Friday, May 8, 2020

PESUM DEIVAM


\பேசும் தெய்வம்  J K SIVAN

முக்திக்கு முந்தி பக்தி

மிக  உயர்ந்த உன்னத  மகான்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. அவர்கள் தேடாமலேயே யாரோ எங்கிருந்தோ வந்து  அவர்களது மஹிமை வெளி உலகுக்கு வெளிச்சம் காட்டுவார்கள்.  ராம கிருஷ்ண பரமஹஸருக்கு ஒரு விவேகானந்தர்.  ஒரு  ''M "   என்ற  மஹேந்திரநாத் குப்தா,  GOSPEL  எழுதி  ராமகிருஷ்ணரை நமக்கு கொடுத்தார். ரமணருக்கு என்று  பால் ப்ரண்டன்  மேலை நாட்டிலிருந்து வந்தான். ஷீர்டி பாபாவுக்கு தபோல்கர் கிடைத்து நமக்கு சாய் சத் சரிதா அவரைப்பற்றி நிறைய சொல்கிறது.
அர்ஜுனன் யுத்தகளத்தில் சோர்ந்து உட்காராவிட்டால் நமக்கு கீதை கிடைத்திராது. விநாயகர் ஒரு கொம்பை உடைத்து ஓலைச்சுவடியில் எழுதாவிட்டால் பாரதம் கிடையாது.  வேடன் ஒரு பறவையின் சோகத்தில் மனம் உடைந்து ராமாயணம் தந்தது மாதிரி.  எதற்கு இதெல்லாம் சொன்னேன்?
மஹா பெரியவா  என்கிற  நடமாடும் தெய்வத்தின் உபதேசங்களை வெளி உலகத்திற்கு தெரிய படுத்துவதற் காகவே அவதரித்தவர்  ரா. கணபதி என்ற  சிரேஷ்டர்.  அவர் எத்தனையோ புத்தகங்கள் எழுதினாலும் தெய்வத்தின் குரல் ஒன்றினாலேயே அவர் அறியப்படுகிறார். ஏன்? அது மஹா பெரியவா பற்றி சொல்வதால்.
கணபதி என்றதும்  மேலே  சொன்னது  மறுபடியும் நினைவில் வரட்டும்.   ''கணபதி'' மிக சிறந்த  வேகமான எழுத்தர்.  வேத வியாசரை போய் கேளுங்கள், கதை கதையாக சொல்வார்.  அவரைப் போல் வேகமாக புராணங்க ளையும், இதிகாசங்களையும் யாரால் சொல்ல முடியுமா. அப்போது என்ன டேப் ரிகார்டரா இருந்தது. அல்லது அவர் கம்ப்யூட்டர் வைத்துக் கொண்டிருந்தாரா.  அவர் மனதில் ஊறுகின்ற எண்ணங் களை எழுத்தில் எழுத ஒருவரை  தேடிக்  கொண்டிருந்தபோது தான் கிடைத்தார் மஹா கணபதி.  ஒற்றைக் கொம்பன்.  ஒன்றை உடைத்தார்.
''இதோ பார்  வியாச தாத்தா, நீ சொல்வதை நா எழுதவேண்டும் என்கிறாயே, நான் சொல்வதை கொஞ்சம் கேள். என் எழுத்து வேகத்திற்கு உன்னால் சொல்ல முடிந்தால் சொல் எழுதி தருகிறேன்''  என்கிறார்.
இப்படி ஒரு அசகாய சூரன் கிடைத்தால் விடுவாரா  வியாசர்.  வியாசர் சொன்னார் விக்னேஸ்வரர் எழுதினார் . நமக்கு மகா பாரதம் முதலான பொக்கிஷங்கள் கிடைத்தன.
மஹா பெரியவா இன்னொரு வேத வியாசர். அவர் குரல் தெய்வத்தின் குரல். அதை எழுத தேவைப் பட்டவர்  தான் இன்னொரு கணபதி.   ரா.கணபதி.  எங்கும் தெய்வத்தின் குரல் ஒலிக்கிறதே.
''  ஒரு தகப்பனார்  பெண்ணுக்கு நல்ல வரனாகப் பார்த்து கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார் .வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சய மாகிறது. கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக் கொண்டுபோய்விடப்போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்? பெண்ணுக்கு நல்ல வரன்கிடைத்ததே என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கி விடுகிறமாதிரி,  கட்டுசாத கூடை என்று எத்தனை அப்பா அம்மா அழுவதை பார்த்திருக் கிறோம்.  இத்தனைகாலம் வளர்த்த பெண் நம்மை விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும். இவரேதான் வரன் தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன் வாங்கி மனஸாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார். ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனஸை முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது; கண்ணில் ஜலம் கூட வந்து விடும் போல் இருக்கிறது.
முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான். அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல்  வந்து  விடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற   தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது. தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனே  தான்  முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில் எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச் சுத்தமாகிப் பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்துவிட்டது. கரைந்த  பின் பகவானும் இல்லை,பக்தியும் இல்லை. மணப் பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை வருகிற மாதிரி  ''மனப்'' பெண்ணை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.
இதேபோல் 'கிருஷ்ண கர்ணா மிருத'த்திலும் ஒரு சுலோகம் இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது இந்த சுலோகம். ('ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று ஆரம்பிக்கும் அது.) கிருஷ்ண பக்தி அதிகமாக ஆகலீலாசுகரால் ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம், 'இதுவேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல் அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்புகுறைகிறது; சித்த  சுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்கு கிறது. இதுதான் பக்தி! இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம் சித்திக்கிறது. இது இறுதி நிலை.அதற்கான சாமக்கிரியை களையும் கை விட்டு விட்டு மோக்ஷம் பெற வேண்டும் என்கிற போது, இந்தப் பரம பக்தருக்கு மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!
இதேபோல் 'கிருஷ்ண கர்ணா மிருத'த் திலும் ஒரு சுலோகம் இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது இந்த சுலோகம்.
('ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று ஆரம்பிக்கும் அது.) கிருஷ்ண பக்தி அதிகமாக ஆகலீலாசுகரால் ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை.அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம், 'இதுவேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல் அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு குறைகிறது; சித்த  சுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்கு கிறது. இதுதான் பக்தி! இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம் சித்திக்கிறது. இது இறுதி நிலை.
கர்மத்தையோ, பக்தியையோ நாமாக விடவேண்டியதில்லை. பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம், பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே நழுவிப்போகும்.  பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும் என்பதே இல்லை. பக்தி பண்ணிக் கொண்டிருந்தாலே போதும்; தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும். எனவே முக்தி வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும்! கோபால கிருஷ்ண பாரதியார் சொன்னபடி 'பக்தி பண்ணிக் கொண்டிருந்தால்முக்தி பெறலாமே!''' --     திஸ்  இஸ்  மஹா  பெரியவா......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...