ராஜா பர்த்ருஹரி -- ஜே.கே. சிவன்
சுபாஷிதம்
ஊழ்வினைப்பயன்
खर्वाटो दिवसेश्वरस्य किरणैर्संतापिते मस्तके
गच्छन् देशमनातपं द्रुतगतिस्तालस्य मूलं गतः ।
तत्राप्यस्य महाफलेन पतता भग्नं सशब्दं शिरः
प्रायो गच्छति यत्र दैवहतकस्तत्रैव यान्त्यापदः ॥
गच्छन् देशमनातपं द्रुतगतिस्तालस्य मूलं गतः ।
तत्राप्यस्य महाफलेन पतता भग्नं सशब्दं शिरः
प्रायो गच्छति यत्र दैवहतकस्तत्रैव यान्त्यापदः ॥
Kharvaato divaseshwarasya kiranaih santaapite mastake
Gachchhan deshamanaatapam drutagatistalasya moolam gatah
Tatraapyasya mahaaphalena patataa bhagnam sashabdam shirah
Praayo gachchhati yatra daiva hatakah tatraiva yaantyaapadah 1.89
ராஜா பர்த்ருஹரி ரொம்ப விவரமான மனிதர். உலகத்தை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். எத்தனையோ பேர் கோடிக்கணக்கில் பணத்தை எடுத்துக்கொண்டு சட்டத்தில் அகப்படாமல் இந்த நாட்டை விட்டே ஓடிப்போய் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் அப்படி அகப்படாமல் ஓடிப்போனவர்களுக்கு ஒன்பதாம் மடத்தில் குரு. எதையோ நம்பி, எல்லாம் சரிதான் என்று ஏமாந்து எதிலோ கையெழுத்து போட்டுவிட்டு எதிர்பாராமல் மாட்டிக்கொண்ட , அகப்பட்டுக்கொண்ட ஜீவன்களுக்கு அஷ்டமத்தில் சனி. இதை தான் பர்த்ருஹரி. வெயிலில் நடந்து சூரியனின்கடுமையான சூடு வழ வழ வழுக்கை மண்டையில் தாக்கி கொஞ்சம் நிழலில் நிற்போம் என்று ஒரு உயர்ந்த தென்னை மர நிழலில் நின்றவனுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. அவன் நின்ற நேரம் பார்த்து ஒரு பெரிய கனமான மட்டை தேங்காய் நேராக அவன் மண்டையில் விழுந்து அவன் மண்டை பிளக்கிறது. இதிலிருந்து என்ன நீதி? நேரம் சரியில்லை என்றால் எவனும் கஷ்டங்களை, எதிர்பாராத துன்பங்களை, துர்பாக்கியத்தை, துரதிருஷ்டத்தை தவிர்க்க முடியாது. கர்ம பலன் அது.
ब्रह्मा येन कुलालवन्नियमितो ब्रह्माण्ड भाण्डोदरे
विष्णुर्येन दशावतार गहने क्षिप्तो महासंकटे ।
रुद्रो येन कपालपाणिपुटके भिक्षाटनं सेवते
सूर्यॊ भ्राम्यति नित्यमेव गगने तस्मै नमः कर्मणे ॥
विष्णुर्येन दशावतार गहने क्षिप्तो महासंकटे ।
रुद्रो येन कपालपाणिपुटके भिक्षाटनं सेवते
सूर्यॊ भ्राम्यति नित्यमेव गगने तस्मै नमः कर्मणे ॥
Bhrahmaa yena kulaalavanniyamito brahmaanda bhaandodare
Vishnuryena dashaavataara gahane kshipto mahaa sankate
Rudro yena kapaalapaaniputake bhikshaatanam sevate
Sooryo bhraamyati nityameva gagane tasmai namah karmane 1.94
கர்மா எவனையும் விடாது. அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதை பர்த்ரு ஹரி ஒரு கிண்டல் ஸ்லோகத்த்தில் சொல்கிறார் பாருங்கள். ''ஹே கர்மவினைப்பயனே, உனக்கு நமஸ்காரங்கள், நீ சகல தெய்வங்களையும் விட தேவர்களையும் விட சக்தி வாய்ந்தவன். இல்லாவிட்டால் ப்ரம்மதேவனை ஒரு குயவனாக ஆக்கி இரவும் பகலும் புதிது புதிதாக பாத்திரங்கள் செயது அவற்றுக்கு உயிர் கொடுக்க வைப்பாயா,? அந்த மஹா விஷ்ணு பேசாமல் ஆதிசேஷன் மேல் படுக்காமல் பத்து அவதாரங்கள் எடுத்து படாத கஷ்டங்கள் பட்டு ராக்ஷஸர்களோடு, துஷ்டர்களோடு யுத்தம் செய்யவைப்பாயா?. பாவம் சிவபெருமானை கையில் ஒரு மண்டையோட்டை எடுத்துக்கொண்டு அன்றாடம் பிக்ஷை எடுக்க விடுவாயா? சூரியனை ஒவ்வொருநாளும் ஆகாசத்தில் கிழக்கு மேற்காக அலைய விடுவாயா? இதெல்லாம் ஒருவேளை கர்மபலனோ என்று சிந்திக்க வைத்து கர்மபலனை எவரும் அனுபவிக்காமல் தப்பிக்க முடியாது என்கிறார்.
नैवाकृतिर्फलति नैव कुलं न शीलं
विद्यापि नैव न च यत्नकृतानि सेवा ।
भाग्यानि पूर्वतपसा खलु सञ्चितानि
काले फलन्ति पुरुषस्य यथैव वृक्षाः ॥
विद्यापि नैव न च यत्नकृतानि सेवा ।
भाग्यानि पूर्वतपसा खलु सञ्चितानि
काले फलन्ति पुरुषस्य यथैव वृक्षाः ॥
Naivaakrutih phalati naiva kulam na sheelam
Vidyaapi naiva na cha yatnakritaani seva
Bhaagyaani poorva tapasaa khalu sanchitaani
Kaale phalanti purushasya yathaiva Vrikshaah 1.95
ஒரு மனிதன் அழகாக, கம்பீரமாக, கண்ணைக் கவரும்படியாக இருப்பதாலோ, பெரிய உயர்ந்த குலத்தில் பிறப்பதாலோ, நல்ல குணம் வாய்த்திருப்பதாலோ, படிப்பினாலோ, பெரிய ராஜாக்கள் பிரபுக்களிடம் பணி புரிவதாலோ பெருமை அடையமுடியாது. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பூர்வ ஜென்மங்களில் செய்த தவப்பயன் ஒன்று தான் அவனை உயர்த்தும். மதிப்பை தரும், அது தக்க நேரத்தில் அவனை காப்பாற்றி உயர்த்தும். சுகவாசியாவான். பழங்கள் தரும் மரங்கள் எப்போதுமா பழம் தருகிறது?. அதற்கென ஒரு காலம் கனிந்து வந்தால் தானே, கனிகள் நிறைய அளிக்கும் ? அது போல் என்கிறார் ராஜா பர்த்ருஹரி.
वने रणे शत्रुजलाग्निमध्ये
महार्णवे पर्वतमस्तके वा ।
सुप्तं प्रमत्तं विषमस्थितं वा
रक्षन्ति पुण्यानि पुरा कृतानि ॥
Vane rane shatru jalaagnimadhye, mahaarnave parvatamastake vaa
Suptam pramattam vishamasthitam vaa rakshanti punaayni puraakritaani
ஒருவன் பூர்வ ஜென்மத்தில் சத் காரியங்கள் நிறைய பண்ணி அதன் பலன் பெற்றால் தான் அவன் பிறர் மெச்ச வாழமுடியும். காட்டில் வழி தெரியாமல் தவித்தாலும் வழி தென்படும், யுத்தத்தில் பலம் இல்லையென்றாலும் எதிராளியை வெல்ல முடியும், எதிரிகளை எளிதில் சமாளித்து வெற்றி பெறமுடியும், நீரிலும் நெருப்பிலும் சிக்கிக்கொண்டாலும் உயிர் தப்பிக்க முடியும். தூக்கத்தில் புரண்டு மலையுச்சியிலிருந்து கீழே கடலில் விழுந்தாலும் ஆசாமி கரை ஏறுவான். மொத்தத்தில் கஷ்டமான எந்த சந்தர்ப்பத்திலும் சூழ்நிலையிலும் ஒருவனது ஊழ்வினைப் பயன் நல்லதாக இருந்தால் அவன் சுகவாசி. அதிர்ஷ்டக்காரன். .
No comments:
Post a Comment