Sunday, May 17, 2020

RASANISHYANDHINI



ரஸ  நிஷ்யந்தினி      J K  SIVAN   

நண்பர்களே,  பருத்தியூர் பெரியவா பற்றி நான் அறிந்து கொண்டதே  அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி என்பவரிடமிருந்து. அவர் என்  நண்பர். ரஸ நிஷ்யந்தி பற்றி பெரிய  தலையணை புத்தகம் வெளிவரப்போகிறது.  பெரியவா மணிமண்டப விழாவில் வெளியிடுவார்கள் போல் தோன்றுகிறது.  


அப்புறம்  பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி பரிவாரத்தை  சேர்ந்தவர்களிடமிருந்து  அற்புதமாக அவரது நூற்றாண்டு விழாவில் வெளியிட்ட   ஓம்  சர்வம்  ராம மயம்  என்கிற  இலவச புத்தகத்திலிருந்து நான் அறிந்ததை  தான் சிறு சிறு பகுதிகளாக சொல்கிறேன்.   இந்த தொடர் முடிவில்  ஒரு விலாசம் தருகிறேன். அதை அணுகி இலவசமாக  மேலே சொன்ன புத்தகத்தை பெறலாம். 

ஸ்ரீ பருத்தியூர் பெரியவா ஒரு அற்புதர்.  அவரைப்பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு மேலே தொடர்வோம் 
பெருமாள் கோவில் பிராஹாரம் , குளம் எல்லாம் பெரிது படுத்தப்பட்டு  நிர்மாணிக்கப்படுவதை நேரே நின்று தினமும் பெரியவா  மேற்பார்வை யிடுவார். அப்போது திருச்சேறையில்  வசித்தார். காளைமாட்டு வண்டியில் தினமும் பருத்தியூர் வருவார். ஒரு நாள் வண்டி குடை சாய்ந்து விழுந்தது. பிறகு பல்லக்கில் வர ஆரம்பித்தார். 
பல்லக்கு தூக்குபவர்களுக்கு  மாதாந்திர சம்பளம் கொடுப்பர். 

''சாஸ்திரிகள், எதுக்கு மாச சம்பளம் தருகிறீர்கள்.  என்றைக்கு பல்லக்கு தூக்குகிறார்களோ அன்று கூலி கொடுத்தால்  போதுமே?''

''உங்களுக்கு அந்த ஏழைகள் கஷ்டம் தெரியாது. மாதம் முழுதும் சாப்பிட மாதாந்திர சம்பளம் தான் வசதி.  என்றோ கூலி வாங்கி அன்று அந்த குடும்பம்  பசியாறினால் போதுமா? சொந்தமாக நிலம் வாங்கி பெருமாள் கோவில் விஸ்தரிக்கப்பட்டது. கட்டுமான வேலைக்கு  காண்ட்ராக்ட்  இப்போது போல் கிடையாது. தினக்கூலி. ஆகவே அன்றாடம் செல்வார்.  வேலை  செய்யும் சித்தாள் பெண் ஒருத்தி கிழிந்த புடவையை முடிந்து கொண்டு வேலை செய்வதை பார்த்து கண்ணில் ரத்தம் வந்தது பெரியவாளுக்கு.  வீட்டிற்கு சென்றவர் கொடியில்  மடியாக மனைவி  உலர்த்தியிருந்த மாற்று புடவையை எடுத்து அந்த பெண்ணுக்கு கொடுத்து விட்டார்.   அவளுக்கு கொள்ளை சந்தோஷம். மனதார வாழ்த்தமாட்டாளா?

வீட்டில் மனைவிக்கு மாற்று புடவை இல்லை. வருவதை எல்லாம் தானம் தர்மம் என்று செய்பவர் ஆயிற்றே. 

''என்னது இது எனக்கு மாற்று புடவை இல்லாமல் செய்துவிட்டீர்களே?''   என்ற மனைவிக்கு ''எல்லாம் ராமன் அருள்வான் '' என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.  ஆச்சர்யமாக அன்று பிரவசனம் முடிந்தபின் யாரோ தட்டு நிறைய பழங்கள், பணம், பட்டு வேஷ்டி, புடவைகள் சகிதம் வீட்டுக்கு வந்து வணங்கி அளித்துவிட்டு சென்றார்.

ராமன் தந்தானா இல்லையா, நமக்கு தருவானா இல்லையா?  இனி பருத்தியூர் பெரியவாவின்   ரஸ  நிஷ்யந்தி 21-25 வரை ரசிப்போம்: 
  
21. अयं कर्मपरतन्त्र इति त्वम्; अयं स्वतन्त्र इत्यहम् ।
அயம் கர்மா பரதந்த்ர இதித்வம்;  அயம்  ஸ்வதந்த்ர இத்யஹம் .
                                                                   
 ராமன் மற்றவர்களை போல் கர்ம வினைகளின் பயனை துய்ப்பவன் அல்ல தசரதா, அவனை கர்மா நெருங்காது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன். அகர்மன்.

22. अयं प्राकृतशरीर इति त्वम्, 'न भूतसङ्घ संस्थानो देहोऽस्य परमात्मनः' 'न तस्य प्राकृता मूर्तिः मांसमेदोऽस्थिसम्भवा' इति वचनेनाप्राकृतशरीर इत्यहम् ।।

அயம்  ப்ராக்ருத சரீர இதித்வம்.; ந பூத சங்க்ய  ஸம்ஸ்தானோ  தேஹோஅஸ்ய  பரமாத்மன்;  ந தஸ்ய  பிராக்ருதா மூர்த்தி.  மாம் சமேதோஸ்தி  சம்பவா  இதை வசனே  நா ப்ராக்ருத  சரீர இத்யஹம் .

 ராமனின் தேஹம்  நம்மைப்போல் பஞ்சபூதங்களால் உருவானதா? அவன் உடலில் நமக்கு இருப்பது போல்  எலும்பு, சதை தோலா??    நல்ல வேடிக்கை இது. பஞ்ச பூதங்களின் சிருஷ்டி காரணன் அவன். அவன் அது  வாகுமா? அவை தான் அவனாகும்.   அருவம் உருவம் இரண்டும் அவனே.
23.  अयं मृत्युवश्य इति त्वम्, 'यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदनः । मृत्युर्यस्योपसेचन क इत्था वेद यत्र सः' इति मृत्युमुपसेचनीकृत्य ब्रह्मक्षत्रोपलक्षितं सर्व चराचरमपि ओदनं भक्षयित्वा विश्रान्तः न च कालवशानुग इति कालस्यापि कालभूतं परं तत्त्वमित्यहम ।।

 அயம் ம்ருத்யுவஸ்ய  இதித்வம்  யஸ்ய ப்ரம்ம சா க்ஷத்ரம்  சா உபே  பாவத்தை  ஓதன:  ம்ருத்யுர் யஸ்யோப ஸேசன  க இதய வேத யத்ர ஸ :  இதை ம்ருத்யு உப ஸேசநிக்ருத்ய  பிரமக்ஷத்ரோ பலக்ஷித ம்  சர்வ சராசர நபி ஓதனம்  பக்ஷயித்வா  விஸ்ராந்த:  ந ச காலவசாகுண  இதை காலஸ்யாபி  கால பூதம்  பரம்  தத்வமித்யஹம்:
    
  23 ராமன் காலத்தினால் கட்டுண்டவன் இல்லை. வயது எண்ணிக்கை கூடுபவன் அல்ல. அவன் உபநிஷ தங்கள் அசைவைப் பற்றி கூறும் ப்ரம்மத்தையும் அசையாததை பற்றி கூறும் க்ஷத்ரத்தையும் தயிர்சாத மாக உண்பவன். அதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் எதுவா? வேறு என்ன ம்ருத்யு எனும் காலம், மரணம் தான். பிறப்போ இறப்போ இல்லாதவனை இவை என்ன செய்யும் தசரதா ?

24  अयं कारब्धशरीर इति त्वमः अयं स्वेच्छारब्ध शरीर इत्यहम्।
அயம் காரப்த சரீர இதித்வம்.;  அயம்  ஸ்வேச்சாரப்த  சரீர இத்யஹம் 

'' தசரதா, ராமன் ஏதோ கர்மா வினைப்பயனால் உனக்கு புத்திரனாக பிறந்ததாக நீ நினைத்துக் கொண்டிருக்
கிறாய். உண்மையில் ராமனாக உன் இல்லத்தில் பிறந்தது அவன் எடுத்த முடிவு. தெய்வத்தின் சங்கல்பம்.
அதை நீ உணரமாட்டாய்.  

25. अयं बाह्यरिपुदलने चतुर इति त्वम्; अयम् आन्तररिपुदलने समर्थ इत्यहम् ।\
அயம் பாஹக்ரிபுதலனே சதுர இதித்வம்;  அயம்  ஆனந்தசரீரபுதலனே சமர்த்த இத்யஹம் :

 25. ராமன் பராக்கிரமன், அவனால் வெளியே உள்ள எதிரிகளை மட்டும்  வெல்ல முடியும் என்று நீ நம்புகிறாய். உனக்கு தெரியுமா அவன் நமக்குள்ளே இருந்துகொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் காம க்ரோத மோகம்  போன்ற  எதிரிகளையும் அழிக்கக்கூடியவன் என்று எனக்கு தெரியும் தசரதா.

தசரதன் அசந்து போகிறான். ஆச்சர்யத்தில் ஆழ்ந்து பிளந்த வாய் மூடாமல் சிலையாக நிற்கிறான். அவன் முழு கவனமும் அடுத்து விஸ்வாமித்ரர் தனது அருமை மகன் ராமனைப்பற்றி என்ன சொல்லப்போகிறார் என்பதை கேட்பதிலேயே இருக்கிறது.

 பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரியார்  அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று ஆவல் மேலிடுவதில் என்ன ஆச்சர்யம். எவ்வளவு அடக்கம் நற்பண்பு. ஸ்ரீ பருத்தியூர் பெரியவா. விஸ்வாமித்ரர் சொன்னாரோ சொல்லவில்லையோ, அவர் சொல்வதாக தன்னுடைய ஞானத்தை ராமன் பற்றிய சகல விபரங்களையும் ஒவ்வொன்றாக ஸ்தோத்ரமாக பாடியிருக்கிறார் பருத்தியூர் பெரியவா.

பெரியவாளை நாளை சந்திப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...