Wednesday, May 27, 2020

THIRUK KOLOOR PEN PILLAI

திருக்கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள்   J K  SIVAN 


                                                   64  அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே
ஒரு  முக்கிய மந்திரம் மறக்காமல் இருக்க, மனப்பாடம் செய்ய  அதற்கு ஒரு சந்தஸ் என்ற கட்டமைப்பு உண்டு. அது நினைவுக்கு வந்தால்  மந்திர அக்ஷரம் தன்னால் கடகட வென்று உச்சரிக்க வந்துவிடும்.  

வைணவ மஹான்  ஸ்ரீ நாத முனிகள், நாலாயிர திவ்ய ப்ரபந்தந்தத்தை  எப்படி மக்கள்  மனதில் நிலை  நிறுத்துவது என்று 10ம் நூற்றாண்டிலே யோசித்தவர்.   இசை ஒரு  சக்திவாய்ந்த  சரியான  ஊடகம்.  அதன் வழியாக   உணர்த்தினால் ஆழ்வார்க ளின் பாசுரங்களான  நாலாயிர திவ்ய பிரபந்தம்  என்றும்  அழியாது  என்று அறிந்த  அவர், தனது  ரெண்டு மருமகன்கள்   கீழையகத்தாழவார், மேலையகத்தாழ்வார்  ஆகியோரை  ஈடுபடுத்தி  பாசுரங்களுக்கு  பொருத்தமான   ராக   தாளங்களை அமைத்தார். அது  இன்றும் பதினோரு
 நூற்றாண்டுகளுக்குப்  பிறகும்  அரையர் சேவை என்று  பிரபலமாக உள்ளது. ஸ்ரீரங்கத்தில் தோன்றிய  அரையர் சேவை  மற்றும் வில்லிப்புத்தூர், ஆழ்வார் திருநகரி   போன்ற  பிரபல வைணவ ஆலயங்களிலும்  விடாமல் தொடர்கிறது.  

அரையர் சேவையில்  பங்கேற்பவர்  தலையில்  மகுடமாகப் பட்டுக்  குல்லா, தொப்பி,  காதை மறைக்கும் தொங்குகின்ற   ஆபரணங்கள்,   கையில்  தாள ஒலிக்கருவி. கழுத்தில் மாலையோடு  பாசுரங்களுக்கு அபிநயம் செய்வார்கள்.  அரையர் சேவை நிகழ்ச்சிகளை காண்பதால்,  இசை வடிவம் பாசுரங்களை நெஞ்சில் பதிவு செய்யும்.   அதன் அர்த்தம்   அரையர்களின் அபிநயத்தில்  விளங்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.  இல்லை மாங்கனி.  என்றும் மனதில் பாசுரங்கள் தங்க அற்புத உத்தி.    நாத முனிகள் எவ்வளவு தீர்க்கதரிசி.

வைகுண்ட ஏகாதசி சமயம்  பகல்பத்து ராப்பத்து உத்ஸவங்களும் விழாக்களும் விமரிசையாக நடக்குமே  அது  அரையர் சேவை சீஸன் .  நீண்ட பயிற்சிக்குப்பிறகே அரையர் சேவையில் பங்கேற்க முடியும்.  

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்கள் (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்கள் என்றும் சொல்வார்கள்.

நாதமுனிகளின்  பேரன் தான்  ஆளவந்தார் .    வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார்கோயிலில்), யமுனைத்துறைவன் என்ற  பெயருடன் பிறந்தவர்.  இவரே  யமுனாச்சார்யர் என்ற  ராமானுஜரின் மானசீக குரு.  மணக்கால் நம்பிக்கு அடுத்த  ஆசார்யன் பட்டம் பெற்றவர்.  தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க ராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்தவர். 

யமுனாச்சார்யர்  அரையர் சேவையில் நிறைய  ஈடுபாடு கொண்டவர்.  ஸ்ரீ ரங்கத்தில் மடத்தில் அரங்கனுக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆளவந்தார்,  அரையர் சேவை நடக்கும்போதெல்லாம்  ஸ்ரீரங்க ஆலயத் தில் முதல் வரிசையில் அமர்ந்து, கண்டு, கேட்டு,  பாசுரங்கள்  விளக்கும் பெருமாளின் பெருமையில் மூழ்குபவர் . 

ஒரு நாள்,  அரையர் சேவையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஆளவந்தார் எதிரே, திருவாய்மொழியில் வரும் "ஆனந்த நகரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை  அரையர்கள்  மூன்று முறை பாடி நடித்துக்கொண்டிருந்தபோது அதைக் கேட்ட ஆளவந்தாருக்கு   சட்டென்று  ஒரு  பொறி தட்டியது.   

 ''ஓஹோ  ஸ்ரீ ரங்கநாதன்  என்னை  இந்த   அரையர்கள்  மூலமாக   திருவனந்தபுரம் போ '' என்று  பணிக்கிறானோ?    உடனே, நம்பெருமாளின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு,  தனது மடத்தின் பொறுப்புகளை தனது சீடரான தெய்வாரியாண்டானிடம் ஒப்படைத்து விட்டு, திருவனந்தபுரம்  சென்று  பத்மனாபசுவாமியை   தரிசனம் செய்து  பெருமாள் சேவையில்  தன்னை  ஈடுபடுத்திக் கொண்டார். 

திருக் கோளூரில்  ராமாநுஜரைக் கண்ட  மோர்  தயிர் விற்கும் ஒரு பெண்  அவரிடம் பேசும்போது  ஏன்  இந்த  புனித ஊரை விட்டு வெளியேறுகிறாய் என்ற அவர் கேள்விக்கு ,   ''நான் என்ன ஆளவந்தார் ஸ்வாமிகளைப்  போல  
நம்பெருமாளின் குறிப்பறிந்தவளா. குறிப்பறிந்து  நானும் ஒரு தரமாவது  திருவனந்தபுரம்  பத்மநாப ஸ்வாமியை தரிசித்ததுண்டா? தேனும் ஒரு தகுதி எனக்குண்டா இந்த திவ்ய க்ஷேத்ரத்தில் தங்கி வசிப்பதற்கு? , என்கிராள் .   அவள் பதில் உலகப்பிரசித்தியான காரணம் அவள் கொடுக்கும்  81 உதாரணங்கள்.  இதோடு  அவளது  64  உதாரணங்கள்  மூலம்  எவ்வளவு  வைணவ மஹானிய்யர்களை தெரிந்துகொண்டோம் என்று பார்த்தால்  திகைப்பாக இருக்கிறது.  என்ன ஞானம்!!



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...