Friday, May 22, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக் கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN

61  அவன் வேண்டாம் என்றேனோ
ஆழ்வானைப் போலே.

ஆழ்வார்கள்  என்றால்  பதினோரு பேரைத்  தான் டக்கென்று நினைக்க தோன்றும். பன்னிரண்டாவது ஆழ்வார்  ஆண்டாளை  ஆழ்வாராக நினைப்பதை காட்டிலும் தெய்வமாக நினைத்து பழக்கமாகி விட்டது. அதேபோல் ஆழ்வான் என்றால் ஒருவர் தான் ... கூரத்தாழ்வான்.
திரேதாயுகத்தில்  ராமனுக்கு லக்ஷ்மணன் செய்த சேவைகளை  எண்ணிப்பார்க்கவே முடியாது.  பதினாலு வருஷமும் ஒரு நாள் கூட   கண் துஞ்சாமல்  ராமனுக்கு பணிவிடை செய்வதில்  கருமமே  கண்ணாய் இருந்தவன்  லக்ஷ்மணன்.  ராமர்  எப்படியாவது லட்சுமணனுக்கு நன்றிக்கடன் தீர்க்க மனதில் எண்ணம் கொண்டார். தக்க சமயம்  வந்தது.  ஆதிசேஷன் லக்ஷ்மணனாகி, பிறகு கலியுகத்தில் ராமானுஜராக உரு வெடுத்தார். ராமர்  அப்போது  லட்சும ணனாகிய   ராமானுஜ ருக்கு   சேவை செய்யும்  கூரத்தாழ்வானாக உருவெடுத்தார்  என்பார்கள்.
ராமானுஜருக்கு பதிலாக தனது உயிரை பயணம் வைத்து  சோழமன்னன் முன் நின்று கண்களை இழந்த  கூரேசன்  வழியில் , தன்னோடு  கண்களை  இழந்த   பெரிய நம்பிகளையும்   இழந்ததால்,   ராமானுஜர்  மேல்கோட்டை  திரு நாராயண புரத்தில் இருந்ததாலும்  திருமலை ஆண்டான், திருவரங்க பெருமாள் அரையர்  வேறு மறைந்த தாலும் தனிமைப்பட்டார்.  திருக்கச்சி   நம்பிகளும் விண் எய்தி விட்டார் .கூரேசருக்கு ஸ்ரீ ரங்கம் வெறிச் சோடியது போல் தோன்றியது . மனம் கலங்கிய கூரேசர் ரங்கநாதனே கதி என்று தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்ற போது ஆலய வாசலிலே காவலர்கள் தடுத்தனர்.
''ஏன்  நான்  அரங்கனை தரிசிப்பதை  செய்கிறீர்கள்?
''நீங்கள்  ராமானுஜர் என்ற வைஷ்ணவரை குருவாக பின்பற்றுபவர் அல்லவா?'
'நான் அப்படி அவரை குருவாக ஏற்க பாக்கியம் செய்தவன்''
''அதனால் தான் உங்களை உள்ளே  அனுமதிக்க இயலாது.''
''என்னய்யா சொல்கிறீர்கள்?'
'அரசனின் ஆணை. யார் ராமானுஜரைத் தம்முடைய குரு அல்ல என ஒப்புக்கொள்கி றார்களோ அவர்கள் மட்டும் தான்  ஆலயத்தில் அனுமதிக்கபடுவர்".
“ஓஹோ.   அப்படியா சேதி.  ஐயா ! உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் ராமானுஜரை இகழ்ந்து புறக்கணித் துவிட்டு கூரேசனுக்கு அரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டு மல்ல எந்த ஜென்மத்திலும் தேவையில்லை” நான் திரும்பி போகிறேன்''
வெகுண்ட கூரேசர் வீடு திரும்பினார்
'' ஆண்டாள், பசங்களைக் கூப்பிடு. அரங்க னைப்  பார்க்க  முடியாத ஸ்ரீரங்கம் இனி நமக்கில்லை. வேறெங் காவது செல்வோம்”.
அவர்கள் அவ்வாறே திருமாலிருஞ் சோலை (மதுரை அருகே) சென்று குடியேறி தனிமையில் வாழ்ந்தனர். காலம் மாறியது. கிருமி கண்ட சோழன் மாண்டான். ஆட்சி மாறியது. பல வருஷங்கள் ஓடிவிட்டது.
நூறு வயது தாண்டிய   ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு. பிரபந்தங்கள் பாசுரங்கள் எதிரொலிக்க ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ கூரேசனை தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார். ராமானுஜர் கண்களில் காவேரி. கூரேசருக்கோ கண்ணே இல்லையே.!! விழியற்று பேச்சற்று தடுமாறித் தத்தி ராமானு ஜரின் கால்களில் விழுந்தார். குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது. பாசத்தோடு கூரேசரைத் தொட்டு தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர்.
“என் அருமை கூரேசரே, என்ன செய்தீர் நீர், எனக்காகவும் ஸ்ரீ வைஷ்ண வத்துக்காகவும் உமது கண்களையே தியாகம் செய்த மஹாபுருஷரே !

திருமாலிருஞ்சோலைக்குச் சென்று, 12 வருடங்கள் அங்குள்ள கள்ளழகருக்கு சேவை புரிந்தார். சோழ மன்னனின் இறப்புக்குப் பின், ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ரங்கம் திரும்பிய பின்னரே கூரத்தாழ் வானும் ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.
திருக்கோளூர் அம்மாள்  உலக விஷயங் கள் அனைத்தும் தனது கைக்குள் வைத்திருப்பவள்  அல்லவா ,   ராமா நுஜரிடமே   பதில் சொல்கிறாள்
:''ஸ்வாமி,   கூரத்தாழ்வான் போல், ஆச்சார்ய சம்பந்தத்திற்கு மதிப்புக் கொடுத்து, அரங்க னையே வேண்டாம் என்று கூறினேனா?”  அந்த  மாதிரி ஆசார்ய பக்தி எள்ளளவு என்னிடம் உண்டா, நான் எப்படி இந்த புண்ய க்ஷேத்ரம் திருக் கோளூரில் வசிக்க தகுதி உள்ளவள் ?  என்று கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...