Monday, June 18, 2018

thirukazhukundram

யாத்ரா விபரம் J.K. SIVAN திருக்கழுக் குன்றம் ஹிந்து கோவில்களில் சித்தர்கள், ரிஷிகள், முனீஸ்வரர்கள் , தேவர்கள் வந்து தொழுவது தெரியும். பக்ஷிகள், மிருகங்கள், நீர் வாழ் நிலம் வாழ் ஜந்துக்கள் கூட வழிபாடு செய்துள்ளன. தினமும் செல்லவேண்டிய மனிதர்கள் தான் அதிகம் போவதை குறைத்துக்கொண்டுவிட்டார்கள் என்பது மனதை வலிக்க செய்கிறது. . குரங்கு அணில் காகம் சம்பந்தப்பட்ட க்ஷேத்திரம் குரங்கணில் முட்டம், யானை சிலந்தி பூஜை பண்ணின திருவானைக்கோவில், மயில்கள் பூஜை செய்த விராலிமலை முருகன் கோவில், கேரளாவில் அனந்தபுராவில் முதலைகள் வந்து பிரசாதம் சாப்பிடுவது, திருநாகேஸ்வரம், தேப்பெருமாள் கோவில் அருகே சிவன் கோவிலில் சர்ப்பம் பூஜை செய்வது போல் சென்னைக்கு அருகே கழுகுகள் தினம் வந்து தரிசித்து பிரசாதம் பெரும் கோவில் தான் திருக்கழுகு குன்றம். ஆயிரம் வருஷ கோவில். சோழ பல்லவ பாண்டிய கல்வெட்டுகள் நிறைய இருக்கிறது. சிவன் சொக்கர், வேதகிரீஸ்வர், அம்பாள் திருபுர சுந்தரி. ஸ்தல விருக்ஷம் வாழைமரம். சங்கு தீர்த்தம். இதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கிறது .ஆலயத்தில் நிறைய சங்குகள் வைக்கப்பட்டிருக்கிறது. நான் சென்றிருக்கிறேன். திருக்கழுக் குன்றத்தில் அர்ச்சகர் ஒரு தட்டை தரையில் டொக் டொக் என்று தட்டிக்கொண்டே இருந்தார். சிறிது நேரம் ஆயிரக்கணக்கான கண்கள் மேலே பார்த்துக்கொண்டிருக்க ரெண்டு கழுகுகள் அழகாக எங்கிருந்தோ பறந்து வந்தன. அவர் எதிரே வந்து ஜம்மென்று அமர்ந்தன. வெள்ளை கருப்பு கலர் பெரிய கழுகுகள். அவர் அளித்த நைவேத்தியம் சாப்பிட்டன. மறக்க முடியாத அனுபவம். ஆனால் நான் சின்ன பையன் இப்போதிருக்கும் மன முதிர்ச்சி இல்லையே! திரு கழுகு குன்றம் வேதங்களே மலையாக நிற்கும் க்ஷேத்ரம். வேத கிரி என்று பெயர். சிவன் வேதகிரீஸ்வரர். பிரமனின் புத்திரர்கள் ரெண்டு ரிஷிகள், சிவ சாபத்தால், கழுகுகளாக யுகங்களாக தினமும் இங்கு தரிசனம் செய்ய வருகிறார்கள். காலையில் கங்கையில் ஸ்நானம், பகல் உணவு திருக்கழுகு குன்றம், சாயந்திரம் ராமேஸ்வரம் ராத்ரி சிதம்பர தர்சனம். நாம் கழுகுகளாக இருக்க கூடாதா? இந்த ரெண்டு கழுகுகள் தான் சண்ட பிரசண்டர்கள், ஜடாயு சம்பாதி, சம்புக்தன் முசுகுந்தன், புஷன் விருத்தன். சென்னையிலிருந்து 70 கி.மீ. மஹாபலிபுரத்திலிருந்து 15 கி.மீ. தூரம்.திருக்கழுக்குன்றத்துக்கு வேறே பெயர்களும் உண்டு. ருத்ரகோடி, நந்திபுரி, இந்த்ரபுரி, நாராயணபுரி, பிரம்மபுரி, தினகரபுரி, முனிகணபுரி, பக்ஷிதீர்த்தம். சிவன் ஸ்வயம்பு. மலை உச்சியில் இருக்கிறார். நாலு மலைகள் நான்கு வேதங்கள். இந்திரன் இன்று காலை கூட இங்கே வந்து வேதகிரீஸ்வரரை வழிபடுகிறான். இதற்கு சாட்சியாக கோவில் விமானத்தில் ஒரு துளை வழியாக இடியும் மின்னலும் இறங்கி மூல விக்ரஹ சிவலிங்கத்தை பிரதக்ஷணம் செய்கிறது. அடுத்த நாள் காலை சிவாச்சாரியார் கர்ப்பகிரஹத்தை திறந்து உள்ளே சென்றால் உஷ்ணம் அதிகமாக இருப்பதை சொல்கிறாராம். விஞ்ஞானிகள் இந்த சம்பவம் அதிசயம் என்கிறார்களாம். இங்கே தான் சுந்தரருக்கு பொற்காசுகள் சிவன் கொடுத்தார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...