ரஸ நிஷ்யந்தினி J K SIVAN
பருத்தியூர் அருகே ஒரு ஊரில் விஸ்வநாத சாஸ்திரிகள் என்று ஒரு பண்டிதர் . சிறந்த ராம பக்தர். ராமநவமி பஜனைகளை விடமாட்டார். அவர் குரல் தனியாக ஒலிக்கும். பருத்தியூர் ஆஞ்சநேயர் மீது அலாதி பக்தி. அவர் வீடு ஒரு மாட்டு பண்ணை என்று சொல்வதை விட கோசாலை என்று சொல்வது பொருந்தும்.
காலையில் சூரிய உதயம் ஆனதும் பட்டிகளை திறந்து விடுவார்கள். பசுக்கள் நாள் பூரா எங்கு வேண்டுமானாலும் மேய்ந்து விட்டு தானாகவே சூரிய அஸ்தமனத்தின் போது அவர் வீட்டுக்கு திரும்பும்.
பருத்தியூரில் ஒரு முறை ராமநவமி விழா கடைசி நாள்.அன்று வழக்கம் போல் விசேஷமாக ஆஞ்சநேய உத்சவம். சாஸ்திரிகளை கையில் பிடிக்கமுடியுமா அன்றைக்கு? ஊரே திரண்டது. கூட்டம். அன்று பூரா சாஸ்திரிகள் கோவிலில் உத்சவத்தில் ஈடுபட்டதால் வீட்டு பக்கமே போகவில்லை.
அவரது தாய் சேதி சொல்லி அனுப்பினாள் . ''சூரிய அஸ்தமனமாகி வெகு நேரம் ஆகியும் ஏனோ பசுக்களை காணோம். கவலையாக இருக்கிறது. நீ வா ''
'' அம்மா கவலைப்படாதே. ஆஞ்சநேயர் பார்த்துக் கொள்வார்'' என்று பதில் சொல்லி அனுப்பினார் சாஸ்திரிகள். இரவு ஒன்பது பத்து ஆகியும் எங்கே பசுக்கள்? காணோமே?
இரவு பத்தரை மணிக்கு மேல் பசுக்கள் திரும்பின. பசுக்கள் மட்டும் அல்ல. யாரோ ஒருவர் பக்கத்து
ஊர்க்காரர்.
''இங்கே விஸ்வநாத சாஸ்திரிகள் வீடு எங்கே இருக்கிறது?''
''இது தான் ''
''ஓஹோ உங்களுடைய பசுக்கள் எல்லை தாண்டி எங்கள் ஊர் வந்து என்னுடைய வயலில் புகுந்து பயிர்களை தின்றதால் அவற்றை பிடித்து கட்டி போட்டேன். சொந்தக்காரர் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என்று?''
ஆச்சர்யமாக எங்கிருந்தோ ஒரு பெரிய குரங்கு வந்து கட்டிப்போட்ட அத்தனை பசுக்களையும் கயிற்றை அவிழ்த்து விட்டு அவற்றை விரட்டியது.
எனக்கு ஆச்சர்யமாக போய் பசுக்களை தொடர்ந்து வந்து இங்கே விசாரித்தேன். இந்த பசுக்கள் விஸ்வநாத சாஸ்திரிகள் வீட்டை சேர்ந்தவை என்று உங்கள் வீட்டை காட்டினார்கள்.
''ஆமாம் நான் தான் விஸ்வநாத சாஸ்திரி, இன்று முழுதும் நான் ஆஞ்சநேயர் உத்சவத்தில் ஈடுபட்டதால் பசுக்களை கவனிக்க முடியவில்லை. ஆஞ்சநேயர் தான் பசுக்களை கவனித்து விடுவித்திருக்கவேண்டும்'' என்கிறார் சாஸ்திரிகள். பக்கத்து ஊர் வயல் சொந்தக்காரர் அப்புறம் ஆஞ்சநேய உத்சவங்களில் பங்கேற்காமல் விடுவதில்லை என்று நான் சொல்லவேண்டாம். பருத்தியூர் கே. சந்தானராமன் தனது ''ஆஞ்சநேயர் கதைகள்'' என்ற புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். ஆஞ்சநேயர் இல்லாமல் ராமர் ஏது ?
இனி ராமர் பற்றிய அற்புத செயதிகளை தரும் பருத்தியூர் பெரியவா இயற்றிய ரஸ நிஷ்யந்தினி 26-30 ஸ்லோகங்களை ரசிப்போம்.
அயம் ப்ரத்யக்ஷ விஷய இதித்வம்; அயம் பரோக்ஷ விஷய இத்யஹம் .
26. தசரதா , ஐம்புலன்கள் உணர்வினால் கட்டுண்ட சாதாரண மானிடனாக நீ ராமனை பார்க்கிறாய். ராமன் ஐம்புலன்கள், ஐம் பூதங்கள் அனைத்தையும் கடந்த அருவமானவன்.
27. अयं भक्तानां भुक्तिदातेति त्वम्; अयं भक्तानां भुक्तिमुक्तिदातेति अहम् ।
அயம் பக்தானாம் புக்திதாதேதி த்வம் ; அயம் பக்தானாம் புக்திமுக்திதாதேதி அஹம் ;
27.தன்னை அண்டியவர்களுக்கு எல்லா வசதிகள் உதவிகளையும் புரியும் ஒரு மானுட அரசனாக நீ ராமனை பார்க்கிறாய். அவன் இம்மைக்கு தேவையானவை மட்டுமல்ல மறுமைக்கும் பக்தர்களுக்கு முக்தி தருபவன்.
28. अयमेक इति त्वम् अयमनेक इत्यहम् ।
28. अयमेक इति त्वम् अयमनेक इत्यहम् ।
அயமேக இதித்வம் அயமனேக இத்யஹம் .
28. தசரதா, ராமனை நீ ' 'ஒரு'' மானிடனாக அறிகிறாய் தசரதா. அவன் ''எண்ணற்ற பலர்'' ஆனவன். நீ காண்பது அவர்களில் ஒருவனை.
29. अयं चक्षुषा ग्राह्य इति त्वम् अयं 'न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैर्मनसा कर्मणा वा' । इति करणागोचर इत्यहम् ।
அயம் சக்ஷுஷா க்ராம்ஹஇதித்வம். அயம் ந சக்ஷுஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யை தேவைர் மனஸா கர்மணா வா; இதி கர்ணாகோசர இத்யஹம் .
29.தசரதா , நீ ராமன் என்கிற '' ஒரு'' உருவத் தை மட்டும் கண்ணால் காண்கிறாய். எனக்கு தெரியும் ராமனை. அவனை கண்களால் முழுவதும் காண முடியாது. அவனை விளக்கிச் சொல்லமுடியாது, காதால் கேட்டு மாளாது. எந்த புலனாலும் அவனை உணர முடியாது. அதற்கு அப்பாற்பட்ட எல்லையற்ற இயம்ப முடியாத ப்ரம்மம்.
30 अयं जात इति त्वम् अयं 'अजायमानो बहुधा विजायत' इत्यहम् ।
அயம் ஜாத இதித்வம் அயம் அஜாயமானோ பஹுதா விஜாயத இத்யஹம் .
இத்தனாம் நாள், தேதி, கிழமை, நேரம், காலம் அதில் ராமன் ஜனனம் என்று நீ குறித்து வைத்தவன். அது மட்டுமே அல்ல. அது எண்ணற்ற எதிலோ ஒரு சிறு துளி. அவன் பிறவியற்றவன். எந்த ரூபத்திலும் காண தன் உருவத்தை அமைத்துக் கொள்பவன்.
No comments:
Post a Comment