SRI VISHNU SAHASRANAMAM J K SIVAN
ஆயிர நாமன் ( 202-217)
203. ஸ்திரன்: உறுதியானவர்.மாறாதவர்
204. அஜன்: பிறப்பற்றவன். பிரமனை, உயிர்களை பிறப்பித்தவன்.
205. துர்மர்ஷணன்: எதிர்க்கவோ, வெல்லவோ முடியாதவன். சர்வமும் கடைசியில் சரணம் அடையும் பரமாத்மா.
206.சாஸ்தா: பிரபஞ்சத்தை ஆள்பவன்.சாஸ்திர ஞான நல்வழியில் நடத்தி செல்பவன்.பரமபதம் அடைய செய்பவர்.
207. விஸ்ருதாத்மா: ஆத்மா என்றாலே வேதத்தில் விஷ்ணு தான்.ஆயிர நாமத்தில் சகுண உபாசனை செய்தாலும் சகல சாஸ்திரமும் உணர்த்தும் பரிசுத்த அருவமான ஆத்மன்.
208. ஸு ராரிஹா : விண்ணுலக தெய்வம். சுரர்களின் எதிரிகளை வதம் செய்பவர்.ஸ்ரீமந் நாராயணன். விஷ்ணு.
23. குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: ||
209. குரு: ஆசார்யன். வேத நுணுக்கங்களை ரஹஸ்யங்களை கற்பிப்பவர். ஜீவனின் ஆத்ம ஒளியை பிரகாசிக்கச் செய்பவர்.
210. குருதமா: பரமாச்சாரியர்: ப்ரம்மஞானி. வேதங்களை உணர்ந்தவர். வேதங்களை காக்க பிரமனை படைத்தவர்.
211. தாமா: லக்ஷியம்: ஜீவனின் யாத்திரை முடிவே பரமாத்மாவை ஞான பிரகாசத்தை சேர்வது.
212. சத்யன்: பேருண்மையின் உரு. கடந்த, நிகழ், எதிர் காலம் எவற்றிலும் மாறாத சத்யம். ''ப்ராணன்களை உண்மை என்று கொண்டால் விஷ்ணு அவற்றின் சத்யம் ஆனவர் '' என ப்ரஹதாரண்யக உபநிஷத் தெளிவாக கூறுகிறது.”
213. சத்யபராக்ரமன்: நிச்சயமான சத்யன். நிலையான உண்மையின் சக்தி ஸ்வரூபம்.
214. நிமிஷா: இமைக்கும் கால அளவு. விழிகள் இமைக்காமல் நிலையாக இருப்பதை அநிமிஷா என்போம். எண்ணங்களை குவியும்போது, மனதில் அவற்றை அலசும்போது கண் இமைகள் குவியும். ஆழ்ந்துள்ளபோது இமை மூடும்.
215. அநிமிஷா: இமைக்காமல் விழிப்பு நிலை: தேவர்கள் இமைப்பதில்லை. தேவாதிதேவன் விஷ்ணுவை சர்வஞானி இமைக்காமல் உணர்பவர் என்று சாந்தோக்ய உபநிஷதத்தில் சங்கரர் சொல்கிறார்.
216. ஸ்ரக்வீ : ஸ்ரக் என்பது ஒரு மாலை. வாடாமலர்கள் கொண்ட அதை சூடுபவர்.விஷ்ணுவின் மாலை வைஜயந்தி மாலை.
217. வாசஸ்பதி ருதாரதி: தாராள தயை நிறைந்த மனம் கொண்டு ஜீவன் மாயையின் பிடியில் சிக்கி தவறுகளை புரிந்தாலும் பொருட்படுத்தாது நல்வழிப் படுத்துபவர். நெருப்பு பாரபக்ஷம் காட்டுவதில்லை. நாராயணன் விஷ்ணுவாக நம்மை ரக்ஷிக்கும்போது தயை புரிய தவறுவதில்லை.

No comments:
Post a Comment