்தத்தை  மற்றவர்களும் புரிந்து கொண்டு அனுபவிக்கட்டும்  என்று தான். 

அரியக்குடி இன்னொரு தடவை  ''ஸ்ரீ சுப்ரமண் யாய ''   பாடினார்.  இந்த முறை ஒவ்வொரு வரியாக  பாடி  நிறுத்தினார்.  

இனி வரப்போவது தான் நமக்கு  விருந்து.  மஹா பெரியவா ஒவ்வொரு வரிக்கும் சொன்ன அர்த்தம். 

''ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே  என்றால் முருக பெருமானை வணங்குவது என்று புரியும் அல்லவா.  பக்தி மரியாதையோடு  ''ஸ்ரீ''  என்று  ஆரம்பித்து  முருகனை  வணங்குகிறார் தீக்ஷிதர்.  நமஸ்தே  என்று ஒரு முறைக்கு மேல் சொல்வது  நம் ரஜனி சொல்வது போல் ஒருதடவை சொன் னால் நூறு தடவை சொல்வது போல் என்று சந்தோஷமாக முருகனை பலமுறை  மனமார  நமஸ்கரிப்பது என்று எடுத்துக் கொள்வோம்.  ஆலயங்களில்  அதனால் தான்  ''போற்றி போற்றி'' என்று ஒருதடவைக்கு மேல் சொல்கிறார்கள்.  ''ஜய  ஜய''  ''ஹர  ஹர ''  சங்கரா என்று சொல்வ தில்லையா? ப்ரம்ம சூத்ரத்திலும் கூட  ஒரு வாக்கியம் முடியும்போது  ரெண்டு தடவை வார்த்தைகள் வரும்.

''நமஸ்தே  :   ''தே''   :  உன்னை    ''நம'' :  வணங்கு கிறேன்.  நம: தே :  என்பது நமஸ்தே  ஆகிறது. (நாலாம் வேற்றுமை உருபு)

யார் இந்த சுப்ரமணியன்?  யோசியுங்கள்.   உண்மை யான  நன்றாக கற்றறிந்த  ''ப்ரம்ம'' ண்யன்.   ப்ரம்மா என்றால்  என்றால் பிரம்மத்தை அறிந்தவன்,  உண்மையான கலப்படமற்ற  பரமாத்ம  ஸ்வரூபம்.   இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ''வேதம்''  என்றும்  சொல்லப் படுகி றது.  உத்தமமானது. ஸ்ரேஷ்டமானது.  குழந்தை
களுக்கு பூணல் போடுகிறோம், உபநய னம் .  மிக சக்தி வாய்ந்த  காயத்ரி மந்திரத்தை  ஆசார்யன், பிதா இருவரும் உபதேசிப்பதை '' ப்ரம்மோப தேசம்''  என்கிறார்கள்.   பிரம்மத்தை அறிந்து, புரிந்துகொண்டு, அதன் வழியில் நடப்பவன் தான்  ''ப்ரம்மச்   சாரி''  பிராமணர்கள் வேதத்தை  தவறின்றி ஓதுபவர்கள்.  சுப்ரமம்ண்யன் என்ப வன் தெய்வீகன், வேதத்தின்  நாதன், பிரம்மத்தை போற்றி பின்பற்றுபவன் அதன் தெய்வம்.''

இன்னும் இருக்கிறது. நீளமாக போய்விடுவதால்  அடுத்த கட்டுரையில் தொடர்வோம். சந்திப் போம்..

PESUM DEIVAM


 பேசும் தெய்வம்       J K SIVAN  



            ஆசார்யாளும்  அரியக்குடியும்.   2

எப்படித்தான்   அந்த   சிறிய கிராமத்தில்  செய்தி வேகமாக பரவியதோ தெரியவில்லை.  சங்கீத சக்ரவர்த்தி என்று கொடி  கட்டி பறக்கும் ஸ்ரீ அரியக்குடி ராமாநுஜய்யங்கார்  மஹா பெரிய வாளை பார்க்க வந்திருக்கிறார்,  பாடப் போகி றார்......   அந்த சிறிய  வீட்டின் பின்புறம் நிற்க இடமில்லை.  ஜன்னலுக்கு வெளியே  அரியக்குடி  உள்ளே  பெரியவாளுமாக   சங்கீத சம்பாஷணை.  பெரியவா சொல்கிறார்: 
 
"என்னுடைய  தரம்பாரிலே  ரத்ன கம்பளம், சௌகரியமான ஆசனங்கள், பங்கா விசிறி எல்லாம் எதுவுமே கிடையாது.  இங்கே  வெறும் கல்லும்  முள்ளும் காட்டு செடிகளும் கட்டாந் தரையும்  தான்.  உனக்கு பக்க வாத்யம் எதுவும்  இங்கே ஏற்பாடு பண்ணலை  ஒலி பெருக்கி எதுவும் கிடையாது.  ஸ்ருதி  பெட்டி கூட  இல்லை. ஆனால்  நிரடலான அந்த  காம்போதி ராக க்ரிதி யை நீ பாடணும்.   மற்றதெல்லாம் இல்லாட் டாலும் லக்ஷியம் பண்ணாம  எனக்காக பாடணும்.''

அரியக்குடி கண்களில் நீர் தாரை  தாரையாக  வழிந்தது.  அப்படியே  விழுந்து    வணங்கினார் . 

''பெரியவா உங்களுக்கு  முன்னாலே  பாடறேனே  அந்த பெருமை, கிடைக்க முடியாத பாக்யம் ஒண்ணே  போறும்.  எவ்வளவு  பெரிய மனசோடு, பெருந் தன்மையோடு, என்னை மதிச்சு, கௌர விச்சு, கூப்பிட்டு  பாட சொல்றீர்கள். எனக்கு நன்றி சொல்ல வார்த்தையே தெரியவில்லை, என்னையும் ஒரு பொருட்டா மதிச்சு இந்த  வாய்ப்பு  கொடுத்தீர்கள். என்ன கைம்மாறு செய்வேன்?''  பெரியவாளுடைய  அருள் தான் எனக்கு ஸ்ருதி , பக்க வாத்தியம்  எல்லாம்,  அது தான் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு என்னை பாடவைக்கணும்'' அய்யங்கார்  தொண்டையை  கனைத்து பாட தயாரானார்.

''இந்த க்ரிதி காம்போதியில் பாடறது ன்னு சொல்றா.   ஆனால்  புஸ்தங்கங்களில்  காம்போஜி ன்னு போட்டிருக்கு இல்லையா?''

''ஆமாம்  பெரியவா''

''அதுக்கும் ஒரு காரணம் இருக்கணும்.  காம்போ ஜம் என்கிற தேசம்  இப்போது கம்போடியா,  தென்கிழக்கு ஆசியாவிலே இருக்கு.  அங்கே  நமது பாரத தேச பண்பாடு,  நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இன்னும் இருக்கு.  வெகு காலமாக வேரூன்றி இருக்கு.    காம்போஜத்திலே இருந்து வந்த ராகமா  காம்போஜி?ன்னு கேட்டா  சங்கீத சாஸ்திரிகள்,  விற்பன்னர்கள்,  நம்ப ப்ரொபஸர்  புலுசு சாம்பமூர்த்தி மாதிரி இருக்கி றவா  அப்படி இல்லேங்கிறா. காம்போஜ காரா கிட்டே இருந்து நாம் எதையும்  இங்கே  கொண்டு வராவிட்டாலும் அவர்கள் நம்மிடமிருந்து  நிறைய விஷயம்  எடுத்துண்டு  போயிருக்கலாம்.  அதுவும் சங்கீதத்தில்  நாம் மற்றவர்கள் கிட்டே இருந்து  தெரிஞ்சுக்க  ஒண்ணுமே இல்லை. 

காம்போஜத்திலிருந்து   நாட்டுப்பாடல் ஏதாவது  ஜன ரஞ்சகமாக இருந்திருக்கலாம். அதை காம்போஜி ன்னு சொல்லி இருக்கலாம். அந்த மெட்டில்  இந்த கீர்த்தனையை அமைச்சிருக் கலாம்.   
இன்னொரு விஷயம் தெரியுமோ?  நமது தேசத் துக்கு வடக்கு பாகத்திலேயே  ஒரு காம்போ ஜம் இருந்திருக்கு. காளிதாசனுக்கு  தெரியாத விஷயமே இல்லை.    ''மேக  சந்தேச'' த்திலே 

 ''அடே யக்ஷனே, நீ இப்படிப்போ  அப்படிப்போ என்று ரூட் போட்டு கொடுக்கிறான். அதிலே காம்போஜத்திற்கு வழியும் சொல்றான்.   அதே  மாதிரி  ''ரகுவம்சத்தி'' லேயும்  காம்போஜம் பத்தி வருது.  சிந்து நதிக்கு அப்பாலே  ஹிமாசலத்திலே இருக்கு என்கிறான்.   அகண்ட பாரதத்தில்  காம்போ ஜம் ஒரு பாகமா இருந்திருக்கு.   ஹிந்து குஷ் மலைகள் பக்கம் ஒரு காம்போஜம் இருக்கு.   நம்ம காம்போதி  ராகம்  அங்கிருந்து வந்ததோ என்னவோ?  நிறைய  ராகங்களுக்கு   அந்தந்த பிரதேசத்திலே  உண்டானது போல்  அதன் பேரே கொடுத்திருக்கு.   உதாரணமா,  சௌராஷ்ட்ரம்,   கன்னடா,  நவரஸ  கன்னடா , சிந்து  பைரவி., யமுனா கல்யாணி,  இன்னும் எத்தனையோ.  காம்போஜத்திலிருந்து அதனாலே காம்போஜி என்கிற  காம்போதி வந்திருக்கலாம்.   ஆராய்ச் சியாளர்கள்  மோஹனம் காம்போஜி  எல்லாம்  பழங்கால ராகங்கள்  என்கிறா.  காலவெள்ளத்தில் அந்த ராகங்கள் புதுப்புது  பாலிஷ் போட்டு ண்டி ருக்கு.

கேதாரம் அதே போல் கேதாரநாத், கௌளை, கேதார கௌளம்,  எல்லாம் கௌடர்கள் சம்பந் தப்பட்டது. வங்காளத்தில்  கௌடர்கள்னு நிறைய பேர்  இருக்காளே. இதெல்லாம்  நமது தென்னிந் திய  கர்நாடக சங்கீதத்தில் எப்படி  நுழைந்தது? அந்தந்த  பிரதேசத்து வித்வான்கள் அந்தந்த ராகத்தில்  ஸ்பெஷலிஸ்ட்கள்  இங்கே வந்து பாடி நம்மவர்களுக்கு  அது  பிடித்துப் போய் இருக்க லாம். ஊர் பேரை வச்சே   வித்வான்கள்  பிரபல மாகிறதும்  உண்டு.  உன்னையே  இப்போ   அரியக்குடி என்று தானே  கூப்பிடறா''

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்  மட்டும் அல்ல. அங்கே  இருந்த அனைவரும்   பெரியவாள் பேசுவதை ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந் தார்கள்.   என்ன திவ்ய  சங்கீத ஞானம்.  மகா பெரியவா  எவ்வளவுஆராய்ச்சி மனதுக்குள்ளே பண்ணி இருக்கார் ராகங்களை பற்றி.  இன்னும் சொல்லாதது எவ்வளவு இருக்கோ?  

''எப்போவாவது நீ பாடுற சங்கீதத்தைப்  பற்றி  ஆராய்ச்சி பன்னதுண்டா?''  ஆர்வம் உண்டா?

''ஆர்வம் உண்டு, ஆராய்ச்சி பண்ற அளவுக்கு  ஞானம் இல்லை பெரியவா''

''இல்லை நீ ஆராய்ச்சி பண்ணி இருக்கே. எனக்கு தெரியும்.  தேவாரம் மாதிரி  பண்  ராகம்  எல்லாம்  திருப்பாவைக்கு  கிடையாது. ஆனால் நீ எவ்வளவு அழகா  அதுக்கு  ராகம்  செட் பண்ணியிருக்கே.  ஆச்சர்யம் திவ்ய பிரபந்தம் பாடறவா  ஒரே விதமான  ஏத்தம் இறக்கம்  ப்ராஸமா  படிப்பா, ஒப்பிப்பா. .  உன் மனோதர்மத்தை யூஸ் பண்ணி  அற்புதமா நீ  ராகங்களை அமைச்சது ரொம்ப நன்னா இருக்கு. 

''ஏதோ என்னாலே  முடிஞ்சதை பண்ணினேன்''

''எல்லா வித்வான்களும் அதையே  பின்பற்றி பாடறா.  தேவாரம் ஒன்றில் தான் நமது பழைய ஒரிஜினல்   பண்  இசை இன்னும் இருக்கு '' 

மேலே  அவர் சொன்னதை, அங்கே நடந்ததை, அடுத்த பதிவில்   கவனிப்போம்.

Thursday, October 29, 2020

HUMAN LIFE


 

இது தான்  தீர்க்காயுஸா?    J K  SIVAN 


மற்ற ஜீவன்களுக்கு எப்படியோ தெரியாது. மனிதர்களுக்கு நீண்ட நாள்  வாழவேண்டும் என்ற ஆசை உள்ளூர இருக்கிறது.  இது ஆரம்பத்தில்  மனிதனை ப்ரம்மா படைத்த திலிருந்தே உண்டு என்று ஒரு  சம்பாஷ ணைக்
 கதை உங்களுக்கு தெரியுமா?

பிரம்மா படைக்கும்  தொழிலில்  படு வேகமாக  ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். ஈ, கொசு, மரம், செடி கொடி, பல்லி , பாம்பு, நாய்  பூனை மனிதன்  என்று பல ஜீவன்களை விடாமல் படைத்துக்கொண்டிருக்கும் நேரம். நாம் பிரமனை அணுகும்போது அவர்  ரொம்ப பிசியாக ஒரு   ஒரு  கழுதையைப்  படைத்துக் கொண்டிருக்கிறார்..

''நான்  யார்  பிரம்ம தேவா?  எனக்கு  என்ன பெயர்? நான்  என்ன செய்யவேண்டும்?''  என்று கழுதை கேட்டது.

'' நீ  இனி  ஒரு கழுதை. உன் வேலை பொதி  சுமப்பது,  காலையிலிருந்து இரவு வரை.  புல்லைத்  தின்பாய். மனிதன் விட்டெறிந்த காகிதம் தின்பாய்.  மூளையில்லை என்று யாரோ யாரையோ திட்டும்போது உன் பேர்  தான் அடிபடும். உனக்கு நான் கொடுத்த  வயது  ஐம்பது வருஷம். சரியா?''

''ஏதோ  நான்  செய்த  கர்மபலன்  கழுதையா கப்  பிறக்க  ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால்  ஐம்பது வருஷம்  ரொம்ப  ஜாஸ்தி. அவ்வளவு வருஷம் கஷ்டம் எனக்கு வேண்டாமே.  கொஞ்சம் குறைத்து  இருபது வருஷமாகச்செய்யேன்.''

''சரி அப்படியே'' என்றார் பிரம்மா.  
அடுத்தது ஒரு  நாய்.  அதனிடம் ''நீ மனிதன்   வீட்டைக்  காப்பாய். ரொம்ப  நல்ல  நண்பனாக இருப்பாய்.கிடைத்தை  உண்பாய்.  நாயே, உனக்கு  நான் கொடுக்கும் வயசு  30 வருஷம்.''

நாய்  கழுதைபேசியதைக் கேட்டுக் கொண்டிருந் ததால் அதுவும் பேரம்  பேசியது. 

'வேண்டாம் ப்ரம்ம தேவா, எனக்கு தாங்காது  முப்பது வருஷம் குலைக்க முடியாது. தாங்காது.   தெருவில்  அல்லல்  பட்டுக்கொண்டு  அவ்வளவு  காலம்  அடியும் உதையும்  பட்டுக்கொண்டு  ஓட எனக்கு  இஷ்டமில்லை.  இவ்வளவு கஷ்டம்  ஏன் கொடுக்கிறாய்.?  பாதியாக குறைத்து  பதினைந்தாக்கிவிடு'' 

 ''சரி, போ. உன் வயதை 15 ஆக்குகிறேன் '

அருகே இருந்து இதெல்லாம் பார்த்துக் கொண்டு  குரங்கு  சும்மா இருக்குமா?. 

''ப்ரம்மதேவா,  நீ கேட்கும் முன்பே  நானே சொல்லிவிடுகிறேன்.  நீ  ஏன் இவ்வளவு கொடுங் கோலனாக இருக்கிறாய்? என்னை இப்படி   ஆட்டம்  ஆடி தாவி குதித்து  வேடிக்கை காட்ட  விட்டுவிட்டாயே.  இதையே இருபது வருஷம்  பண்ணுவது என்பது முடியாத காரியம்.  பண்ணிப் பார்த்தால்  அல்லவோ  உனக்கு  தெரியும்?  ஏதோ என் விதி ஒப்புக்கொள்கிறேன்.  அவர்களைப்போல் எனக்கும்   பாதி வயசாக பண்ணி அனுப்பு .வேறு  வழி?''

''சரி குரங்கே  உன் வயது பத்து வருஷம்... திருப்தியா? ''

.காது கொடுத்து இதெல்லாம்  கேட்டுக் கொண்டி ருந்த, பார்த்துக்கொண்டிருந்த மனிதன் பிரம்மாவுக்கு சல்யூட் அடித்தான்.'

'என்ன சிரிக்கிறாய், உன் குறை என்ன?  உனக்கும்   பாதி வயசாக  மாற்றவேண்டுமா? சீக்கிரம் சொல்'' 

''ஐயய்யோ, அப்படி எல்லாம் பண்ணாதீர்கள்.  ஒரு சின்ன  வேண்டுகோள் ....

'''ஏண்டா  மனிதா, மற்ற ஜீவன்கள் போல் இல்லா மல், உன்னை  அறிவுள்ளவனாக  படித்துள்ளேனே.  இருவது வயதும்  கொடுத்தேனே.   மற்ற  எல்லா  ஜீவன்களையும்  நீ  ஆட்டிப்படைக்கலாமே.  ஏன்  இன்னும் இங்கேயே  வட்டமிடுகிறாய். சட்டு புட்டென்று சொல்லிவிட்டு போ. என்ன  தயங்குகிறாய்?'

'''எனக்கு நீங்கள் கொடுத்த  இருபது வயது  ரொம்ப  குறைச்சல். கொஞ்சம்  கூட்டவேண்டும் என் வயசை.?

''என்னடா  நீ விசித்திரமாக கேட்கிறாய்?  'எப்படி நீயே  சொல்லேன்?'''

'அந்த கழுதைக்கு  நீங்கள்  குறைத்த  30 வருஷம், அதோடு  நாய்க்கு தள்ளுபடி செய்த  15 வருஷம்,  குரங்கு வேண்டாமென்று சொன்ன 10 வருஷம்  எல்லாம்  வீணாக தானே  போகிறது. அவற்றை எல்லாம்  எனக்கு  சேர்த்து  கொடுத்தால்  உங்களுக்கு ஒன்றும்  குறைந்து விடாதே'

'''சரி,  கொடுக்காவிட்டால்  நீ  நகரமாட்டாய்.  எனவே நீ கேட்டபடியே கொடுத்துவிட்டேன்.

''மனிதன் இப்படி சாமர்த்தியமாக  கேட்டுப்  பெற்ற 75 வருஷம்  எப்படி  நடந்தது அதற்கப்புறம் என்று பார்த்தால்  தான் விளங்குகிறது.

 முதல்  இருவது வருஷம்  மனித குணம்  உள்ளது (கல்யாணம் ஆகும்வரை).!! 
 கல்யாணம்  ஆகி முப்பது வருஷம்  கழுதையாக.   குடும்ப சுமை யாவும் அவன் முதுகிலும் தலை யிலும்!
 குழந்தை குட்டி பிறந்து வளர்ந்து  வரும்போது நாயாய் 15 வருஷம் பள்ளிக்கூடம், காலேஜ், ஹாஸ்டல்,வேலை ,ஆஸ்பத்திரி என்று எங்கெங்கோ அலைகிறான். கிடைத்ததை  முணுமுணுக்காமல் வாலைச் சுருட்டிக் கொண்டு தின்கிறான்.
 வயதாகியபின்  குரங்காக  ஓரிடம்  நில்லா மல்  ஓயாமல் ஒழியாமல்  பெண் வீடு கொஞ்ச காலம்,   பிள்ளை வீடு மீதி நேரம், என்று  ஓடிக்கொண்டு அவர்கள்  சொல்படி ஆடிக்கொண்டு  பேரன்   பேத்திக்கு  குரங்கு மாதிரி ஆடி ஓடி தாவி,  வேடிக்கை  காட்டிக்கொண்டு  காலம்  ஓட்டு கிறான்.  இப்படித்தான்  முக்கால் வாசி மனிதர் களுக்கு  வாழ்க்கை நடக்கிறதோ?  ஒருவேளை மனிதன்  கேட்ட  நீண்ட  ஆயுசு கிட்டத்தட்ட இப்படித்தானா?
எனக்குப் புரியவில்லை!   கொரோனா காலத்தில் இதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.!.  

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...