பேசும் தெய்வம் J K SIVAN
ஸாஸ்வத சொத்து. பர்மனெண்ட் ப்ராபர்டி.
''அப்பா ஒரு சொத்தும் வைத்து விட்டு போகவில்லையே'' என்கிற ஏக்கம் ஏமாற்றம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலருக்கு அப்பா வைத்து விட்டு போன சொத்தால் எவ்வளவு கஷ்டம் என்று அவர்களுக்கு தெரியாது. அதே போல் சிலர் வாழ்நாள் பூரா பொய் சொல்லி, லஞ்சம் வாங்கி, ஏமாற்றி சொத்து சேர்க்கிறார்கள்... இது அன்றும் இன்றும் நடக்கும் நிகழ்ச்சி தான்.
இதைப் பற்றி மஹா பெரியவா என்ன சொல்கிறார் ?
''பெரியவா நீங்க சொல்லுங்கோ, எது சரியான சொத்து.ஸா ஸ்வதமானது? நீங்கள் தான் அழகா புரியும்படியா சொல்வீர்களே. எங்கே சொல்லுங்கள். எங்களுக்கு புத்தி வரவேண்டாமா? ஏற்கனவே சொல்லி இருந்தாலும் இன்னொரு தரம் சொல்லுங்கோ:
''அப்பா வைத்துவிட்டுப் போன வீடு பழசு. வயசாகி இடிந்து போகும். அடிக்கடி ரிப்பேர் பண்ணணும், வெள்ளை. அடிக்க, பெயிண்ட் பூச, , மர , இரும்பு வேலை அப்படி இப்படி என்று மாற்றி மாற்றி செலவு.
நிலமா இருந்தால் வருஷா வருஷம் கொள் முதல் போட்டு, விதைத்து, நீர் பாய்ச்சி, உழைத்தால் தான் மாசூல் பார்க்கலாம். எருப் போட்டு மாளாது. பூஸாரம் போய் விடுகிற நிலங்களும் உண்டு. மழை பெய்யாவிட்டாலும், Dam திறக்காவிட்டாலும், , பூச்சி, பொட்டு மருந்து அடிக்கா விட்டாலும் நஷ்டம்
ஒரே யடியாக மழை பெய்தாலும் அழுகிப் போய் நஷ்டம். கஷ்டம். அரசாங்கத்துக்கு கட்டவேண்டிய தொகை, ஆள் காரர்களோடு மல்லுக்கு நிக்கணும் . கண் குத்தி பாம்பாக மேற்பார்வை பண்ணணும் . க்ராமத்திலேயே இருக்க முடியாதே.... நிறைய வேலை பட்டணத்தில்... டபுள் நஷ்டம். மனக்கஷ்டம்.
சரி அப்பா ரொம்ப பணமாக கணக்கில் காட்டாமல் வைத்துவிட்டு போனால்?
பெட்டியிலே வைத்திருந்தால் ‘டிவால்யுவேஷன்’ (நாணய மதிப்பு குறைந்து போவது)! பல தினுசு டாக்ஸ்! புதுசாக என்ன டாக்ஸ் வருமோ என்று ஓயாமல் பயம். திருட்டுப் போவது; எங்கே திருட்டுப் போய்விடுமோ என்று ஸதா பயம். அதிகாரிகளுக்கு அடிக்கடி லஞ்சம் கொடுக்க வேண்டும்.
ஆகவே இந்த சொத்துக்கள் ் ஸாஸ்வதமில்லை. க்ஷீணித்துப் போகும் . வாரிசுகளுக்கிடையே கொலைச் சண்டை, கோர்ட், கேஸ். அலையணும் . ஸொத்தை எப்படியாவது காப்பாற்ற மனசாட்சிக்கு விரோதமாக தப்பு செய்ய சொல்லும். செய்யணும். சட்டத்தை
மீற வைக்கும். பிறத்தியாருக்கு நஷ்டம், கஷ்டம் உண்டாக்கி அதனால் தனக்கு லாபம் தேட வைக்கும். லஞ்சம் கொடுக்க, பொய்க் கணக்கு காட்ட வைக்கும். அரசாங்கத்தை, சட்டத்தை, அதிகாரிகளை விலைக்கு வாங்க, ஏமாற்ற ‘பினாமி’ ஏற்பாடுகள் செய்ய வைக்கும். இன்னும் பல தினுஸான தகிடு தத்தம் செய்யணும் . இப்படியெல்லாம் தப்பு வழியிலே போய் சம்பாதிக்கும் ஸொத்து இவ்வளவூண்டு கொஞ்சமா இருந்தாலும், அதை அடைய ஒருவன் செய்கிற அக்கிரமம் பாபம் இருக்கிறதே அது மலை அளவு.
பூர்வபுண்யத்திலேயோ, ஏதோ அத்ருஷ் டத்திலேயோ அப்பா ஸொத்து நன்றாகவே வளர்கிறது, தப்புப் பண்ணாமலே விருத்தி யாகிறது எல்லாமே விதிப்படி, நியாய மாக, வரி கட்டி, நேர்மையாக, இருந்தால்?
என்றாலும் கூட, கடைசியில் ஒரு நாள் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ தானே. அத்தனைகளையும் விட்டு விட்டுப் போக வேண்டும் . அரண்மனை மாதிரி வீடாகட்டும், ஆயிரம் வேலி முப் போகம் விளைகிற நிலமாகட்டும், ஐந்து கோடி-பத்து, நூறு கோடி என்று ரூபாயாகட்டும், எதுவா னாலும் அதிலிருந்து துளிக்கூட நமக்குப் பிரயோஜ னம் கிடைக்காத படி அத்தனை யையும் விட்டுவிட்டு ஒரு நாள் வெறும் கையோடு தான் புறப்படணும்.
ஆகவே அப்பா ஸொத்தொ, நாமே தேடி சேர்த்த ஸொத்தோ எதுவுமே சாஸ்வதம் இல்லை. கூட வராது.
ஸாஸ்வதமான ஸொத்து, அழியாதது , ரிப்பேர் தேவையில்லாதது, டாக்ஸ் கட்டவேண்டாத சொத்து, திருட்டு போகாத ஸொத்து, ‘திருட்டு பயம் இல்லாத சொத்து , தப்பு வழிகளில் போய் பொய்சொல்லி, சட்டத்தை மீறாத, லஞ்சம் கொடுத்து காப்பாற்றிக் கொள்ள வேண்டாத ஸொத்து அப்பாவால் கொடுக்க முடியாது. நாமாகவும் தேடி சம்பாதிக்க முடியாது. குரு என்கிற ஒருத்தர்தான் ஸாஸ்வதமான அந்த ஸொத்தைத் தருகிறவர். இது நாம் போன பிற்பாடு நம் கூட வராத ஸொத்தில்லை – நம்மையே திரும்பி வரப் பண்ணாத ஸொத்து! எது ஸாஸ்வதமோ அந்தப் பரமாத்மாவுடன் நம்மைப்பிரிக்க முடியாமல் சேர்த்துவிடுகிற ஸொத்து.
ஞானம் என்ற ஸொத்தை குரு அநுக்ரஹிக்கிறார். ஸொத்து க்ஷீணித்துக் கொண்டே போவது, நாம் சிரமப்பட்டு அதை விருத்திபண்ணப் பாடுபடுவது, இப்படி பாடுபடுவதில் பாவ மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கட்டிக்கொள்வது என்பதற்கெல்லாம் இடமே வைக்காமல் நாளுக்கு நாள் தானும் வளர்ந்து நம்மையும் வளர்ப்பது குரு தருகிற உபதேச ஸொத்து.
மற்ற ஸொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா ஸுகங்களும் தாற்காலிகம்தான். ‘நித்யானந்தம்’ என்றே சொல்லப்படுவதான ஸாஸ்வத ஸுகத்தைத் தருவது குரு அநுக்ரஹிக்கிற ஞானமொன்றுதான்.''
பெரியவா சொல்லும் இந்த அறிவுரை தெரிந்தவர்களுக்கெல்லாம் நாம் சொல்லவேண்டாமா?
No comments:
Post a Comment