Saturday, June 2, 2018

POONDI SWAMIYAR



சித்தர்கள்: 

                   
      பூண்டி சாமியார்  8  

பூண்டி சாமியாரை பேச வைப்பதற்கு  பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டும்.  அப்படி பேசினாலும் புரியாது.  அவரோடு நெருங்கி பழகினால் ஒரு சில வார்த்தைகள் புரியும். 

பரணீதரன்  வேறொரு உத்தியை பிரயோகித்தார்.  

''சுவாமி,  இந்த செய்யாறு நதிக்கு வடகரையில்   ஏழு கரைக்கண்ட சிவாலயங்கள் இருக்கிறதாமே, அது போல்  ''சப்த கைலாசம்'' என்று ஏழு வேறு இருக்கிறதாமே . அப்படியா? உங்களுடைய ஆசிர்வாதத்தோடு  அவற்றையும் தரிசிக்க வேண்டும்''

''போய்  வாசுதேவம்பட்டு,தாமரைப் பாக்கம், நார்த்தாம்பூண்டி , தென்பால்பட்டு, பழங்கோயில், காரப்பூண்டி , மண்டகளத்தூர் லே  பார் ''

''சுவாமி அங்கெல்லாம் போய்  தரிசனம் பண்ணி இருக்கிறீங்களா?
''நான் போகலே, நடக்கும்போது  கண்லே படும் ''

இரவை அங்கே ஒரு குடிசையில் கழித்துவிட்டு, மறுநாள் விடிகாலை  நான்கு மணிக்கே எழுந்து, சாமியார் படுத்திருந்த திண்ணைக்கு சென்று  அமைதியாக  நின்றார். சாமியார் அருகே எப்போதும் வட்டமிடும் ஒரு பூனைக்குட்டி, அவர் கால்களுக்கு இடையே படுத்திருந்தது. எழுந்தது. முதுகை உயர்த்தி சோம்பல் முறித்தது.  உடலை சிலிர்த்து குலுக்கியது. சாமியாரின் வலது காலை பிராண்டியது.  கண்ணை விழித்தார். சரியாக விடிகாலை நாலு மணி. எழுந்து உட்கார்ந்தார்.

எதிரே இருந்த  டீ கடையிலிருந்து  ஒரு  கப்  டீ  கொண்டுவந்தார்கள்   நெருப்பு போல் சூடாக இருந்தாலும் ஒரே மடக்கில் விழுங்கினார். சுப்பிரமணி ஒரு பக்கெட்டில் நீர் கொண்டுவந்து வழக்கம்போல் சாமியாரின் முகம், கை, கால்கள் எல்லாம் கழுவி விட்டார்.  பழைய சட்டை கழற்றி  புதியது அணிவிக்கப்பட்டு, நெற்றியில் குழைத்த விபூதி பட்டை பூசி, கழுத்தில் புதிய மாலை சாற்றி,  கற்பூர ஹாரத்தி எடுத்தார்.   அதற்குள் நிறைய பக்தர்கள் அங்கே குழுமிவிட்டார்கள். 

ஒரு கிராமப் பெண், இடுப்பில் ஒரு பையனோடு வந்தாள் . சாமியாரை வணங்கினாள் . ஏறிட்டு பார்த்தார்.

''சாமி பையனுக்கு உங்க புண்யத்தில் உடம்பு சரியாயிடுச்சி.  நான் வேண்டிக்கிட்டமாதிரி  பணம் சேர்த்து 25 ரூபா கொண்டுவந்திருக்கேன். நீங்க அதை காணிக்கையா ஏத்துக்கிடணும் ''    ஸ்வாமியார் கை நீட்டி வாங்கிக்கொண்டார். 
இன்னொரு பையன் அருகே நின்றான். பெரியவன்.  
''சாமி  இவன் பள்ளிப்படுப்பு  பெயில் ஆகிட்டான்.   வேலைக்கு ஏதாவது அனுப்பட்டா, ஏதாவது சின்ன வியாபாரம் செய்ய சொல்லட்டா?''நீங்க தான் சொல்லணும்.

"என்ன அவசரம்  15 நாள்  பொறு. சரியாயிடும். போ''   விபூதி கொடுத்தார்.
''சரிங்க சாமி,  அவள் பையன்களோடு சென்றாள் .

கட்டையாக ஒரு ஆசாமி. மூன்று பிள்ளைகளோடு எதிரே நின்றார்.  தகப்பனாருடன் மனஸ்தாபம். வீட்டை விட்டு மூன்று பிள்ளைகளோடு வெளியேறிவிட்டார். மனைவியை அவள் பெற்றோரிடம் அனுப்பிவிட்டு, எங்கெங்கோ சுற்றி மனம் நிலை கொள்ளாமல் சாமியாரிடம் வந்திருக்கிறார்.  பிழைக்க வழி தேடுகிறார்.  சாமியார் அருகே சென்று அவர் வலது காதில் தனது நிலையை சொல்கிறார். 

"நான் என்ன செய்யணும் சாமி?''  கேள்வியில் ''நீயே கதி ''  என்ற சரணாகதி த்வனித்தது. 

"மூணு  சின்ன பிள்ளைங்களை வச்சிகிட்டுப் எங்கே வேலைக்கு போவே, எப்படி?  பேசாமே  அப்பா கால்லே  போய் விழு. என்ன கோவம் உனக்கு?  அப்பா  ஏடாகூடமா இருந்தாலும் பிள்ளை நீ பொறுத்துக்கணும். வீடு உடையக்கூடாது. போய் உன் மனைவி யை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போ.  என்ன நான் சொல்றது புரியுதா?''

''இந்தா இதை வாங்கிக்க'' விபூதி அளித்தார், பிள்ளைகளுக்கு விட்டுவிட்டார். 
''சாமி சொன்னபடியே செய்யறேங்க '' ஆந்த  ஆள் சென்றுவிட்டார்.

காலை வெகுநேரம் இருந்து சாமியாரை தரிசனம் செய்த்துவிட்டு  பரணீதரன்  நண்பர்களோடு புறப்பட்டு கடலாடி சென்று, பர்வத மலையை 16  மைல்  சுற்றிவிட்டு, இரவு தங்கி, அதற்கு அடுத்த நாள்  சப்த கைலாச  ஆலயங்களை தேடி சென்றார்.  கூடவே  நாகேஸ்வர ஐயர் இருந்து வழிகாட்டினார். 

புதிராகவே தோன்றி புதிராகவே மறைந்த பூண்டி  சுவாமியார் பற்றி மேலே சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...