Friday, May 8, 2020

THIRUK KOLOOR PEN PILLAI




திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K J.k. Sivan
57  இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கும்  செயல்கள்  முன்கூட்டியே  பகவானால்  தீர்மானிக்கப்பட்டு  திட்டமிடப்பட்டவை என்பதால் தான் ''அவனன்றி ஓர் அணுவும் அசையாது'' என்று எப்போதும் சொல்கிறோம்.   இதெல்லாம் நான் எழுதுவதும் அவன் என்னுள் நின்று என்னை ஆட்டி அசைவிப்பதால்  தான்.
சோழ மன்னனின் ஆணையிலிருந்து உயிர் தப்பி  வடக்கே  தற்போதைய  கர்நாடக பகுதியான தொண்டனுரில் ராமானுஜர் சிஷ்யர்களோடு தங்கியிருந்த போது , இங்கே எங்கேயோ ஸ்ரீ மந்  நாராயணன்  சிலாரூபத்தில் புதையுண்டு இருக்கிறான் என்று உணர்ந்து தேடி அலைந்தும்  கிடைக்க வில்லை. வருந்தினார்.
''ராமானுஜா,  யாதவாத்ரி  செல்.  வருந்தாதே. அங்கு இருக்கும் என்னை எடுத்து பிரதிஷ்டை செய்.'' பளிச்சென்று இப்படி ஒரு கனவுக்  கட்டளை இட்டான்  நாராயணன்.  புளகாங்கிதமடைந்த ராமானுஜர் அவ்வூர் அரசன் விஷ்ணுவர்தனிடம் விஷயம் சொல்ல, அவனும் உடன் வந்து  காடுகளை திருத்தி வழி செய்து யாதவாத்ரி அடைந்து எங்கும் மும்முரமாக தேடினார்கள் . எங்கே இருக்கிறான்  நாராயணன்?  '' எங்கேயோ தவறு  செய்த்திருக்கிறேன்  என்ற கவலை  ராமானுஜருக்கு.
''ராமானுஜா , சரியாகத்தான் வந்திருக்கிறாய்.   உன் எதிரே  கல்யாண தீர்த்தம்  தெரிகிறதா? அதன் தென் மேற்கு மூலையில் பார்.  செண்பக மலர் வனம் கண்ணில் படுகிறதல்லவா ?   அருகே செல். வடக்கே   ஒரு பெரிய  துளசி மரமாக வளர்ந்திருக்கிறது பார்.  மேலே பார்ப்பதை நிறுத்து, கீழே பார்.  அதன் அடியில் காணும் புற்று தான் நான் வாசம்  செய்யும் இடம்.  அங்கே வா''  ----   கூகிள்  மேப்  மாதிரி சொல்கிறான்  நாராயணன் மீண்டும் கனவில்.
அரசனின் ஆட்கள், ராமானுஜர், சிஷ்யர்கள் எல்லோரும் காட்டை அழித்து, புற்றை தோண்டி யபோது  திருநாராயணன் காட்சி அளித்தான்.  காடு அகன்று  திருநாராயணபுர க்ஷேத்ரம்
உருவாகியது. மேல்கோட்டை திருநாராயண பெருமாள் ஆலயம் நமக்கு கிடைத்தது . மூலவர் இருந்தும்   மனக்குறை தீரவில்லை.  உத்ஸவர் எங்கே போனார் ?
திருநாராயணன் அதற்கும் வழி காட்டினான்.  கனவில்  மீண்டும் தோன்றி
''ராமானுஜா , நீ  தேடும்  நான்   ராமப்ரியன். வடக்கே  டில்லி சுல்தான் அரண்மனையில் அல்லவோ  இருக்கிறேன்.  வாயேன் என்னைப்  பார்க்க ''
வயதான  அந்த  வைஷ்ணவ துறவி, கர்நாடக பூமி திருநாராயண புரத்தி லிருந்து வடக்கே  டில்லி வரை   சிஷ்யர்க ளோடு நடக்கிறார்..... நினைத்துப் பார்க்க கூட நம்மால்  முடியாது. பல மாதங்கள் நடந்தபின், டில்லி சுல்தான் அரண்மனை வாயிலில் அவர் வந்திருப்பதை அறிந்து சுல்தான் ''உள்ளே வரச்சொல்'' என்றான்.
''சுல்தான், எங்கள் தெய்வம்  திருநாராயண னின் உத்ஸவ மூர்த்தி  ராமப்ரியனை  உன்னிடம் உன்  ஆட்கள்  கொண்டு  சேர்த்திருக்கிறார்கள். அவனைத்  திரும்ப பெற்று செல்லவே  அடியேன்  நாராயணன் கட்டளைப்படி இங்கே வந்துள்ளேன்''
''அவ்வளவு தானே, இங்கே  நிறைய  தென்னாட்டு விக்ரஹங்கள்   மலைபோல்  குவிந்து உள்ளன. எது வேண்டுமோ அதை எடுத்துப் போகலாம் ''
அராஜகமாக கொள்ளையடித்து  சேர்ந்த   பொன் ,வெள்ளி, செம்பு, பஞ்சலோக   விக்ரஹ மலை.  இதில் யார்  ராமானுஜர் தேடும்  ராமப்ரியன் என்று தெரியாமல் அவன் அங்கே இல்லையோ என்ற சம்சயம் .  அரசே, வேறு எங்காவது விக்ரஹங்கள் இங்கே  இருக்கிறதா?''
''நன்றாக இருக்கிறதய்யா உம்  பேச்சு.  உம்மை  அவனே  அனுப்பினான், இங்கே இருக்கிறேன் வா  என்று சொன்னான். நீர் வந்து  தேடி  அவன் இங்கே இல்லை என்கிறீர்.  அவன் இங்கே இருந்தால்   உம்முடன்  வர விருப்பமிருந்தால்  அவன் ஏன்  உம்மைத் தேடி இன்னும்   வரவில் லை?''  சிரித்தான்  சுல்தான்.
''சொரேர் ' என்றது  ராமானுஜருக்கு. சிலையாக நின்றார். அன்றிரவே நாராயணன் மறுபடி கனவில் வந்தான்.
“ ராமானுஜா, ஏன் கலங்குகிறாய்?  சுல்தானிடம்   '' நான் தேடும்  ராமப்ரியனை  உன் மகள் அல்லவோ  தன்  பள்ளியறையில் விளையாட்டு பொருளாக  வைத்துக் கொண்டிரு க்கிறாள். இங்கே எப்படி இருப்பான்? அவனைக் கொண்டு தாரும்'' என்று கேள்''
மறுநாள்  சுல்தான் ராமானுஜர் சொல்லியதைக் கேட்டு அதிசயித்தான். ' ''என்னோடு வாரும் ''   மகளின் பள்ளியறைக்கு ராமானுஜரை அழைத்து சென்றான்.  மகள் வெளியே எங்கோ  போயிருந்தாள் .
''என் முத்தே, மாணிக்கமே, செல்லமே ,செல்வமே,  என்று நாம் கொஞ்சுவது போல்  ராமானுஜர்  ''செல்வ ப்பிள்ளாய்! வாராய்” என்று மனமுருகி  அழைக் கிறார்.
லக்ஷ்மிநாராயணன்,   ராமப்ரியன், பீதாம்பர  தாரியாக, கஸ்தூரி திலகனாக,  காலில்  சலங்கை ''சலங் சலங் '' ஓசையோடு  சுல்தான்  மகள்  இளவரசி படுக்கையிலிருந்து எழுந்து நடந்து ராமானுஜரிடம் வந்தான்''    என்கிறார்  பெரியாழ்வார்.
ஓடிவந்து ராமானுஜரின் மடியில்  அமர்ந்து அவர் கழுத்தை இருக்க  இரு கரங்களாலும் கட்டிக்கொள்கிறான். பக்தன் மேல் என்ன பாசம்.
நீண்ட பயணத்தில்  ராமானுஜர் செல்வப் பிள்ளையோடு  திருநாராயணபுரம் திரும்பியது . அவனைப் பிரிய மன மில்லாத இளவரசி தானும் உடன் வந்தது, வழியில் நடந்தவை, துலுக்க நாச்சியார், நாரயணனோடு, அரங்கனோடு கலந்தது போன்ற நிகழ்வுகளை  விவரிக்க  முற்பட்டால்  தனியாக ஒரு தலையணை புத்தகம் தயாராகிவிடும்.

நண்பர்களே,  எல்லோரும் எழுந்து நின்று இரு கரம் சிரமேற் தூக்கி  ''நாராயணா என்று சொல்லுங்கள்.  இந்த விஷயம் நம்மை இன்று அடைய காரணம்  திருக்கோளூர் அம்மாள்,  ராமானுஜரை  திருக் கோளூரில்  சந்தித்தவள் அவர் கேள்விக்கு பதிலாக   தான்  ஏன்  அந்த புனித க்ஷேத்ரத்தில் வசிக்க  தகுதி அற்றவள் என நிரூபிக்க  57வது உதாரணமாக காட்டியது இந்த செல்வப் பிள்ளையை. “செல்வப் பிள்ளை போல் இரு கைகளால்  ஸ்ரீ ராமானுஜரின் கழுத்தை அன்புடன் அணைத்து  பிடித்தவளா நான்.  என்றாவது   ஒருநாள்  இறைவனிடம் ஆசை பாசத்தோடு பக்தியை வெளிப்படுத்தியவளா? என்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...