திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
58 நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே
ஒரு ஸ்ட்ராங் வைஷ்ணவர். இடையாற்றூர் நம்பி என்று அடையாளப்பெயர். வழக்கம்போல் இவருடைய ஒரிஜினல் பெயரும் தெரியாது. ஸ்ரீ ரங்கம் அருகில் உள்ள இடையாற்றுக்குடி என்னும் ஊரில் வசித்தவர். தீவிர நம்பெருமாள் பக்தர். இதற்கு மேல் இவரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.
இந்த நம்பி ஸ்ரீ ரங்கத்தில் வருஷந்தோறும் நாலு தடவை நடக்கும் பிரம்மோற்சவத்துக்கு எப்படியோ வந்து விடுவார். வருஷம் முழுக்க ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாளுக்கு புறப்பாடும் உற்சவமும் நடக்கும் . இருந்தாலும் பிரம்மோற் சவம் ஜோடனையே வேறே. ஸ்ரீ ரங்கமே விழாக்கோலம் பூண்டிருக்கும். எங்கேயும் மக்கள் கூட்டம், புது புது வியாபாரங்கள், தெருக்கடைகள், தின் பண்டங்கள். வாசனை திரவியங்கள். மலர்கள். ஆடல் பாடல் பிரசங்கம், பிரவசனம். நாட்டியம். மயிலாட்டம், பொய்க்கால் குதிரை. ஆன் பெண் பூதங்கள் குழந்தைகளுக்கு கொண்டாட்டம். நம்பெருமாள் ஊர்வலம். நம்பெருமாள் அழகில் மயங்க பக்தர்கள் அனைவரும் கூடுவர். இடையாற்றூர் நம்பி இந்த மாதிரி சந்தர்ப்பத்தை விடுவாரா? பிரம்மோற் சவத்துக்கு முதல் நாளே ஸ்ரீ ரங்கத்தில் ஆஜர்.
கொடியேற்றம் முதல் எல்லா புறப்பாடுக ளிலும் கூடவே இருப்பார். ஒன்று விடாமல் சேவிப்பார்.
காலம் நகர நகர நம்பி கிழவர் தொண்டு கிழவராகி ஸ்ரீரங்கம் ப்ரம்மோத்சவத்துக்கு முதல் நாளே போகமுடியவில்லை. மெதுவாக ஊர்ந்து நடந்து ஒருவழியாக ஆறு நாள் லேட்டாக போய் சேர்ந்தார்.
நம்பெருமாள் எல்லாம் அறிபவர். தெரியாதா நம்பி பற்றி? இடையாற்றூர் நம்பியைக் காணாது நம்பெருமாள் தவித்துப் போனார். ஆறாம் நாள் கோவில் தூண் ஒன்றை பிடித்துக்கொண்டு நிற்கமுடியாமல் நிற்கும் இடையாற்றூர் நம்பியை பார்த்து விட்டார் நம்பெருமாள்.
''வா நம்பி வா, எங்கே உன்னை காணோமே என்று பார்த்தேன். ரொம்ப சந்தோஷம் நீ வந்தது. என்ன வேண்டும், கேள்? ' என்கிறார் நம்பெருமாள்.
“என் ஐயனே, நம்பெருமாளே ஏதோ இத்தனை நாள் உன்னருளாலே இங்கே வந்து உன் அழகை கண்ணார பருகின பாக்கியம் கிடைச்சுது. இப்போ முடியலைடா. முதல் நாளே வருபவன், எப்படியோ நகர்ந்து இன்னிக்கு ஆறாவது நாளாவது வந்து சேர்ந்தேன். .. ஒருவேளை இது தான் உன்னை நான் கடோசி கடோசியா பார்க்கிறேனோன்னு கூட மனசிலே படறது. எப்படி திரும்பி போவேனோ தெரியல?'' .
நம்பியின் ரெண்டு கைகளும் தலைக்கு மேலே. உடம்பு தூணிலே சாய்ந்திருக்கிறது. காலில் நிற்க பலம் இல்லையே.
''எங்கேயும் போகவேண்டாம் நம்பி, நீ இனிமேல் இங்கேயே இருந்து கொண்டு எப்போதும் என்னை தினமும் தரிசிக்கப் போகிறாய்.''
இடையாற்றூர் நம்பியின் உடலிலிருந்து உயிர் விடை பெற்றது. வைகுண்டம் போய் சேர்ந்தாலும் இன்னும் நம்பெருமாள் முன்பு, தூணோடு தூணாக நின்று கொண்டு நமது கண்ணுக்கு தெரியாமல் நம்பெருமாளை சேவிக்கிறார்.
நமக்கு தெரியாததெல்லாம் இந்த கெட்டிக்கார தயிர் மோர் விற்கும் திருக்கோளூர் பெண் பிள்ளைக்கு எப்படியோ தெரிந்துவிடுகிறது.
ராமானுஜருக்கு பதில் சொல்கிறாளே அப்போது 58வது உதாரணமாக இடையாற்றூர் நம்பி யை உள்ளே நுழைக்கிறாள் .
''சுவாமி நான் என்ன “இடையாற்றூர் நம்பி போல் அனுதினமும் நம் பெருமா ளை எண்ணினேனோ, இல்லை, இடையாற்றூர் நம்பி போல், நம்பெருமாளால், “இங்கேயேஎன்னோடு இரு நில்லு'' என்று பாசத்தோடு சொல்லப் பட்டவளா? எப்படி எந்த தகுதியோடு நான் இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வசிக்க அருகதை உடையவள் சொல்லுங்கள் ? என்கிறாளே .
No comments:
Post a Comment