மறப்பதற்கு முன் சொல்லிவிடுகிறேன்.
J.K. SIVAN
இதை மறக்காமல் சொல்லவேண்டும் என்று தோன்றும். அதைத்தவிர மற்றெல்லாம் ஞாபகத்தில் இருக்கும். எனவே மறப்பதற்கு முன்னால் ஒரு விஷயம் நீங்கள் மறக்காமல் இருப்பதற்கு மட்டும் அல்ல, மறந்தும் விட்டுவிடாமல் செய்ய முக்கியமான ஒரு செயல் பற்றி.
அந்தக்காலத்தில் நிறைய கோவில்கள் இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் அங்கு பிறந்து வாழ்ந்த மக்களுக்கு அவை தெய்வங்கள். குல தெய்வங்கள். அது பெரிய கோயிலாகவும் இருக்கலாம், குட்டி குட்டி கோயிலாகவும் இருந்திருக்கிக்கலாம். குழந்தைக்கு ராணியும் அம்மா தான், வேலைக்காரியும் அம்மா தான். வேலைக்காரியின் குழந்தை ராணியை என்றும் அம்மா என்று கூப்பிடவே கூப்பிடாது. திரும்பி கூட பார்க்காது.
நமக்கு குலதெய்வங்களின் அவசியம், அவற்றின் உறுதுணை மறந்து போய்விட்டது. இருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறது. மறைகிறது. நோ. ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் உண்டு. அது யார் எங்கே இருக்கும் தெய்வம் என்று தெரிந்து கொள்ளவேண்டும். இருக்கும் பெரியவர்களிடம், உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.ஊரில் பல காலமாக உள்ளவர்கள் இருந்தால் சொல்வார்கள். அந்தக்காலத்தில் எல்லா குடும்பத்தாரையும் ஊரில் தெரிந்து வைத்திருப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் அப்படி ஒருவர் கிடைக்கலாம்.
இன்னொரு விஷயம். ராஜாக்கள் பல கோவில்கள் கட்டினார்கள் என்றால் மக்களின் பொதுப்பணத்திலிருந்து தான் இது உருவானது. இப்போது ராஜாக்கள் இல்லை. நான் இனிஷியல் உள்ள ராஜாக்களை பற்றி நினைக்கவே இல்லை எப்படி அவர்களை சொல்வேன். நம்மை ஆண்ட பழைய கிரீடம் தரித்த ராஜாக்கள் இல்லை என்பதால் பாரதியார் சொன்னபடி நாமெல்லாரும் இந்நாட்டு மன்னர்கள். அப்படியென்றால் நம் பணத்தை வசூல் செய்து ராஜாக்கள் கட்டியதை விட நாமே கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த ஊர்க்காரர்கள் சேர்ந்து சண்டை போடாமல் பழைய கோவில்களை நிர்மாணிக்கலாம். புதுப்பிக்கலாம். முற்றிலும் அழிந்து சிதிலமான போயிருந்தால், எப்படியாவது அதை உருவாக்கலாம். நம்மைக் காக்கும் குலதெய்வங்கள் கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு, வேளா வேளைக்கு ,முடியாவிட்டால்,
அன்றாடம் ஒருதடவையாவது விளக்கேற்றி மலர் சார்த்தி ஏதாவது நைவேத்தியம் அளிக்க ஒருவரை நியமித்து பரம்மரிக்க வேண்டாமா ? மாதத்திற்கு ஒரு தடவை குடும்பத்தோடு சென்று ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த பணத்தை சேமித்து வருஷத்தில் இருமுறை குலதெய்வம் கோவிலுக்கு செலவழிக்க வேண்டாமா. தெய்வ நிந்தனை வேண்டாமே?
அன்றாடம் ஒருதடவையாவது விளக்கேற்றி மலர் சார்த்தி ஏதாவது நைவேத்தியம் அளிக்க ஒருவரை நியமித்து பரம்மரிக்க வேண்டாமா ? மாதத்திற்கு ஒரு தடவை குடும்பத்தோடு சென்று ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த பணத்தை சேமித்து வருஷத்தில் இருமுறை குலதெய்வம் கோவிலுக்கு செலவழிக்க வேண்டாமா. தெய்வ நிந்தனை வேண்டாமே?
பிறந்த நாள், மண நாள் எல்லாருக்கும் குடும்பத்தில் வரும். அதில் ஒரு பங்கு நாம் பிறந்து வாழ காரணமான குலதெய்வத்தை பராமரிக்க செலுத்துவது சௌகரியம் தானே. இதற்கெல்லாம் ஆதாரமாக மனதில் நன்றி உணர்ச்சி, பக்தி ஆர்வம் எல்லாம் வளரவேண்டும்.
நமது நலனே குறிக்கோளாக கொண்டு அருளும் குடும்பத்தில் பெரியவர் மூத்தவர் ஒருவரை பார்க்கப்போகிறோம், அவர் ஆசி பெறவேண்டும் என்று ஊரைப்பார்க்க ஓடவேண்டாமா?
No comments:
Post a Comment