Tuesday, May 19, 2020

RASA NISHYANDHINI





ரஸ  நிஷ்யந்தினி J K SIVAN
                                                             
          நான்  அறிவேன்  நீ அறியாய் 

ராமன்  என்று சொன்னாலே  ஏதோ நெருங்கிய சொந்தமாக நினைக்கும் வர்க்கம் நாங்கள். எங்கள் குடும்பத்தில் அநேகர் எல்லோரும்  ஏதோ ஒரு ராமன் பெயர் கொண்டவர்கள். காலம் மாறியபோது புதிய தலைமுறைகளில் வினோத பெயர்கள் இருந்தால்  ஆணிவேர்  ராமன் தான்.  என்னை எதற்காக  பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் ராமர் வசனங்கள்  கவர்ந்தது என்பதற்கு  ஒரு முக்கிய காரணம் என் அம்மா வழி தாத்தா..photo attached.

என்னுடைய அம்மா வழி தாத்தா ப்ரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதிகள், காஞ்சி பரமாச்சார்யா மகா பெரியவாவிடம் ''புராண சாகரம் '' என்ற விருது பெற்ற கம்பராமாயண பிரசங்க உபன்யாசகர். தமிழ் வித்துவான். கண் பார்வை இல்லாத போதும் நல்ல ஞாபக சக்தி . எல்லா பாடல்களும் தமிழ் நூல்களும் அத்துபடி. என் முன்னோர்களில் ஐந்து ஆறு தலைமுறையாக ராமாயண பிரசங்கத்தாலே உஜ் ஜீவனம் செய்தவர்கள். அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை தஞ்சாவூர் ராஜா அரண்மனையில்,  மற்றும் அநேக சமஸ்தானங்களில் ஒலிக்க செய்தவர்கள்.  மற்றும் அநேக ஜமீன்தார்கள் சபையில் சங்கீத உபன்யாசம் செய்து சன்மானம் பெற்று வாழ்ந்தவர்கள். ஆஸ்தான புலவர்கள். எனவே பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் ரஸ நிஷ்யந்தினி என்னை கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை. நிச்சயம்  எங்கள் தாத்தாவிற்கு  பருத்தியூர் பெரியவாளை தெரிந்திருக்கும். சம காலத்திய  ராமாயண ப்ரவசன கர்த்தாக்கள் இல்லை. தெரியுமா என்று கேட்க யாரும் அப்போது இல்லை,  இப்போது கேட்க அவர் இல்லை.

 அயோத்தியில் அன்று போல் இது வரை என்றுமே ஆச்சர்யம் நிகழ்ந்ததில்லை. வெகுநேரமாக கையைக் கட்டிக்கொண்டு சக்கரவர்த்தி தசரதன் கண்ணிமைக்காமல் சிலையாக பார்த்துக்கொண்டிருக்க அவனது ஆசனத்தில் கௌசிகர் எனும் பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் அமர்ந்து கொண்டு அவனுக்கு ராமனைப் பற்றிய ரகசியங்களை ஒவ்வொன்றாக கூறி வருகிறார். அவையில் வசிஷ்டர் முதலாக எல்லோரும் ஆனந்தமாக நம்மைப் போல் கேட்டுக் கொண்டி ருக்கி றார்கள். நூறு காரணங்கள் சொல்கிறார்  விஸ்வாமித்ரர்  என்று  தானே  விஸ்வாமித்ரராக மாற்றம் செய்துகொண்டு அற்புதமாக இந்தியாவெங்கும் சுற்றுப்பிராயணம் செய்திருக்கிறார்.   
இன்று   ரசனிஷ்யந்தினியில்  31-35 ஸ்லோகங்களை ரசிப்போம். முப்பத்தி ஐந்தாவது காரணத்தை இப்போது விஸ்வாமித்ரர் சொல்வதால் நாமும் ஆணி அடிக்கப்பட்டு அங்கே நிற்கிறோம் :

31. अस्य योनिमहं जानामीति त्वमः 'तस्य धीराः परिजानन्तियोनिम्' इत्यहम् ।
அஸ்ய யோனிமஹம் ஜானாமிதித்வம் ;  தஸ்ய தீரா ; பரிஜானந்தி யோனிம் இத்யஹம்

31. இன்னாருக்கு புத்ரன், இன்னாருக்கு பேரன் என்று ராமனின் விருத்தாந்தத்தை சொல்கிறாயே தசரதா . அவ்வளவுதானா? அவன் எடுத்த பிறவிகள், எடுக்கப்போகிறவை பூரண ஞானிகளால் மட்டுமே உணரமுடியும்.I
இதை நீ  அறியாய். நான் அறிவேன்.

 32. अस्य मानुषी काचन पत्नी भवित्रीति त्वम्; 'ह्रीश्च ते लक्ष्मीश्च पढ्यौ' इति ह्रियं लक्ष्मी च पत्नीत्वेन प्राप्तोऽयमितिं नित्यसिद्धह्री लक्ष्मीपत्नीक इत्यहम् ।।
அஸ்ய மானுஷி  காசன பத்னி  பவித்ரிதி  த்வம் ;  ஹிச்சதே லக்ஷ்மிஸ்ச பட்யோ இதி   ஹியம்  லக்ஷ்மி  சா பத்னித்வேன ப்ராப்தோயமிதிம்  நித்யசித்த லக்ஷ்மி பத்னிக இத்யஹம்  
   
 தசரதா , ஏதோ ஒரு அரசனின் புத்ரியை அவனுக்கு மனைவியாக நிச்சயித்து கல்யாணம் பண்ணி விடலாம் என்று நீ உத்தேசம் பண்ணுகிறாய்.  . மஹா லட்சுமி அவனது பத்னியாக இருக்கும் இடத்தில் வேறு யாரை அமர்த்த முடியும் என்று நீ உணரமாட்டாய்.  அது எனக்கு  தெரியும்.
33. अयमेकशिरा इति त्वम्; अयं सहस्रशीर्षा पुरुषः इत्यहम् ।
அயமேகஸிரா  இதித்வம் ; அயம்  சஹஸ்ரசீர்ஷா புருஷ ; இத்யஹம்  

 ராமன் என்றால் நம் எல்லோரையும் போல்   கழுத்தின்  மேல்  ஒரு தலை  அதற்கு மேல் அழகிய பொன்னாலான கிரீடம் என்று தான் உனக்கு தெரியும். தசரதா  புரிந்து கொள். இந்த உலகத்தில் எத்தனை உயிர்களை அவன் படைத்து காக்கின்றானோ அத்தனை தலைகள் உள்ளவன் ராமன். அவ்வளவும் அவன் உடலே. சும்மா  கணக்குக்கு  ஆயிரம் தலைகள் கொண்டவன் என்று சொல்கிறோம். அது ஆயிரமல்ல. கணக்கிலடங்காதது. இது எனக்கு தெரியும்.

 34.  अयं मर्त्यस्येशानः इति त्वम् अयममृतत्वस्य ईशान इत्यहम् ।
அயம் மத்யர் ஸ்யேஷான்:  இதி த்வம் ;   அயமம்ருதத்வஸ்ய  இன்ஸான் இத்யஹம் .
 
இதோ  இந்த அழியும் உலகத்தில்  ஒரு  நாட்டின்  ராஜாவாக ராமனை நீ நினைத்து சந்தோஷப்படுகிறாய் தசரதா. ஸ்ரீ ராமன் நித்ய அநித்யமான எல்லாவற்றிற்கும், சகலத்திற்கும் அவனே எஜமானன். இதை நான்  அறிவேன்.

35. अस्य द्विपादत्वमिति त्वम्, 'त्रिपादस्यामृतं  दिवि' इत्यहम्।
அஸ்ய  த்விபாதத்வமிதி த்வம் .  த்ரிபாதஸ்யாம்ருதம் தீவி இத்யஹம்

''தசரதா , ராமன் எல்லோரையும் போல இரு கால்களால் இந்த பூமியில் நடக்கும் பாதசாரி என்றா உன் எண்ணம்? நான் அறிவேன் அவனை. இந்த அகில உலக உயிர்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தாலும் அவனது உருவத்தின் கால் பங்கு தேறாது என்றபோது அவனது உருவத்தின் முக்கால்பங்கு விண்ணுலகை கடந்து அழியாது நிற்பதை உணரமுடிகிறதா உன்னால்? (புருஷ சூக்தம் சொல்கிறது  இதை)    




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...