துளசிதாசரும் வால்மீகியும் ராமனது சரித்ரத்தை ஒரே கோணத்தில் பார்த்தவர்களில்லை . இராமனை வனவாசத்துக்கு அனுப்புவதற்காக கைகேயி தன் கணவன் தசரதனை ரொம்ப படுத்துகிறாள். நேரில் இருந்து பார்த்தது போல் நீளமாக துளசி தாசர் இந்த வாக்குவாதத்தை ரெண்டு பக்கமும் பலமான விவாதங்க
ளுடன் விவரிக்கிறார்.
இராமசரிதமானசாவைத்தவிர துளசிதாசர் ஐந்து ஆறு நூல்கள் படைத்திருக்கிறார் எல்லாம் ராம சம்பந்தமானவை தான்; அவருக்கு எப்போதுமே ராம ஞாபகம் தானே.
வடக்கே தோஹா என்றால் சிறு கவிதைகள். அரபு நாட்டில் வேலைக்கு செல்கிறார்களே அந்த இடம் இல்லை. இந்த தோஹா மறுமைக்கு உதவுவது.இப்படி 573 தோஹா மற்றும் ''சோர்தா'' கவிதைகள். கபிட்டா இராமாயன் அல்லது கவிதாவாலி எல்லாம் நம்மால் படிக்க முடியாது. படித்து யாராவது அர்த்தம் சொன்னால் கைகட்டி கேட்கலாம்.
வடக்கே தோஹா என்றால் சிறு கவிதைகள். அரபு நாட்டில் வேலைக்கு செல்கிறார்களே அந்த இடம் இல்லை. இந்த தோஹா மறுமைக்கு உதவுவது.இப்படி 573 தோஹா மற்றும் ''சோர்தா'' கவிதைகள். கபிட்டா இராமாயன் அல்லது கவிதாவாலி எல்லாம் நம்மால் படிக்க முடியாது. படித்து யாராவது அர்த்தம் சொன்னால் கைகட்டி கேட்கலாம்.
இராமனின் கதையை கவிட்டா, கானக்ஷாரி, சௌபாய் மற்றும் சவாய்யா சீர்களில் சொல்கிறாராம். நம்மால் ரசிக்க இயலாது. இராமசரிதமானசா போலவே இதுவும் ஏழு காபிரிவுகளாக, காண்டங்களாக இருக்கிறதாம். ராமாயண பாத்திரங்களின் கம்பீரத்தை அழகை அற்புதமாக சொல்கிறாராம்.
கீதாவளியும் கூட ஏழு காண்டங்கள் தான். இது பகவானின் இளம்பருவ வாழ்க்கை வர்ணனை. கிருஷ்ணாவளி அல்லது கிருஷ்ண கீதாவளி , கிருஷணரின் புகழ் பாடும் 61 பாடல்கள் சேர்ந்தது. இந்தி பேசுபவர்களில் ஒரு பிரிவினர் கனௌஜி பேசுபவர்கள். நமது ஊர் கொங்கு தமிழ் போல. அந்த மொழியில் அழகில் துளசி தாசர் இதை எழுதி இருக்கிறார். சிலர் இல்லை அது அவர் மொழி இல்லை என சந்தேகிக்கிறார்கள். நாம் அதன் கிட்டவே போகவேண்டாம்.
விநய பத்ரிகா என்ற ராமனை வேண்டிக்கொள்ளும் விண்ணப்ப புத்தகமொன்று. ஸ்தோத்திரங்கள் கொண்டது. இதில் முதல் 43 பாடல்கள் இராமனின் அயோத்தி ராஜ தர்பார் பற்றிய அலங்கார வர்ணனை. இதர கடவுள்கள், பணியாட்கள் மற்றும் ராஜாங்க பணியாளர்கள் பற்றி சொல்கிறது; 44 முதல் 279 வரையிலுள்ளவை இராமனை மட்டுமே போற்றிப் பாடுகிறது.
துளசிதாசர் காலத்தில் சமூகம் நம்முடையது போலவே இருந்திருக்கிறது. அவ்வளவு மோசமில்லை. ஒழுக்கம் குறைந்து அக்கிரமங்கள் இருந்தது தெரிகிறது. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், ' என் ஸ்ரீராமா நீ அல்லவோ இவர்களை திருத்தவேண்டும் . ஒழுக்கமாக இருக்க செய்யவேண்டும்'' என்று முறையிடு
துளசிதாசர் காலத்தில் சமூகம் நம்முடையது போலவே இருந்திருக்கிறது. அவ்வளவு மோசமில்லை. ஒழுக்கம் குறைந்து அக்கிரமங்கள் இருந்தது தெரிகிறது. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், ' என் ஸ்ரீராமா நீ அல்லவோ இவர்களை திருத்தவேண்டும் . ஒழுக்கமாக இருக்க செய்யவேண்டும்'' என்று முறையிடு
கிறார். "விநய பத்ரிகா" ஒரு இசை ரூப வேண்டுகோள் புத்தகம். ராமபிரானின் அரசவை மண்டபத்தில் நிறைய விக்ரஹங்கள் சித்திரங்கள் இருந்திருக்கிறது.
கணேசர், சிவபெருமான், தேவி, சூரியன், கங்கை, யமுனை, படங்கள் இருந்ததை துளசிதாசர் பார்த்து விட்டு தானே அவர்களை பற்றி பாடுகிறார் அவரது பாடல்களில் அனுமன், இலக்குவன், பரதன், சத்துருக்னன், சீதை எல்லோரும் போற்றி பாடப்படுகிறார்கள். அவர்களிடமும் தனது வேண்டுகோளை சமர்பிக்கிறார். ராமனை இதை செய்யச் சொல்லுங்கள் என்று சிபாரிசு தேடுகிறார். கல் மனத்தையும் கரையச் செய்யும் விநயபத்ரிக்கா" என்ற சொல்லடை இந்தியில் விநயபத்திரிக்காவின் பெருமையைக் குறிக்கிறதாம். நமக்கு தெரிந்த இந்தி ' இந்தி ஒழிக'' என்பதால் நம்மால் இதை அ டுத்த ஜென்மத்தில் அனுபவிப்போம். இது துளசிதாசர் கடைசியாக எழுதியது.
துளசி தாசர் எழுதிய சில சிறு படைப்புகளின் பெயர்கள் சொல்கிறேன். பாராவை இராமாயணா, ஜானகி மங்கல், இராமலாலா நஹாச்சூ, இராமஞா பிரஷ்னா, பார்வதி மங்கல், கிருஷ்ணா கீதாவளி, அனுமன் பஹுகா, சங்கட மோச்சனா மற்றும் வைராக்கிய சண்டிபினி. அழகான சின்ன சின்ன நாட்டுப்பாடல்களாக சுவையான இசையோடு பாடக்கூடியவை ஒரு உ. பி. அன்பர் ரெண்டு மூன்று வைராக்கிய சண்டிபானி பாடலைகளை எனக்கு ஒரு முறை பயாடிக் காட்டினார். அவரது தலை அசைப்பை, கை உடம்பு அசைவை மட்டும் தான் ரசிக்க முடிந்தது. வேறு ஒன்றும் புரியவில்லை. அந்த கவிதைகள் முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்கு தேவையான சுயகட்டுப்பாட்டைத் தூண்டுதல் , ஒரு துறவியின் இயல்பு மற்றும் மேன்மையை விளக்கும் கவிதைகளாம் . ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பை அனுப்புகிறேன் என்றவர் என்னையே மறந்துவிட்டார்.
No comments:
Post a Comment