வைணவ ஆச்சார்யர்கள் J.K. SIVAN
யாமுனாச்சார்யார் - 2
ராஜாவின் அரண்மனையில் இதுவரை கண்டிராத கூட்டம். பொங்கிவழிந்தது. எல்லோருக்கும் பேராவல். ''என்ன மதம் பிடித்த புலவன் கோலாஹலனை ஒரு சிறு பையன் எதிர் கொள்ள போகிறானா? ஐயோ அந்த சிறுவன் இறக்கப்போவதை நாம் காண போகிறோமா? இல்லை இல்லை, அந்த பையன் அவ்வளவு தைரியமாக இந்த மாபெரும் அரசவை பண்டிதனை போட்டியில் சந்திக்கப்போகிறான் என்றால் ஏதோ அவனிடம் அதீத சக்தி இருக்கவேண்டும் அல்லவா. அதைதான் நான் இன்று கண்ணால் காணப்போகிறோம். அதிசயம் ஒன்று நடக்கப்போகிறது'' . சேச்சே இது யானைக்கும் பூனைக்கும் உண்டான ஒரு போட்டி. ஏதோ பொழுது போகட்டும் '' என்றெல்லாம் மக்கள் பேசினார்கள். அனைவர் பார்வையிலும் ஒரு எதிர்பார்ப்பு. அச்சம். .
''ராணி, இதோ பார் நம் கண் முன்னே இந்த எலிக்குஞ்சு பூனையிடம் மோதி இரையாவதை'' என ஏளனமாக சிரித்தான் பாண்டியன்.
''இல்லை பிரபோ, எனக்கு அப்படி தோன்றவில்லை. ஆனானப் பட்ட மகா பலி சக்ரவர்த்தி கூட இப்படித் தானே அந்த நாராயண வாமனனைப் பார்த்ததும் தப்பு கணக்கு . இந்த பிள்ளை சாதாரணன் இல்லை என்று எனக்கு படுகிறது. ஒரு சிறு பொறித்தீ பஞ்சு மலையையே சாம்பலாக்கி விடுமல்லவா?'' என்றாள் ராணி.
''அதெப்படி அவ்வளவு நம்பிக்கை உனக்கு? உண்மையிலேயே நமது கோலாஹலனை பஞ்சு மலை என்றா சொல்கிறாய் இந்த சிறுவன் அவனை வெல்வான் என்கிறாயா? உனக்கும் எனக்கும் ஒரு சிறு போட்டி. நீ என்ன பந்தயம் வைக்கிறாய் சொல்?'' என்றான் பாண்டியன்.
''பிரபு, நிச்சயம் இந்த சிறுவன் ஜெயிப்பான் என என் உள்மனம் சொல்கிறது. ஒருவேளை இந்த சிறுவன் தோற்றால் நான் உங்கள் வேலைக்காரிகளில் கடைநிலையானவளுக்கும் வேலைக்காரியாகிறேன்.''
''ஆஹா என்ன நம்பிக்கை உனக்கு. ரொம்ப பெரிய ஆபத்தான பணயம் வைத்து விட்டாய். சரி ராணி, நானும் அதற்கேற்றவாறு உன்னிடம் ஒரு பணயம் வைக்கிறேன். இந்த சிறுவன் ஜெயித்தால், எனது ராஜ்யத்தில் பாதி அவனுக்கு தான். அவனும் நானும் சரி சம ராஜாக்கள் . உனக்கு திருப்தியா?''
ஓஹோ என்று பேரிரைச்சல். மேள தாளங்கள் ஒலிக்க அரண்மனை வாயிலில் ஒரு பல்லக்கு வந்து இறங்கியது. யாமுனாச்சர்யார் இறங்கி உள்ளே நடந்து வந்தார். கோலாஹலன் சிறுவன் யாமுனாச்சாரியாரைப் பார்த்து கெக்கலித்தான். சிரித்தான். ''ஓஹோ இவர் தான் என்னை ''ஆள வந்தாரோ?'' (என்னை ஜெயிக்க வந்தவரோ?') என்று கேலி செய்தான்.
ராணி பதில் சொன்னாள். '' ஆமாம் கோலாஹலரே ''உம்மையும் நம்மையும் '' ஆள வந்தார்' என்று சூடாக பதில் கொடுத்தாள் .
போட்டி ஆரம்பித்தது. ஸம்ஸ்க்ரித இலக்கணத்தில் சில கேள்விகள் கேட்டான் முதலில் கோலாஹல. மற்றவர்களால் எளிதில் பதில் சொல்ல முடியாத நுட்பமான கேள்விகள். ஆனால் பளிச்சென்று பதில் சொன்னார் யாமுனாசார்யார். அடுத்து நிரடலான பதங்களுக்கு அர்த்தம். சர்வ சௌலப்யத்தோடு பதில் வந்தது.
கோலாஹலனுக்கு வியர்த்தது. முகத்தை துடைத்துக்கொண்டான். குரல் கொஞ்சம் நெகிழ்ந்தது.
''என்ன பண்டிதரே, சிறுவன் என்பதற்காக என்னிடம் சுலபமான கேள்விகளைக் கேட்கிறீர்களோ?அஷ்டாவக்ரன் என்னை விட சிறியவன் தான் ஐயா, ஜனகர் அரண்மனையில் பண்டிதன் பந்தியை தோற்கடித்தபோது, ஞாபகம் இருக்கிறதா? ஒருவேளை ஞானம் உருவத்தில் தான் என்று நீர் நினைத்தால், குட்டையில் கிடக்கும் எருமை உங்களை விட பெரிய பண்டிதன், ஞானி! புரிகிறதா ? '' என்றான் சிறுவன் யாமுனாச்சார்யர்.
அரசன் கை தட்டினான். ''சபாஷ், பையா இப்போது உன் முறை. நீ கேள்வி கேள். பண்டிதர் பதில் சொல்லட்டும்'' என்றான் அரசன்.
''அப்படியே மகாராஜா, பண்டிதரே உம்மிடம் மூன்று விஷயம் சொல்வேன். அதை தவறென்று நிரூபித்தால் நான் தோற்றவன் என்று ஒப்புக் கொள்கிறேன், சரியா?'' என்றார் யாமுனாசார்யார்.
நெஞ்சில் கலவரத்தோடு கண்களில் பயம் தோன்ற பண்டிதன் தலை ஆட்டினான்.
யாமுனாச்சார்யர் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். என் கேள்விகள் தவறானவை என்று நிரூபிக்கவேண்டும். முடியுமா உம்மால்
1 முதலாவது. உமது தாய் ஒரு மலடி அல்ல. இதை தவறு என்று நிரூபிக்க முடியுமா உம்மால்?''
பண்டிதன் விழித்தான். எப்படி இதை தவறென்பது? என் தாய் மலடி என்றால் நான் பிறந்து இந்த சிறுவனிடம் அகப்பட்டுக்கொண்டு இவ்வளவு அவதிப் பட மாட்டேனே'' என நினைத்தான். பேசாமல் இருந்தான். சபை அவன் அமைதியை ஆவலாக பார்த்தது.
'' எங்கே பதில்? - யாமுனாச்சார்யரின் கேள்விக்கு கோலாஹலனிடம் பதில் இல்லை.
இனி அடுத்த ரெண்டு கேள்விகள்.
No comments:
Post a Comment