நாலடியார் - J.K. SIVAN
சமணர்கள் தந்த பரிசு -2
''துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.''
பணத்தை சேர்ப்பவனை ''வாயை வயிற்றை ஒடுக்கி சேர்த்த '' என்போம். எதற்கு என்றால் செல்வத்தை சேர்க்க அரும்பாடு படவேண்டும். நான் சொல்வது நல்ல வழியில் பணம் சேர்ப்பதை. அப்படி பணம் சேர்க்கும் செல்வந்தர்கள் நன்றாக நினைவில் வையுங்கள்; அது எப்போதும் உங்களிட இருக்குமென்ற கனவு வேண்டாம். வயலில் காலைமுதல் மாலைவரை வெயிலில் எருமை மாடுகளை பூட்2, என்னை டி ஏர் ஒட்டி நிலம் உழுது பசி வேளைக்கு மரத்தடியில் கலயத்தில் மனைவி தரும் கூழை கையில் வாங்கி குடிக்கிறானே அந்த எளிய வாழ்க்கை யை மறந்து விடாதீர்கள். அவர்கள் போல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். இந்த செல்வம் ஏன் அந்த பெயர் பெற்றது தெரியுமா ''ஐயா பணக்காரரே ,நாங்கள் ''ஓரிடம் தனிலே நிலை நில்லாதுலகிலே உருண்டோடிடும் பணம் காசு எனும் பொருள்கள். இன்று உங்களிடம் நாளை இன்னொருவரிடம் ''செல்வோம்'' என்று உணர்த்துபவர்கள். வண்டிச்சக்கரம் போன்றவர்கள். நாங்கள் இருந்தால் உங்களுக்கு சகடயோகம்.
தமிழ் பேசும் ஜைனர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். எனக்கும் சில நண்பர்கள் அவர்களில் உண்டு. அந்த காலா ஜைனர்கள் சமணர்கள் எனப்பட்டார்கள். அவர்களில் அநேகர் தமிழ் பு லவர்களாக இருந்தார்கள். பாண்டிய மன்னன் ஆதரவு சமணர்களுக்கு இருந்த காலத்தில் உண்டானது தான் நாலடியார். இளங்கோ அடிகள் சமண மதத்தை தழுவியவர் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை சிலப்பதிகாரம் ஜீவக சிந்தாமணி. சங்க கால இலக்கியமான தொல்காப்பியம் கூட சமணர்கள் இயற்றியது என்பார்கள்.
''அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.''
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.''
பெரிய மாளிகையில் சுகமாக வாழும் கோடீஸ்வரனாக இருந்தும், மனைவி அருகில் அமர்ந்து ஆசையோடு பரிமாற நல்ல அறுசுவை கூடிய உணவை சாப்பிடுகிறான். ஒரு சில கவளம் உள்ளே சென்றது. மற்ற கவளங்களை சாப்பிட முடியாமல் வயிறு நிரம்பி போதும் என்று எழுந்தவன், அடுத்த வேளைக்கு பசிக்கு எங்காவது ஒரு கை கூழு கிடைக்குமா என்று யாசகம் எடுக்க நேரிடும். அவனது கோடிக்கணக்கான செல்வம் அவனுக்கு என்றும் சாஸ்வதம் இல்லை. நிரந்தரம் இல்லை. அப்படி கனவு காண்பது கருதுவது நல்லதல்ல!
''துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.''
பணத்தை சேர்ப்பவனை ''வாயை வயிற்றை ஒடுக்கி சேர்த்த '' என்போம். எதற்கு என்றால் செல்வத்தை சேர்க்க அரும்பாடு படவேண்டும். நான் சொல்வது நல்ல வழியில் பணம் சேர்ப்பதை. அப்படி பணம் சேர்க்கும் செல்வந்தர்கள் நன்றாக நினைவில் வையுங்கள்; அது எப்போதும் உங்களிட இருக்குமென்ற கனவு வேண்டாம். வயலில் காலைமுதல் மாலைவரை வெயிலில் எருமை மாடுகளை பூட்2, என்னை டி ஏர் ஒட்டி நிலம் உழுது பசி வேளைக்கு மரத்தடியில் கலயத்தில் மனைவி தரும் கூழை கையில் வாங்கி குடிக்கிறானே அந்த எளிய வாழ்க்கை யை மறந்து விடாதீர்கள். அவர்கள் போல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். இந்த செல்வம் ஏன் அந்த பெயர் பெற்றது தெரியுமா ''ஐயா பணக்காரரே ,நாங்கள் ''ஓரிடம் தனிலே நிலை நில்லாதுலகிலே உருண்டோடிடும் பணம் காசு எனும் பொருள்கள். இன்று உங்களிடம் நாளை இன்னொருவரிடம் ''செல்வோம்'' என்று உணர்த்துபவர்கள். வண்டிச்சக்கரம் போன்றவர்கள். நாங்கள் இருந்தால் உங்களுக்கு சகடயோகம்.
''யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள''
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள''
இப்போது போல் சட்டம் நீதி மந்தரம், வக்கீல் கிடையாது. காப்பாற்றாது. பலம் கொண்ட ராஜாவோ பெரிய மனிதனோ இருந்தால் சட்டம் அவன் வைத்தது தான். பெரிய அம்பாரி கட்டிய யானையின் மீது ஆபரணம் தரித்து கம்பீரமாக உட்கார்ந்து தலைக்கு மேல் ஒருவன் குடை பிடிக்க பவனி வரும் ராஜா கூட அவனுக்கு போறாத காலம் வந்து விட்டால் அவ்வளவு தான். அடுத்த ஊர் ராஜா அவனை சண்டையில் ஜெயித்து ஜெயிலில் போட்டுவிடுவான் அல்லது கொன்றுவிடுவான். இதுவும் இல்லாமல் அந்த ராஜாவின் அழகிய மனைவியைக் கூட அந்த ஜெயித்த ராஜா கொண்டு போய்விடுவான். பணம் மட்டும் சக்கரம் அல்ல. வாழ்க்கையை சக்கரம் தான். நிலை மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள். என்கிறார்கள் சமணர்கள் நாலடியாரில்.
No comments:
Post a Comment