சந்தேக நிவர்த்தி J K SIVAN
' மொபைல் போன் ''பிரிந்தாவனமும் நந்தகுமாரனும் '' ஒலித்தது. என் போனில் அது தான் ரிங் டோன் .
''சிவன் பேசறேன். யார் பேசறேள்?''
' அஸ்வத நாராயணன் ஸார் . ஞாபகம் இருக்கா ?
'' ஓ ஓ சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் பக்கத்துலே .......''
''ஆமாம். இப்போ நேர எங்கேயும் போக வர முடியாத நிலை. அதனாலே கேக்கறேன். கீதை படிச்சா புரியவே இல்லையே. அர்த்தம் போட்டிருக்கு. ஒரு புஸ்தகம் தந்தீர்கள். படிக்கும்போது புரியற மாதிரி இருக்கு .....படித்தால் மட்டும் போதுமா?
''போதுமே ! ஒரு கதை போன் லேயே சொல்றேன் கேளுங்கோ''
கங்கை நதிக்கரை ஓரத்தில் ஒரு குடிசையில் வெங்கோப ராவ், அவர் பேரன் ரகோத்தம ராவ் ரெண்டு மட்டும் வாழ்ந்தனர்.

“ தாத்தா!! எப்பவும் நீ கீதை படி படி என்கிறாய். நானும் நிறைய தடவை படிக்கிறேன். ஒண்ணும் புரியலையே. நீயானால் படித்துக் கொண்டே இரு புரியும் என்கிறே. புரியாமல் படித்து என்ன பிரயோஜனம் ?''
வெங்கோப ராவ் பதில் சொல்லல. குமுட்டியைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். (ரொம்ப ஆச்சாரமான குடும்பங்களில் காஸ் அடுப்பு உபயோகிப்பதில்லை. இன்னும் சில வீடுகளில் சமையல் கட்டில் குமுட்டி உயிர் வாழ்கிறது)
கை எல்லாம் கருப்பா ஒரே அழுக்கு கரித்தூள், எதிரே கரிப்பொடி , நிரம்பிய, ஒரு ஓட்டை பித்தளை பக்கெட்.
“” ரகு!! இந்தா இந்த பக்கெட்ல நிறைய தண்ணீர் பிடித்துக் கொண்டுவா.ஓடு !!
ரகு வீட்டின் பின் புறம் சென்று நீர் மொண்டு உள்ளே வருவதற்குள் நீரெல்லாம் ஒழுகி பக்கெட் காலி.
“போ! மீண்டும் போய் நீர் கொண்டுவா”” என்றார் தாத்தா. ஒவ்வொருமுறை நீர் மொண்டுவரும்போதும் ஓடி வேகமாய் வந்தபோதிலும் பக்கெட் நீரெல்லாம் ஓட்டை வழியாய் வெளியேறியது.
“ தாத்தா!! வேறே பக்கட் குடு. தண்ணீர் கொண்டுவரேன்.” – இது பேரன்
“ ஏன் நீ இந்த பக்கெட்லேயே கொண்டுவா” - இது தாத்தா.
கடைசியில் வெறுத்துப் போய் பேரன் ரகோத்தம ராவ் தாத்தா கிட்ட சொன்னான்.
“ ஏ, தாத்தா! இந்த ஓட்டை பக்கெட்லே எத்தனை தடவை தண்ணீர் ரொப்பினாலும் ரொம்பவே ரொம்பாது . தண்ணீர் மொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை”.
“ஏன் பிரயோஜனம் இல்லை என்கிறே. பக்கெட் உள்ளேயும் வெளிலேயும் பார்”
பலமுறை கங்கை நீரில் மூழ்கி நீர் நிரப்பியதால் அந்த பித்தளை பக்கெட் உள்ளேயும் வெளியேயும் இருந்த அழுக்கு, கரித்தூள், கறை எல்லாம் போய் பளிச்சென்று மினுமினுத்தது.
“அஸ்வத நாராயணன், நீங்க கேட்டதற்கும் இது தான் பதில். எத்தனை முறை படித்தாலும் புரியலை என்றாலும் இந்த கதையிலே வருகிற பித்தளை ஓட்டை பக்கெட் மாதிரி கீதையை படிப்பதால் அர்த்தம் புரியாவிட்டாலும் அது படிப்பவனை உள்ளும் புறமும் மாற்றிவிடுமே. இதுவே போதுமே. இது தான் பிரயோசனமே! இதுக்கு மேலே என்ன வேணும். ''

ஸார் பிரமாதம். அதுக்கு தான் உங்க கிட்டே வரது.
அஸ்வத்தநாராயணனுக்கு சொன்னது தான் நண்பர்களே உங்களுக்கும். இப்போ புரிகிறதா ஏன் தினமும் கீதை படித்துக்கொண்டே வா என்று பெரியவர்கள் நமக்கு சொன்னது?''
கண்ணனின் கீதை காலத்தால் அழியாதது. அனைத்து வேதாந்தங்களையும் தத்துவங்களையும் அதனுள் பொருத்தி இறைவன் வாயால் உரைக்கப்பட்டது.!!! வெங்கோப ராவ் ரகோத்தம ராவை உள்ளும் வெளியும் பளபளக்க வைத்தார். ரகோத்தமராவை போலவே அஸ்வத்த நாராயணனும் இப்போதெல்லாம் கீதை புத்தகத்தை கீழே வைப்பதேயில்லை என்று கேள்விப்பட்டேன்.

No comments:
Post a Comment