Thursday, December 5, 2019

suggestion




என் இனிய நண்பர்களே,


ஒரு சின்ன கலந்துரையாடல்.

புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம்  சின்ன சின்ன வெத்திலை பாக்கு கடையில் கூட  புத்தகங்கள்  கொடியில் துணி உணர்த்துவது போல் தொங்கி கொண்டிருக்கும்.  நூலகங்கள் அங்கங்கே இருக்கும்.  லெண்டிங் லைப்ரரி  என்று  வாடகைக்கு புத்தகங்கள் கொடுக்கல் வாங்கல் உண்டு. இது வாட்ஸாப் காலம். அதெல்லாம் மறைந்து போய்விட்டது.

நமது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவையில்  விலை போடப்படாத,  விற்பனைக்கில்லாத  புத்தகங்கள் உள்ளன.  அவை இலவசமாக குழந்தைகளுக்கு,  நன்கொடை  தருவோர்க்கு கொடுக்கப்படுகிறது.  நன்கொடை எதற்கு வாங்குகிறோம் என்பது நல்ல கேள்வி.  எப்படி  புத்தகங்களை பதிப்பிடுவது, அச்சடிப்பது?  இந்த வேலை செய்து பிழைப்பவர்கள் இலவசமாக செய்யமுடியுமா?   தட்டச்சு கூலி,  காகிதம்,  அச்சக  செலவினங்களுக்கு எங்கே போவது? ஆகவே அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.  எனக்கு  எழுத காசு வேண்டாமே. ஏதோ எழுத வருகிறது. எழுதி தள்ளுகிறேன். புத்தகமாக்கும்போது தான் நன்கொடை தேவை.  முகநூலில், வாட்சப்பில், எனது BLOGல்  பதிவதற்கு  காசு தேவையில்லையே.  ஆனால் எல்லோராலும் இப்படி படிக்க முடியாது. வயதானோர், வசதியில்லாதோர்,  பள்ளி மாணவ மாணவிகள் புத்தகம் தான் தேடுவார்கள்..நூலகங்களுக்கு மருத்துவ நிலையங்களுக்கு,  முதியோர்,  குழந்தைகள் காப்பகங்கள்  புத்தகம் தான் கேட்பார்கள். ஆகவே தான் நன்கொடை தேவை.

தமிழ்  ஆங்கிலத்தில் புத்தகங்கள் நிறைய இருக்கிறது. இன்னும் அச்சிட 30 புத்தகங்கள் தயார் நிலையில் இருக்கிறது. அச்சிட, அவற்றை பாதுகாக்க  பணமும் இடமும் தேவை இல்லையா?. 

உங்களில் சிலருக்கு  பள்ளிக்கூடங்கள் தெரிந்திருக்கலாம், நூலகங்கள் தெரிந்திருக்கலாம், மருத்துவ மனைகள் அங்கே காத்திருப்போர்  படிக்க  புத்தகங்கள் தேவையா என்று கேட்டறியலாம்,  சிலரால் பண உதவி செய்ய முடிந்தால் நமது டிரஸ்ட்  கணக்குக்கு வங்கியில் நண்கொடை செலுத்தலாம், அதற்கு வருமான வரி விலக்கு   IT  ACT  SECTION  80G . அதை உபயோகித்துக்கொண்டு  நன்கொடைக்கு வரிவிலக்கு பெறலாம்.

ஒவ்வொரு ஊரிலும் சிலர் தங்கள் இல்லத்தையே  ஒரு தற்காலிக சுற்றும் நூலகமாக  FREE  CIRCULATING  LIBRARY யாக ஒரு சில மணி நேரங்களுக்கு காலையிலோ, மாலையிலோ  அமைத்துக்கொண்டு  அண்டை அசலில் தேவைப்பட்டோருக்கு படிக்க நூல்களை தரலாம். ஜாக்கிரதையாக திரும்ப குறித்த நாளில் பெறலாம். வாடகை இல்லாமல் படித்துவிட்டு தருவதற்கு உதவலாம். புத்தங்களை நான் அனுப்புகிறேன்.  நல்லவிதமாக உதவ எத்தனையோ வழிகள் உண்டு. நண்கொடை வசூல் செய்து  எங்கள் டிரஸ்ட்  வங்கி  கணக்கில் கட்டி என்னிடம் எந்த பெயர்களில் அளவிற்கு ரசீது வேண்டுமோ அதை பெறலாம். பணம் சேர்ந்தால் அடுத்து புத்தகங்கள் வெளிவரும்,  பிரதிகள் தீர்ந்த புத்தகங்களும்   மீண்டும் அச்சேறும். மக்களை சந்திக்கும்.
தெவிட்டாத விட்டலா,  முகுந்தனில் மூவர், பாவையும் பரமனும், பேசும் தெய்வம் முதல் பாகம், ஆகியவை பிரதிகள் தீர்ந்த நிலையில்  மீண்டும் அச்சேர காத்திருக்கின்றன. போதிய நிதி நன்கொடை சேர்ந்தாள் உடனே தைரியமாக அச்சேற்றலாம்.

உங்கள் அபிப்ராயத்தை கூறலாம்.   ஆனால்  எந்த காரணத்தை கொண்டு விலைக்கு விற்கலாமே என்று சொல்லிவிடாதேர்கள். இலவசமாக அளிப்பது ஒன்று தான் நோக்கம். நன்கொடை கொடுப்பவர்கள் நான் சம்பாதிக்கவா நன்கொடை கொடுப்பார்கள்?  எனக்கு 81வயதில் இனி சம்பாத்தியம் எதற்கு? 

J.K. SIVAN   
SREE KRISHNARPANAM SEVA TRUST 
15 KANNIKA COLONY 2ND STREET, NANGANALLUR, 
CHENNAI 600061
MOB;/whatsapp:   9840279080  EMAIL: jksivan@gmail.com













No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...