பேசும் தெய்வம்: J.K.SIVAN
யார் ஜகத் குரு?
மஹா பெரியவா பற்றிய ஒரு அற்புதமான செய்தி. அவரைப் பற்றிய செயதிகள் எல்லாமே அற்புதம் தான் என்றாலும் இது ஒரு விசேஷ செய்தி, அதுவுமில்லாமல் உண்மையில் நடந்த சம்பவம் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
1933 வாக்கில் மகா பெரியவா காசிக்கு விஜயம் செய்தனர். காசி ராஜா அரண்மனையில் அவருக்கு வரவேற்பு. ராஜா பெரியவாளைப் பற்றி கேள்விப்பட்டவன். ஞானஸ்தன். ராஜா கொலுமண்டபத்தில் நிறைய பண்டிதர்கள் இருந்தார்கள். உலகாயதமாக வாழ்ந்த தாம் கற்றுணர்ந்த பண்டிதர்கள் என்ற பெருமிதம் சதா அவர்களுக்குள் தலை தூக்கி இருந்ததில் ஆச்சர்யமில்லை. அவர்களுக்கு இந்த ஒடிசலான தென்னிந்திய பிராமண சந்நியாசிக்கு எதற்கு இத்தனை ஆரவாரமான பெரிய வரவேற்பு என்று அவர்மேல் பொறாமையும் சேர்ந்திருந்தது.
இவர் ஜகத் குருவாமே !!! எப்படி இந்த மனிதர் ஜகத்குருவாக இருக்க முடியும்?
மனதில் இருந்ததை ஒரு பண்டிதர் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
''ஜகத் குரு என்றது யார், நீங்களா ?''
''நானே தான்''
''ஓஹோ, நீங்கள் தான் இந்த ஜகத் எல்லாவற்றுக்குமே குரு?''
''பெரியவா பதில் சொன்னார் जगतां गुरुः न
நீங்கள் சிந்தித்து பார்க்கவேண்டும், ''நான் ஜகத் குரு '' என்று சொல்லும்போது நான் தான் இந்த ஜகத்துக்கெல்லாம் குரு என்று அர்த்தமில்லை . அந்த அர்த்தத்தில் நான் சொல்லவும் இல்லை '' जगति पद्यमनाः सर्वे मम गुरवः
இந்த உலகத்தில் ஜீவிக்கும் அனைத்து உயிரினங்களும் என் ஆச்சார்யர்கள், குருமார்கள்.'' என்று அர்த்தம்.
''ஹா என்றான் ராஜா. அசந்து போனார்கள் எல்லோருமே. யாருமே இந்த பதிலை எதிர்பார்க்கவில்லையே.
மகா பெரியவா அதோடு நிறுத்தவில்லை.
அவர்கள் எல்லோரும் இருந்த அந்த ராஜாவின் தர்பார் மண்டபத்தில் மேல் கூரையில் மாடத்தில் சில குருவிகள் கூடு கட்டி இருந்தன. மகா பெரியவாளின் கூர்மையான கண்கள் அதை காண தவறவில்லை. அந்த கூடுகளில் ஒன்று கை உயர்த்தி காட்டி அந்த பண்டிதர்களை ஒரு கேள்வி கேட்டார் . எல்லாம் சமஸ்க்ரிதத்திலேயே தான்.
किं इदं?" இது என்ன S?
பண்டிதன் பதில் சொன்னான் नीडः கூடு.
பெரியவா: केन निर्मितं ? இது யாரால் கட்டப்பட்டது?
பண்டிதன்: चटकैः குருவியால் கட்டப்பட்டது.
''இந்த குருவிகள் கூடுகளை கட்டினவே, அவை நம்மைப் போல் கைகள் கால்கள் உபயோகித்து அவற்றை கட்டவில்லை அல்லவா? நமக்கு பகவான் கை கால்கள் எல்லாம் கொடுத்திருக்கிறானே அந்த மாதிரி கூடு ஒன்று நம்மால் கட்ட முடியுமா?காரணம் என்ன தெரியுமா? பகவான் அந்த குருவிக்கு க்ரியா சக்தியை கொடுத்திருக்கிறான். (क्रिया शक्ति) . எனக்கு அந்த சக்தி கிடையாது. என்னிடம் இல்லாத அந்த சக்தி உள்ள இந்த சின்ன குருவி எனக்கு ஆசார்யன். குரு. புரிகிறதா? ஜகத் குரு அர்த்தம்?
No comments:
Post a Comment