திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
60 அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே
ஸ்ரீ ராமானுஜரை சுற்றி இனிப்பை ஈ மொய்ப்பது போல் எண்ணற்ற சிஷ்யர்கள். அவர் மடத்தில் நிறைய பேர் இருந்ததால் அனைவருக்கும் சேவை செய்ய பலர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் .
மாருதியாண்டான் என்பவர் திருமடப்பள்ளிக்கு வேண்டிய தீர்த்தம் மற்றும் சன்னிதிக்கு வேண்டிய திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக் கொடுக்கும் பணியில் இருந்த வைணவர். ராமானுஜர் காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் தீவிர சிவபக்தன். வைணவத்தை பரப்புகிறார் ராமானுஜர் என்று அறிந்து சீற்றம் கொண்டு அவரை அழைத்து வர கட்டளையிட்டான். ராமானுஜர் அவன் கோரிக்கைகளுக்கு அடிபணியமாட்டார் எனவே அவர் உயிருடன் திரும்புவது அரிது என கருதி ராமானுஜரின் பிரதம சிஷ்யன் ர் கூரத்தாழ்வார் ராமானுஜரின் காவி உடையைத் தான் அணிந்து அவரை வெள்ளை ஆடையுடுத்து, கர்நாடக தேச வற்புறுத்தி அவர் அவ்வாறே திருநாராயணபுரம் சென்று சமயப் பணியும், சமுதாயப் பணியும் செய்தார்.
ராமானுஜரை காப்பாற்ற கூரத்தாழ்வார் தானே ராமானுஜர் என்று கூறிக்கொண்டு, ராமானுஜரின் குருநாதர் பெரியநம்பி மற்றும் அவரது மகள் அந்துழாய் துணையுடன் சோழனை அரண்மனையில் காண்கிறார்.
‘சிவமே பரம்’ என்று எழுதிக் கையெழுத்திடப் பணித்தான் சோழன். கூரத்தாழ்வாரும் பெரிய நம்பியும் அதற்கு மறுத்ததால் இருவருடைய கண்களையும் பிடுங்கித் தண்டித்தான். அவர்கள் ஒருவாறு அந்துழாய் துணையுடன் திருவரங்கம் திரும்பினர். கண்ணிழந்த நிலையிலும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.
திருநாராயணபுரத்தில் ராமானுஜர் எப்போதும் கூரத்தாழ்வான் நினைவாகவே இருந்தார் அங்கே நடந்தது தெரியாது. கவலையினால் தன் சீடன் மாருதியாண்டானை அழைத்து.
''மாருதி, நீ ஸ்ரீ ரங்கம் போ என் மகன் கூரத்தாழ்வான் நலமாக உள்ளானா என்று விசாரித்து வா.
மாருதியாண்டான் ஸ்ரீரங்கம் சென்று விஷயம் அறிகிறார். கண்ணிழந்த பெரிய நம்பிகள் பரமபதம் அடைந்துவிட்டார். கண்ணிழந்த கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலையில் வசிக்கிறான். அவர்களை கொடுமைப்படுத்தியஹா சோழமன்னன் கண்டமாலை என்ற நோயினால் இறந்து போனான் . அவனை கிருமி கண்ட சோழன் என்று சரித்திரத்தில் அறிகிறோம். திருநாராயணபுரத்தில் ராமானுஜருக்கு இந்த சேதிகள் அதிர்ச்சி அளிக்கிறது. சோழன் இறந்ததை மாறுதியாண்டான் ராமாநுஜரிடம் ''அவன் போனான்'' என்று சொல்லியது தான் இன்றைய கட்டுரை தலைப்பு.
ராமானுஜர் மீண்டும் தமது சீடர்களுடன் திருவரங்கம் வருகிறார். கூரத்தாழ்வானை சந்தித்து பழையபடி தொண்டுகள் தொடர்ந்தன.

இப்படி யாருக்குமே தெரியாத விஷயங்களை எல்லாம் தெரிந்த ஒரே மனுஷி திருக்கோளூர் மோர் தயிர் விற்கும் பெண் ஒருத்தி. அவர் ராமானுஜரை சந்திக்கிறாள். அவர் கேட்கிறார்.
''எல்லோரும் வாழ்வில் ஒரு நாளாவது வந்து இங்கே தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறபோது இந்த ஊர்க்காரி நீ இதை விட்டு வேறு ஊர் செல்கிறேன் என்கிறாய்?''
''சுவாமி நான் என்ன மாருதியாண்டான் போல் ''அவன் போனான் '' என்று கிருமி கண்டா சோழன் மறைவை உங்களுக்கு சொல்லி இருக்க்கிறேனா? யாருக்காவது ஏதாவது ஒரு நல்ல சேதியாவது கொண்டு வந்து மனம் இனிக்க சொன்னவளா? நான் எந்த விதத்தில் இந்த புண்ய க்ஷேத்ரல் இருந்து வசிக்க அருகதை உடையவள்?
என்கிறாள்.
No comments:
Post a Comment