Thursday, May 21, 2020

RASA NISHYANDHINI



ரஸ  நிஷ்யந்தினி   J K  SIVAN 
                         
                                   
            '' யார்  என்று எண்ணி எண்ணி  நீ பார்க்கிறாய்?'' 

கோயம்பத்தூரில்  ஒரு வக்கீல். யார்  தெரியுமா?  சென்னை அண்ணாசாலையில்  கஸ்தூரி பில்டிங்ஸ்  என்ற பிரபல  கட்டிடத்தில்  ஹிந்து பத்திரிகையை நிறுவி உலகளவு  புகழ் பெற்ற  கஸ்தூரி ரங்க ஐயங்கார் .(1859-1923).  அவர் பருத்தியூர்  கிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து  கோயம்பத்தூரில்   ராமாயண  ப்ரவசனங்களுக்கு  ஏற்பாடு செய்தார்.  

 மின் விளக்குகள் இல்லாத காலம். ஆறுமணிக்கு பிறகு கரும் கும் என்று எங்கும் இருட்டு. கொலை கொள்ளை வழிப்பறி  எல்லாம் நடக்கும்.  சாஸ்திரிகளின் பிள்ளைகள் நண்பருடன்  கோவையை அடுத்த பேரூர் சிவன் கோவில் சென்று திரும்பும்போது இரவு 10மணிக்கு மேல். வழியில்  ஐயோ அம்மா.....சில பெண்கள்  அழுது கூக்குரலிட்டு கொண்டிருந்தார்கள்.   கிட்டே செல்ல பயம். திருடர்கள் ஆயுதங்களால்  தாக்குவார்கள். 

வண்டிக்காரன் குதிரை வண்டியை நிறுத்த அஞ்சினான்.  வண்டியின் உள்ளே இருந்த  சாஸ்த்ரிகள் ''வண்டியை நிறுத்து''  என்று சப்தித்தார்.  வண்டி அருகே நிற்பதை உணர்ந்த திருடர்கள் அப்படியே ஓடிவிட்டார்கள்.  எல்லோரும் அஞ்சும்போது  சாஸ்திரிகள் வண்டியிலிருந்து இறங்கி அந்த பெண்களை காப்பாற்றி அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு குதிரை வண்டியிலேற்றி கொண்டு சென்றார். அப்புறம் வண்டி கோயம்பத்தூர் திரும்பியது.    இது போல் ஒன்றல்ல பல சந்தர்ப்பங்களில்  சாஸ்திரிகள் தான் எவ்வளவு திட வ்ரதன் தைரியசாலி  ராமபக்தனை எதுவும் எவரும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர் என்ற விஷயங்கள் உள்ளன.

இனி  சாஸ்திரிகளின்  ரஸ  நிஷ்யந்தினியில்  அடுத்த  ஐந்து ஸ்லோகங்கள் அர்த்தம் ரசிக்கலாம். 41-45.

41. अस्य वाग्रूपा वेदा इति त्वम्, 'अस्य महतोभूतस्य निःश्वसितं यदृग्वेदो यजुर्वेदस्सामवेद' इत्यहम्।
அஸ்ய வாக்  ரூபா  வேதா  இதித்வம் , ஆசிய  மஹதோபூதஸ்ய  நி : ஸ்வஸிதம்  யதாக்வேதோ  யஜுர்வேதஸ்ஸாம்வேத  இத்யஹம் :

41.தசரதா ,  ''என் மகன் ராமன் வேத சாஸ்திரங்கள் எல்லாம் கற்றவன் அவன் பேசுவதில் வேத சாரம் இருக்கு    ம் '' என்று சொல்கிறாயே, நான் அறிந்ததைச் சொல்கிறேன் கேள். ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் எல்லாமே ஸ்ரீ ராமனின் மூச்சாகவே வெளிப்பட்டவை. அவன் சகலமும் அறிந்தவன், எல்லாவித சக்தியும் கொண்டவன் என்பது புரிகிறதா?
42. अयं प्रकृतिपरतन्त्र इति त्वम्; प्रकृतिरेतत्पर तन्त्रेत्यहम् ।
அயம் ப்ரக்ருதிபரதந்த்ர  இதி த்வம் :  ப்ரக்ருதிரேதத்பாரா  தந்த்ரேத்யஹம் 

ராமன் மாயை வசப்பட்டவன் என்று நீ நினைத்தால் அது தவறு. மாயையே அவனை நம்பித்தான் இருக்கிறது தசரதா. புரிந்து கொள் ..

43 अयं नर इति त्वम् अय पर इत्यहम् ।।
அயம் நர இதித்வம்  அய பர  இத்யஹம் .  

 இந்த உலகத்திலேயே சிறந்த  மனித பிறவி எடுத்தவன்  உன் மகன் ராமன் என்று பெருமைப் படுகிறாயே. இன்னும் அதிக பெருமைப்பட உனக்கு தெரியவில்லையே  அப்பா.   ஸ்ரீ ராமன்  வெறும்  மானிடப் பிறவி அல்ல. பிறவியே அற்ற அழியாத பரம்பொருள்.  

44. अयं श्यामवर्ण इति त्वम् अयं हेमवर्ण इत्यहम् ।
அயம் ஸ்யாமவர்ணம்  இதித்வம்  அயம்  ஹேமவர்ண  இத்யஹம்.   

ஒரு சின்ன விஷயம் தசரதா . நீ அவனைப் பார்க்கும்போது கருநீல வண்ணனாக பார்க்கிறாய். அவன்  ஒரிஜினல்  நிறம் என்ன தெரியுமா உனக்கு ? புடம் போட்ட தங்க ஒளி . கண்ணைப்பறிக்கும் பிரகாசம். பொன்னொளி. இது எனக்கு தெரியும். 
45. अयं प्रकृतिपुरुषयोरन्यतर इति त्वम्; अयं प्रकृतिपुरुषपुरुषोत्तमेषु अन्यतम इत्यहम् ।
அயம் ப்ரக்ருதி புருஷயோரந்யதர  இதித்வம்;;  அயம் ப்ரக்ருதிபுருஷபுருஷோத்தமேஷு அந்யதம இத்யஹம் .

''தசரதா , ராமன் நீ நினைப்பதுபோல் இந்த ப்ரக்ரிதியில் ஒரு ஜீவன் அல்ல. இந்த ஜீவன்களின் ஒட்டு மொத்த சாரமான பரமாத்மா. புருஷோத்தமன். அது எனக்கு தெரியும்.     

மேற்கொண்டு  கேட்போம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...