Sunday, June 24, 2018

MEETING GOD



  ஒரு சம்பாஷணை  J.K. SIVAN 

எல்லோருக்கும் தெரிந்ததையே  சில விஷயங்களை  மீண்டும்  அறியும்போது  நமக்கு அலுப்பு வெறுப்பு உண்டாவதில்லை  என்பதற்கு காரணம், அந்த  விஷயத்தின்  இனிமையான தன்மை, அழகான ஆழமான அர்த்தம்.

ஒரு பக்தனுக்கு  எப்படியாவது பகவானை பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. எப்படி சந்திப்பது ?
நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு  எல்லாம் போ !" என்றார்கள் . போனான்,  ஒரு சமயம் ஒரு கோவிலுக்கு செல்லும்போது வழியே  ஒரு  துறவியை சந்தித்து வணங்கினான். அவரைப் பார்த்தால் சிறந்த ஒரு ஞானி என்று அவனுக்கு பட்டது.

" யாரப்பா நீ?''
'' கோபாலசாமி  ஐயா , சென்னையிலிருந்து வருகிறேன்''"
" எங்கே  இவ்வளவு தூரம் வடக்கே வந்திருக்கிறாய்?''
 ''கடவுளை நேரில் காண  கோவில் கோவிலாக போகிறேன் !"
" எங்கே பகவானை சந்திக்கப்போகிறாய்  ? "
" கோவிலில் !"
" அங்கே போய் என்ன செய்வாய் "
" அவரை  நேரில் சந்தித்து  வழிபட போகிறேன் ! "
" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
" தெரியாது "
" நீ தான் கடவுளையே  பார்த்ததில்லையே,  எப்படி நீ அவரை   அடையாளம் கண்டு வழிபடுவாய் ?"
" என்ன சொல்கிறீர்கள் சுவாமி "
" நீ  அப்படி  யாரையாவது கடவுள் என்று ஏற்று  வழிபட்டால் அது  ஒரு  வெறும் சடங்கு தான்  "
இவ்வளவு தூரம் அலைந்த கோபாலசாமி  கலங்கினான்.  அதைக் கண்ட ஞானி
" அப்பா  கோபாலசாமி,  நீ செய்யபோவது உண்மையான கடவுள் வழிபாடு அல்ல .இப்போது எல்லோரும் செய்வது தான்''
''புரியவில்லை  சுவாமி''
''எல்லோரும்  இப்போது  கடவுளிடம்  அவரவர்கள் விரும்பும் ஆசைகளை  தேவைகளை அறிவித்துவிட்டு  அதை  எனக்கு பூர்த்தி செய். உனக்கு இதை செய்கிறேன் என்று  கடவுளுக்கே ஆசை காட்டுகிறார்கள். ஏதேதோ பட்டியல்  கோரிக்கைகள் முன் வைக்கிறார்கள். அவ்வளவுதான். அது நிறைவேறும் என்ற நம்பிக்கை. முடிந்தால் சொன்னதை செயகிறார்கள், சிலர் அதையும் மறந்து விடுகிறார்கள் என்ன சொல்ல? "
" சுவாமி நான் அப்படிப்பட்டவன் இல்லை. கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
" உனக்கு தெரியாத நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்துவாய்  ?"
"  சுவாமி  ....... நான்  . ஆண்டவனை எப்படித்தான்   நேரில் தரிசிக்க முடியும் ?
" நீ  அவரை நேரில் சந்திக்க முடியாது . உணர முடியும் !"
" எப்படி சுவாமி ?"
" தியானம் செய் "
" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா சுவாமி ?"
" இல்லை என்றால் இல்லை தான் . தியானம் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தினால்  பெறுவது தான்  வழிபாடு . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த  யாத்திரை க்ஷேத்திரத்தில் இந்த இருவரும் பேசும்போது வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்து ஞானியை வணங்கினார்.  ஆங்கிலத்தில்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு  தனது நோக்கத்தை சொன்னார்.  கோபாலசாமிக்கு ஆங்கிலம் சரளமாக பேசவராது கொஞ்சம் கொஞ்சம் பதில் சொல்வான்.  ஆனால் புரிந்து கொள்வான். ஞானி சரளமாக ஆங்கிலம் பேசினார். அவர்கள் பேசியதன் சாராம்சம்:
" WHAT IS YOUR WISH MY FRIEND''
'' I WANT PEACE"
''ÝOU ALREADY HAVE IT WHY YOU LOOK FOR IT EXTERNALLY EVERYWHERE?'
''SWAMI, CAN YOU MAKE IT CLEAR FOR ME?''
" REMOVE THE FIRST TWO WORDS OF WHAT YOU TOLD ME THAT YOU WISH FOR...''
 THE FOREIGNER  THOUGHT FOR A WHILE AND REPLIED SLOWLY:  '' IF  I REMOVE THE FIRST TWO WORDS  '' I ''  AND  ''WANT''  WHAR REMAINS IS  ''PEACE''  ONLY.
 I   எனும்  'நான் '  ''எனது'' என்ற அகங்காரம் விலகினால்  ஆசைகள் அகலும். ' அமைதி ' என்கிற இறைநிலை அடையமுடியும். வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கூட்டத்தில்   இன்னொரு பக்தன் ஒரு கேள்வி கேட்டான். .
" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது ! ஸ்பெஷல் தரிசனம் ! 500 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"  அவன் முகத்துல கடவுளை நெருங்கி  விட்ட பெருமிதம் !
" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
"இல்லை "
" இருக்காதே  உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமான வரும் இருப்பாரே  !"
" யார் அவர் "
" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"  500 ரூபாய் கொடுத்தவன் சோர்வோடு சென்றான்.  கோபாலசாமி வணங்கிவிட்டு திரும்புகிறான்.
" எங்கே போகிறாய் கோபாலசாமி  ? "
" சென்னைக்கு, என் வீட் டுக்கு !"
" கோவிலுக்கு போகவில்லையா ?" இல்லை "
" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .
'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் ".
" ஆன்மிகம் என்பது  நெருங்குவது அல்ல , விலகுவது'' ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ , அவ்வளவு தூரம் நெருங்கிவிட்டோம்  என அர்த்தம்."

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...