காலபைரவாஷ்டகம் 8 - J.K. SIVAN
இந்த கட்டுரை ஆதிசங்கரரின்
காலபைர
வாஷ்டகம் எனும் அற்புத எட்டு ஸ்லோகங்களை நிறைவு செய் கிறது. பைரவன் சிவன் தான் வேறல்ல. அவனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எல்லையற்றவன். அவன் சதா சிவன் நான் சாதா சிவன் ஆயிற்றே!. சிற்றறிவுக்கு எட்டியவரை அறிந்து தெரிந்து சொல்கிறேன்.
பைரவன் மட்டுமல்லாத மற்ற ரூபங்களிலும் அந்த
லோக நாயகன் சர்வேஸ்வரனை தொடர்ந்து பாடும் எண்ணற்ற எத்தனையோ ஸ்லோகங்களையும்
இனி
காண முயல்வோம்.
பொருளைத்தேடும் நாம் அருளைத்தேட அவகாசம் இல்லை என்று இருப்பதால்
'
அவ்வுலகம்
'
இல்லை. அன்பில்லாத இடத்தில் சிவம் இல்லை. அவன் அருளாலே தான் அவன் தாள் வணங்கமுடியும். நம்
மில் அவனை, பிறகு அந்த 'நம்மை' ம
ற்றதில்
,
மற்றோரில்
,
காணும் பயிற்சி தான் பூரண அன்பு. அப்பாலுக்கு அப்பால் சிந்தனை போக வேண்டுமானால் உள்ளே ஆழமாக போகவேண்டும். அது ஆழ்கடல். வெளியே காணப்படும் சமுத்ரங்களைஎல்லாம் விட ஆழமானது. பல ஜன்மங்களையும் தாண்டி உள்ளடக்கியது. அப்படி உள்வாங்கி நிமிர்ந்தவர்களின் நிலையே சமாதி நிலை. இத்தகைய யோகிகளால் மட்டுமே விழிப்பு, தூக்கம், ஆழ்ந்த உறக்கம் நிலைகளை கடந்து து
ரீ
யம் என்கிற நான்காவது விசேஷ நிலை அடைய முடியும். இதில் கடந்த, நிகழ், எதிர் கால (முக்கால)
அனுபவம் கை கூடும்.சிவராத்திரி கண் விழிப்பு வ்ரதத்தால் நான்கு கால
மும்
(3மணி நேரம் x 4) இரவு 12 மணி நேரத்தில் சித்தத்தை சிவன் பாலே வைத்தவர்க்கு திரி குணாதீதன் திரு மூர்த்தி கிருபையால் தமோ, ரஜோ குணங்கள் நீங்கி சத்வ குணம் பாலிக்கும்.சிவன் அபிஷேகப்ரியன். வெறும் ஜலம். ரெண்டு வில்வ இலை. பஸ்மம் போதும்.
ரிஷி கேஷில் சிவானந்த ஆஸ்ரமத்தில் அனைவரும் சிவராத்திரி கொண்டாடுவது எப்படி தெரியுமா. ஒரு ஸ்பூன் நீர் கூட பருகாது நாள் முழுதும் உபவாசம். லோகக்ஷேமத்துக்காக உலக அமைதிக்காக ஹோமம். நாள் முழுதும் ஓம் நமசிவா
ய
ஜபம். தியானம். இரவு நான்கு காலத்திலும் சிவன் சந்நிதியில் நாம ஜபம். அபிஷேகம். யார் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு
எல்லாம்
சன்யாச தீக்ஷை.ஒரு எளிய பிரார்த்தனை :
भूतसंघनायकं विशालकीर्तिदायकं
काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥
भूतसंघनायकं विशालकीर्तिदायकं
काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥
Bhuuta-Samgha-Naayakam Vishaala-Kiirti-Daayakam
Kaashi-Vaasa-Loka-Punnya-Paapa-Shodhakam Vibhum |
Niiti-Maarga-Kovidam Puraatanam Jagatpatim
Kaashikaapuraadhinaathakaalabhairavam Bhaje ||8||
Kaashi-Vaasa-Loka-Punnya-Paapa-Shodhakam Vibhum |
Niiti-Maarga-Kovidam Puraatanam Jagatpatim
Kaashikaapuraadhinaathakaalabhairavam Bhaje ||8||
''மகாதேவா, நானே நீ. என் மனமே பார்வதி. என் பிராணன் உன் கணங்கள். என்னுடம்பே கைலாசம். என் ஒவ்வொரு செயலும் உன்னை வழிபடுதல்.
என்கடன் பணி செய்தல். நின் கடன் அடியேனையும் தாங்கி நல்வழிப் படுத்துவது.
என் உறக்கமே சமாதி நிலை. என் நடை உன்னை வலம் வருதல். என் வார்த்தை உனக்குண்டான பிரார்த்தனை. எனவே எனது என்று ஒன்றில்லை அது உன்னைத்தவிர.''
காசியில் அருளும்
கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ பூத நாயகன், கணேஸ்வரன், ஆத்மநாதன், காசி நாதன், பாப நாசன். புண்ய தாயகன். மார்க்க பந்து. ஆதி காரணன். சர்வ லோகேசன். எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ. உனக்கு நமஸ்காரங்கள்.
இப்படிப்பட்ட பைரவரை போற்றி வழிபட்டால் இந்த காலபைரவ ஸ்தோத்திரங்கள் எட்டையும் மனதில் பக்தியோடு படித்தால், பாராயணம் பண்ணினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் ஆதி சங்கரர் சொல்கிறார். மனது லேசாகி, பக்தி பூர்வமாகி விடும். வேறு எண்ணங்கள் தோன்றி வழி மறிக்காது . முக்தி அடைவோம். துக்கங்கள் சோகங்கள் பயம், உலக பொருள்களில் மீது பாசம் எல்லாம் குறையும். நீண்ட ஆயுள் சித்திக்கும். கோபம் பொறாமை எண்ணங்கள் அகலும். முடிவு வந்தபோது நேரே காலபைரவர் சந்நிதிக்கே சென்றுவிடுவோம்.
कालभैरवाष्टकं पठंति ये मनोहरं
ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं
प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥
ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं
प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥
Kaalabhairavaassttakam Patthamti Ye Manoharam
Jnyaana-Mukti-Saadhanam Vicitra-Punnya-Vardhanam |
Shoka-Moha-Dainya-Lobha-Kopa-Taapa-Naashanam
Prayaanti Kaalabhairava-Amghri-Sannidhim Naraa Dhruvam ||9||
மனதை வருடும் காலபைரவாஷ்டகம் படிக்கும் நம்மை உயர்விக்கட்டும்.
உய்விக்கட்டும்.
No comments:
Post a Comment