துளசி விவாஹம் - J.K. SIVAN
ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம் நடந்ததே, அதற்கு பத்திரிகை கிடைக்காததால் வராதவர்களுக்கும், 'கல்யாணமா, எப்போ, தெரியாதே' என்பவர்களுக்கும்,' கல்யாணம் நடந்தது தெரியுமே, ஆனால் மறந்து போனதே' என்பவர்களுக்கும், அந்த திருமணத்தைப் பற்றியும் மணமகள் துளசி தேவியைப் பற்றியும் ஞாபகப் படுத்தவே இந்த கட்டுரை.
கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று எத்தனையோ காலத்திற்கு முன்பு நடந்தது அந்த தெய்வீக திருமணம்.
தீபாவளிக்கு பிறகு ஒரு 15 நாள் துளசி பூஜை (துளசி ஹப்பா )என்று வடக்கே கொண்டாடு
கிறார்கள். அன்று துளசிக்கட்டை தான் மணமகள். நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.
கல்யாணம் நடப்பதற்கு முன்பே முதல் நாள் சாயங்காலம் இப்போதெல்லாம் அநேகர் மணமக்களை வாழ்த்தி சாப்பிட்டுவிட்டோ அதற்கு முன்போ, பரிசு அளிக்கிறார்களே. அது போல கல்யாணத்திற்கு முதல் நாள் விஷ்ணுவும், துளசி என்கிற லக்ஷ்மியும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருப்பார்கள். லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் திருமண மக்களாக பாவிப்பது ஐதிகம். அன்று விஷ்ணு கிருஷ்ணன் ஆகியோரின் சக்தி ஜலத்திலும் அக்னியிலும் இருப்பதாக நம்பிக்கை.
துளசி விவாகத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
1. துளசி மாடத்தை அலங்கரிப்பது.
2. நாலு பக்கம் கொம்பு நட்டு, துணியில் விதானம் அமைத்து மண்டபமாக செய்வது. விளக்கேற்றுவது,
3. துளசி செடிக்கு பட்டுத்துணியில் புடவை.துளசி மணி வளையல். குங்கும தாரணம்.
4. சின்ன பிள்ளையார் விக்ரஹம், சாளக்ராமங்கள், அருகே வைத்து பூஜை.
7. துளசி மந்த்ரம் ஜபித்தல் '' ஓம் துளஸ்யை நம:'' 108 தடவை உச்சரிப்பது. . குங்குமார்ச்சனை செய்வது
8. தூப தீப ஆராதனை. தேங்காய் உடைத்தல்..
9 துளசி செடியை, மாடத்தை, 7 முறை வலம் வருதல்- பரிக்ரமம்.
10. துளசிக்கும், சாளக்ராமங்களுக்கும் ஆர்த்தி. மங்கள கீதம் பாடுவது.
விவாகம் முடிந்துவிட்டதே.
விஷ்ணு பூஜைக்கு துளசி இல்லாவிட்டால் வீண். எந்த நைவேத்யமும் துளசி தளம், ஜலம் ப்ரோக்ஷணம் இன்றி பூர்த்தியாகாது. துளசி சர்வ பாபங்கள், ஏன் வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள்.
தேவாசுரர்கள் பாற் கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்று கிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாலக்ராமமாக இருக்கும்போதெல்லாம் துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.
விஷ்ணு ஆலயங்களில், மாத்வர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல் பூஜை இல்லை, விஷ்ணுவுக்கு நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும் தான் தீபம் நமஸ்காரம். ப்ரார்த்தனை .
லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி வர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.
பத்ம புராணத்தில், பாதாள காண்டத்தில் ஒரு விஷயம் தெரியுமோ ?சொல்கிறேன் கேளுங்கள்:
சிவபெருமான்: ''நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்'
நாரதன் : ''சொல்லுங்கள் ப்ரபோ, நானும் இதை படிப்பவர்களும் தெரிந்துகொள்கிறோம்.''
சி.பெ: ''எவன் ஒருவன் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். எவனது உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாபங்களும் எரிந்துவிடும். எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான். கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .
எவன் துளசி கட்டையை, சமித்துகளோடு சேர்த்து வைத்துக்கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான்.
துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.
ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லக்ஷம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை.
துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல் கிருஷ்ணனுக்கு சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன்.
துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான்.
துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.
துளசி பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்:
No comments:
Post a Comment