Friday, June 8, 2018

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்  '       ஜே. கே. சிவன்


                                     38    துருபதனின் மகிழ்ச்சி. 

பாஞ்சால தேசத்தில்  துருபதன் அரண்மனை அருகே மைதானத்தில் ஏகப்பட்ட ரகளை.  அநேக  ராஜாக்கள் குழுமி இருந்த இடம். 
எப்படி ஒரு பிராமண வாலிபன் போட்டியில் வெற்றி பெற்று  அரசன் மகளை மனைவியாக்கி கொண்டான்.  யார் அவன்?  ஏதாவது மந்திரவாதியா? விடக்கூடாது அவனை. அங்கேயே கொன்றுவிடவேண்டும்?  என  துரியோதனன் போல் மற்று அநேகரும்  கோபம் கொண்டிருந்தனர். 

 அர்ஜுனன் மீது கடுங்கோபமும் பொறாமையும்  கொண்டு  அனல் மூச்சு  விட்டனர்.  க்ஷத்ரியர்கள் மட்டுமே  போட்டியிடக்கூடிய ஸ்வயம்வரத்தில் எப்படி ஒரு பிராமண பிரம்மச்சாரி கலந்து கொள்ளலாம் '' அவனைக் கொன்று விடுவோம்  வாருங்கள்.   இதை அனுமதித்த  துருபதனையும்  அவன் மகன் த்ருஷ்டத்யும்னனையும் பிடித்து சிறையிலடைப்போம்''  என்று  வெகுண்டனர், கறுவினர்.  

எல்லா அரசர்களும் ஆயுதம் தாங்கி துருபதனை தாக்க நெருங்கிய நேரத்தில் பீமன்  ஒரு  பெரிய  மரத்தை வேரோடு பிடுங்கி கையில் வைத்துக்கொண்டு  துருபதன் அருகில்  அவர்களை எதிர்கொண்டு நின்றான்.  அர்ஜுனன்  தனது  வில்லை கையில் எடுத்துக்கொண்டு தயாரானான்.

''கிருஷ்ணன் இதை  ஊகித்திருந்தான்.   ஆகவே  இதை கவனித்தவன்  மெதுவாக   பலராமனிடம்  '' அண்ணா,  நிச்சயம்  இது பீமன் தான்.  என் சந்தேகம் ஊர்ஜிதமாகியது.  இந்த  அசுர பலம் கொண்ட வீரன், பலசாலி,  பீமனைவிட  வேறு யாருமிருக்க முடியாது.   அருகில் நிற்பவன்  அர்ஜுனனே.  அவன் கண்களே சொல்கிறது. கிடைத்த சமயத்தில் மற்ற அரசர்களை நொடியில் கொன்று விடும்  தீரம் தெரிகிறது.   அதோ நிற்பவன் தர்மன், மற்றும் இரு சகோதரர்கள்.  எனவே  பாண்டவர்கள்  தீயில்  மரணமடையவில்லை  என்று நிச்சயமாக   தெரிந்து விட்டது''  என்றான்.

''கிருஷ்ணா,   நீ சொல்வது  எனக்கு  தேனாக  காதில் விழுகிறது.  நமது அத்தை  குந்தி தீயில் குழந்தைகளோடு மாண்டுவிட்டாளே''  என்ற துக்கம்  எனக்கு  நெஞ்சில்  முள்ளாக  குத்திக்  கொண்டிருந்தது.  அவர்கள் எப்படியோ உயிர் தப்பி  பிழைத்துவிட்டார்கள் என்று அறியும்போது என் மகிழ்ச்சி பலமடங்கு  அதிகமாய் விட்டது.

 இதற்கிடையில்  அங்கே  ஒரு யுத்தம்  தொடர்ந்தது.  கர்ணனும் அர்ஜுனனும் மோதினார்கள்.  கர்ணன்  ஒரு பிராமணனின்  திறமையில் வியந்தான்.  என்னோடு மோதக்கூடியவன் ஒருவனே   அவன் அர்ஜுனன்.  நீ  அர்ஜுனனா ,  பரசுரமானா, அல்லது அந்த நாராயணனா''  என்று கேட்டதற்கு   ''எவருமே இல்லை நான் ஒரு பிராமணனே.  தொடரட்டும் நமது யுத்தம்''   என்றான் அர்ஜுனன்.  ஆனால் கர்ணன்  தொடரவில்லை. பிராமணன்  ஏதோ தெய்வ சக்தி கொண்டவன். பிராமணன் காப்பாற்ற பட வேண்டியவன். கொல்லப்படவேண்டியவன் இல்லை ''   என்று முடிவெடுத்தான்.

மற்றொரு பக்கம் பீமன்  துர்யோதனாதிகளை  சூரையாடிக்கொண்டிருந்தான்.

கிருஷ்ணன்  குறுக்கிட்டு  இந்த  ஸ்வயம்வரம் துருபதன் திரௌபதியின் விருப்பம் போல் நடந்து முடிந்தது. எதற்கு மற்றவர்கள் இந்த  நேர்மையான  முடிவை  ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக  திரும்பக்கூடாது. இந்த யுத்தம் தேவையற்றது''   என்று நிறுத்தினான்.

குந்தி  தனது வீட்டில்  பாண்டவர்கள் ஏன் இன்னும் திரும்பவில்லை என்று கவலையோடு காத்திருந்தாள்.

'' திருதராஷ்ட்ரன் மக்கள்  என் குழந்தைகள்   பாண்டவர்களை  அடையாளம் கண்டுகொண்டு  அவர்களுக்கு ஏதாவது ஆபத்து  விளைந்திருக்குமோ?

எவனாவது ராக்ஷசன் பீமனைத் தேடிவந்து எல்லோரையுமே  அழித்திருப்பானோ? '' ஏன்  காலையில் சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. எனக்கு கவலையே ஒரு வழக்கமாக பழக்கமாகிவிட்டதோ?''

உள்ளே அமர்ந்திருந்த குந்தியின்  காதில்   வாசலிலிருந்து  யுதிஷ்டிரன் குரல் கேட்டது.    ''தாயே,  இன்று எங்கள் பிட்சை  அபூர்வமாக  அதிசயமாக திருப்தியாகவே கிடைத்துள்ளது.  நீ அதைக் கண்டு ஆச்சர்யப்படப்போகிறாய் . இதோ  கொண்டு வந்திருக்கிறோம்.''

''மகனே  ரொம்ப சந்தோஷமடா.   என் சந்தோஷமே  நீங்கள்  தான்.   எனவே   ஐவருமே  அதை சரிசமமாக  பங்கிட்டுக்கொண்டு அனுபவியுங்கள் '' என்று  அன்னை  பதிலளித்தாள் .
பிறகு தான் கிருஷ்ணா  என்ற திரௌபதி அவர்களோடு வந்ததையும்  யுதிஷ்டிரன் சொன்னது  அவளைத்தான் என்றும் புரிந்து கொண்டாள் .

தாய் சொல்லை தட்டக்கூடாது அல்லவா?   ஏற்கனவே  வியாசர் சொன்னது,  சிவனின் வரம்  எல்லாம்  .நினைவுக்கு வர  இது இவ்வாறு தான் நடக்கவேண்டும் என்பது தெய்வ சங்கல்பம் என திரௌபதி ஐவரின் மனைவியானாள் .

அப்போது  கிருஷ்ணனும் பலராமனும் அவர்கள்  தங்கியிருந்த குயவன் வீட்டுக்கே  வந்துவிட்டார்கள்.  இருவருக்குமே  அத்தை உயிரோடு இருப்பது மகிழ்ச்சியளித்தது.

பாண்டவர்களுக்கு தக்க துணை கிடைத்துவிட்டதே.   துருபதன் உறவு  ஒரு சரியான பக்க பலம் அவர்களுக்கு.   கொடுத்துவைத்தவர்கள் அவர்கள்.

பாண்டவர்களுக்கு தெரியாமல் அவர்களைப் பின் தொடர்ந்த  திருஷ்டத்யும்னன்  இரவில் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு  விடியற்காலை  அரண்மனை திரும்பினான்.  அவர்கள்  பாண்டவர்கள், பிராமணர்கள் அல்ல என்று தெரிந்து தந்தையிடம் விவரம் சொல்ல  துருபதனும் மகிழ்ந்தான்.

தனது பெண் தகுந்த  க்ஷத்ரிய குலத்திலேயே  சேர்ந்துவிட்டாள். உலகமே போற்றும்  வீராதி வீரன் அர்ஜுனனே  அவளை  வென்றவன் என்று அறிந்து தந்தை துருபதன் மகிழ்ந்தான். ராஜோபசாரங்களோடு  பாண்டவர்களை அரண்மனைக்கு வரவழைத்தான்.

''மகரிஷி வைசம்பாயனரே,  துருபதன்  பாண்டவர்களை அடையாளம் கண்டு கொண்டு   மகிழ்ந்தான்  என்கிறபோது எனக்கே  சந்தோஷமாக இருக்கிறதே, பெண்ணைப் பெற்றவனுக்கு தனது செல்வ மகள் ஒரு  பிராமண பிரம்மச்சாரியை மணக்கவில்லை, ஒரு சிறந்த க்ஷத்ரிய திலகமே  தான் அவளை வென்றவன்  என்று  அறிந்து  எப்படி  ஆனந்தத்தில் மூழ்கியிருப்பான்  என்று  புரிகிறது'' என்றான் ஜனமேஜயன்.

''ஜனமேஜயா,  பாண்டவர்கள்  வாரணவத காட்டில் தீக்கிரையாகாமல் தப்பித்தனர்  என்று அறிந்து துருபதன் அவர்களுக்கு சேரவேண்டிய அரச மரியாதைகளை  அளித்து  அவர்கள் பாதுகாப்புக்கு  தானே  துணை நின்றான்.   ஆனால்  துருபதனுக்கு ஒரு பெண்  ஐவரை மணப்பது  பாபம் என்ற எண்ணம் இருந்தது.

அப்போது அங்கே  வேத வியாசர்  வந்தது  நல்லதாகி விட்டது.  வியாசருக்கு  தெரியாத சாஸ்திரமா?.  அவரை துருபதன் கேட்க  வியாசர் என்ன சொன்னார் 
?

AINDHAM VEDHAM  IN TWO VOLUMES  AVAILABLE FOR DISTRIBUTION AS DONOR COPIES. INTERESTED MAY CONTACT ME.  J.K SIVAN 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...