Wednesday, May 20, 2020

RASA NISHYANDHINI




ரச நிஷ்யந்தினி J K SIVAN
                                                               
     நான்  அறிவேன்  நீ அறிவாயா?

    ''நீ ஸ்ரீ ராம கதை சொல்ல ஆரம்பி '' -- முத்தண்ணா வின் ஆசிர்வாதத்தோடு தொடர்ந்தது  பருத்தியூர் க்ருஷ்ணன் சாஸ்திரிகளின்  ராம கதா பிரசங்கங்கள். திருவனந்தபுரம் சமஸ்தானம் நடத்திய பரிக்ஷையில் உயர்ந்த சன்மானம் பெற்று வேதாந்த பாடங்கள் நடத்தும் உத்தியோகமும் கிடைத்தது. சந்தோஷமாக குரு முத்தண்ணாவிடம்  (சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் தாத்தா)  ஓடி வந்து விஷயம் சொன்னார்.

''ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணா, ஒன்று ஞாபகம் வைத்துக்கொள். என்னிடம் கற்ற வேதாந்தத்தை பணத்துக் காக விற்காதே.''
கிருஷ்ண ஸாஸ்த்ரி முகம் கவிழ்ந்து நின்றார்.
''என்ன கவலை உனக்கு ?''
''என் குடும்பம், ஜீவனத்துக்கு என்ன வழி தெரியவில்லையே குருநாதா?''
''இதுவா கவலை, இந்தா.''
தனது ஸ்ரீ ராமாயண புஸ்தகத்தை கிருஷ்ண ஸாஸ்திரியிடம் கொடுக்கிறார் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் என்கிற முத்தண்ணாவாள்.
''ஸ்ரீ ராம ஷடாக்ஷரி (ஸ்ரீ ராம ஜெயம்) மந்திரத்தையும் உனக்கு உபதேசிக்கிறேன் . அது உன் க்ஷேமத்தை பார்த்துக் கொள்ளும் ''
பெரியவா வாய் முஹூர்த்தம் பலித்தது. எட்டு திக்கிலும் ராமாயண பிரசங்கங்கள் தொடர்ந்து நடைபெற்றன. ஸ்ரீ இராமாயண ஸாஸ்த்ரிகள் என்ற புகழ் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்திரிகளை தானாகவே தேடி வந்தது. 
கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு இல்லையா. நிறைய பொன்னும் பொருளும் சம்பாவனையாக வந்தது. ஒவ்வொரு பிரசங்கத்தின் போதும் ''ப்ரம்மா விஷ்ணு மஹேசனை நான் கண்டதில்லை. என் குரு முத்தண்ணாவை ப்ரத்யக்ஷமாகவும், ஸ்ரீ ராமனை கனவிலும் காண்கிறேன்'' என்பார்.

 ஒரே ஒரு ஆசை. ''என் குரு முத்தண்ணாவாள் சித்தி அடைந்த அதே தை மாதம் கிருஷ்ண பக்ஷம் துவாதசி அன்றே நானும் சித்தி அடைய ஸ்ரீ ராமன் அனுக்கிரஹம் செய்யட்டும்'' என்பார்.

இன்று பருத்தியூர் பெரியவாவின் அற்புத  ரஸ நிஷ்யந்தினியில் அடுத்து  5 ஸ்லோகங்கள் (36-40)ரசிப்போம் 
36. अयमाशीर्वादग्रहणार्थं ब्राह्मणमुखान्यवलोकत इति त्वम्; 'ब्राह्मणोऽस्य मुखमासीत्' इति ब्राह्मणान् मुखतोऽसृजत् इत्यहम् ।


அயம் ஆசிர்வாதக்ரஹணார்த்த   ப்ராமணமுகான்யவலோகத் இதித்வம்;  ப்ராம்மணோஸ்ய  முகமாஸித்  இதை பிராமணான் முகத்தோஅஸ்ருஜத்  இத்யஹம் :

 36. ''  நிறைய  தான தர்மங்களை கொடுத்து வணங்கி  வேத பிராமணர்களின் முகங்களை ஆர்வமாக பக்தியாக பார்க்கிறோமே எதற்கு. அவர்கள் முகமலர்ந்திருக்கிறார்களா? திருப்தியா, ஆசி தருவார்களா?  என்று தானே.  இதோ நிற்கிறான்  பார்  ராமன். அவன் முகத்தை பார்.   வேத வித்துக்களான பிராமணர்களின் முகங்களை ஆர்வமாக ஆவலாக எதிர் நோக்கி அவர்களது ஆசிகளை பெற அவன் நிற்பது போலவா உனக்கு தோன்றுகிறது?அது அல்ல உண்மை. பிராமணர்கள் என்பதே அவன் முக பிரதி பிம்பம் என்று உணர்வாய். காரணம் அவனிடமிருந்தே தான் வேத மும்  அதை கோஷிக்கும் வேதியர்களும் தோன்றினார்கள்.'' (புருஷ சூக்தம் சொல்வது)

37. वैरिव्यूहनिरसनार्थमनेकक्षत्रियबाहूनयमपेक्षत इति त्वम्; 'बाहू राजन्यः कृतः' इति बाहुभ्यामेव क्षत्रियजातिमसृजदित्यहम् ।
வைரிவ்யூ ஹநிற சனார்த்தமனேக க்ஷத்ரிய பாஹுனய மபெக்ஷத்  இதித்வம்  ; பாஹு ராஜன்ய; க்ருத; இதை பாஹுப்யாமேவ க்ஷத்ரிய ஜாதிமஸ்ருஜதித்யஹம் .

''உன் மகன் ராஜ குமாரன் ராமன் எதிரி மன்னர்களின் சதி திட்டங்களை முறியடிக்க க்ஷத்ரியர்கள் அநேகரின் பலமிகுந்த புஜங்கள் அவனுக்கு தேவை என்று நீ எண்ணுகிறாய்.  இது  ரொம்ப சாதாரண எதிர்பார்ப்பு.  புருஷ சூக்தம் சொல்லும் ''புஜபல பராக்கிரம க்ஷத்ரியர்களே  அவன் புஜம் தான்...  (புருஷ சூக்தம்)

38.  तमोनिरासाय चन्द्रसूर्यादिप्रकाशमपेक्षत इति  त्वम्; 'तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाती'ति एतस्य ज्योतिरनुभाति सर्वं ज्योतिरित्यहम् ।
  ''தமோநீ ராஸாய  சந்திர சூர்யாதி ப்ரகாசாமபேக்ஷத  இதி த்வம் .  தமேவ பாந்தமனுபாதி  சர்வ தஸ்ய பாஸா ஸர்வமிதம்  விபாதிதி  எதஸ்ய ஜ்யோதிரனுபாதி சர்வம் ஜ்யோதிதி   ரித்யஹம் .           

 தசரதா ,  இருளில் ஒளி பெற சூரியனையும் சந்திரனையும் தேடும் மற்றவர்கள் போல் அல்ல ராமன். வேதம் சொல்வது கவனமிருக்கிறதா? ''ஒளி, பிரகாசம் எங்கிருந்தெல்லாம் பிறக்கிறதோ அதெல்லாம் ஸ்ரீ ராமனிடமிருந்து வெளிப்படும் ஸ்வயம் பிரகாசத்தின் பிரதிபலிப்பு''   இதை நான்  நன்றாக அறிவேன்.

 39. इक्ष्वाकुधनं कोसलदेशं कण्टकेभ्य उद्धर्त  शक्नुयादिति त्वम्; 'उद्धृतासि वराहेण कृष्णेन शतबाहुना' इति अनेककोटियोजनविस्तृतां भूमिमिमा पूर्वमुद्धृतवानयमित्यहम् ।
இக்ஷ்வாகுதனம்   கோசலதேசம்  கண்டகேப்ய   உத்தர்த்த  சக்னுயதிதித்வம்  ; உதந்த்ரு தாசி  வராஹேண கிருஷ்ணேன   சத பாஹுனா  இதி  அநேக கோடி யோஜந  விஸ் பூமிமீமா  பூர்வ முத்ருதவான யாமித்யஹம்

''அயோத்தி மகாராஜனே, கேள். இக்ஷ்வாகு வம்ச தோன்றல்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த பழம்பெரும் பெருமை வாய்ந்த கோசல ராஜ்ஜியம் ராமனால் காப்பாற்றப்படும் என்று நீ எண்ணுகிறாயே,  நல்ல  எண்ணம்  தான்.  ஆனால்  ஸ்ரீ ராமன் யார் தெரியுமா உனக்கு? கரிய நெடிய காட்டுப் பன்றி உருவெடுத்து பல கரங்களுடன் இந்த மா பெரும் பூமியையே இரண்யாக்ஷனிடமிருந்து திரும்ப பெற்று தூக்கி நிலை நிறுத்தியவன். சுருங்க சொல்லவேண்டுமானால் பூமி மீண்டும் தோன்ற காரணன் ஸ்ரீ ராமன்.

 40. अस्यानन्दमुद्दिश्यास्माभिः प्रयत्नः करणीय इति त्वम्। एतस्यैव आनन्दस्य मात्रामन्यानि भूतान्युपजीवन्तीत्यहम्।
அஸ்யா னந்த முத்திஷ்யாஸ்மாபி; ப்ரபந்ந ; கரணீய  இதித்வம்.  ஏதஸ்யைவ  ஆனந்தஸ்யமாத்ரா மன்யானி  பூதான்யுபஜீவந்தி த்யஹம்

''அரசனே, உன் மகன் ஸ்ரீ ராமனை எல்லோரும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறாயே, முதலில் நீ புரிந்து கொள்ளவேண்டியது என்ன தெரியுமா? ஸ்ரீ ராமனின் சந்தோஷத்தின் ஒரு துளியூண்டு தான் இந்த அகில புவன உயிர்களின் மொத்த சந்தோஷமே.

இன்னும் விஸ்வாமித்ரரை  பருத்தியூர் பெரியவா குரலில் உருவில் கேட்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...