Friday, June 22, 2018

gitanjali



ரபீந்திரநாத் தாகூர்   --    ஜே.கே சிவன் 
                                              
                                                                               கீதாஞ்சலி 
                           
In the night of weariness let me give myself up to sleep without struggle, resting my trust upon thee.
Let me not force my flagging spirit into a poor preparation for thy worship.
It is thou who drawest the veil of night upon the tired eyes of the day to renew its sight in a fresher gladness of awakening.
பொன்னிற போர்வை போர்த்திய  மாலை  மங்கி எங்கும்  மலைப்பாம்பு  இரை  கவ்வுவதைப்போல  இருள்  சர்வத்தையும்  தன்னுள்  அடக்கிக்கொண்டு வருகிறது.  காரிருள் ஆக இன்னும் சற்று நேரம் ஆகலாம். நானும் களைத்து விட்டேன் கிருஷ்ணா.  கொஞ்சம் எதிர்ப்பு சொல்லாமல் ஏசாமல்  தூக்கத்தின் வசம்  என்னை தந்துவிடுகிறேன். என் நம்பிக்கை, ஊக்கம், நோக்கம் எல்லாம் உன் மீது தான் எப்போதும் வைத்திருப்பேனே .அலைபாயும் என் மனத்தை திடப்படுத்திக் கொள்கிறேன். உன்னை வழிபட துதிக்க என் முழு உணர்வையும் செலுத்துகிறேன். பகல் நிறைய உழைக்கிறது. எப்போது சூரியன் தலையை தூக்குகிறானோ கிழக்கில் அப்போது முதல் ஓயாமல் உழைக்கும் பகலுக்கு ஒய்வு தர, மீண்டும்  புத்துணர்ச்சி பெற,  மறுபடியும்  தனது  ஓய்தல் இல்லாத கடமையை செய்ய அதற்கு சக்தி வேண்டாமா?  அதற்காகத்தானே  கிருஷ்ணா, நீ மெதுவாக இருளை அதன் மீது மெல்லிதாக போர்த்தி  உறங்கப்பண்ணுகிறாய்!
++


I thought that my voyage had come to its end at the last limit of my power,---that the path before me was closed, that provisions were exhausted and the time come to take shelter in a silent obscurity.
but I find that thy will knows no end in me. And when old words die out on the tongue, new melodies break forth from the heart; and where the old tracks are lost, new country is revealed with its wonders. 
என் பிரயாணம், யாத்திரை, ஒரு முடிலவுக்கு வந்து விட்டதோ? கடைசி துளி சக்தி இன்னும் கொஞ்சம் இருப்பதால் சீக்கிரம் முடியப்போகிறது. ஆஹா  என்  பாதையுமே  இனி தொடரவில்லையே.  அதுவே முடிந்து விட்டதே.  ஆகவே  ஒரே வழி இனி  இங்கேயே  என் மூட்டையை இறக்கிவிட்டு  ''டிக்கானா '' போடவேண்டியது தான். எங்கும் அமைதி எதிலும் அமைதி என் மூச்சு விடும் சப்தம் தவிர.  கிருஷ்ணா, உனக்கு தான் எல்லாமே தெரியுமே, என் மனதில் நீ தொடர்கிறாய். என் சக்தி நீ தானே. எப்படி வரும்  முடிவு எனக்கு?  பழசெல்லாம் ஒவ்வொன்றாக மறந்து, பெயர் சொல், தேதி, நினைவு, எல்லாம் நோக்கிலிருந்து  இறங்கி காணாமல் போய்  மறைந்து  புதிதாக இனிய சங்கீதம் என் இதயத்திலிருந்து புறப்படட்டும். பழைய பாதை முடிந்து போனாலும் அதோ எதிரே இன்னொரு புத்தம் புதிய பாதை துவங்கட்டும். அதன் வழியே  நான் காணபோகும் அற்புதங்கள் அதிசயங்கள்  உன்னருளால் எத்தனையோ?




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...