Monday, June 11, 2018

KAATHIDA VA KESAVA




காத்திட வா  கேசவா:  J.K. SIVAN 

                                   ஹஸ்தினாபுரம்


ஹஸ்தினாபுரம்  என்று  ஒரு   ஊர்  இருக்கிறதே தெரியுமா?.  உடனே  என்னை  கிரோம் பேட்டைக்கு  அழைத்து செல்ல வேண்டாம். பிளாட்டும்  flat டுமாய்  ஜனங்கள் பஸ் வருமா என்று  காத்திருக்கும்  ஹஸ்தினாபுரம்  அல்ல  இது.  நான் சொல்லும் ஹஸ்தினாபுரம் குண்டும் குழியுமாக உடைந்து போன முனிசிபல் தார் ரோடு இல்லாதது.    
 கோட்டைகள் நிரம்பியது.      கிருஷ்ணன் காலத்தியது.  

ஹஸ்தினாபுரத்துக்கு இந்த   பூமியில்  இணையே கிடையாதாம். வரிசை  வரிசையாக வீதிகள். பெரிய பெரிய வானளாவும் மேகத்தை முட்டும்  உயர மாளிகைகள். உப்பரிகைகள்.

மாடங்களில்  தெருவில் இருந்து நாம்  பார்க்கும்போதே எத்தனை அழகழகாக தெரிகின்ற  பளிச்சிடும் முத்துத் தோரணங்கள்.  (இப்போது  நாம்  காதி க்ராப்டில்  குறைத்த விலையில் வாங்கி தொங்கவிடும்  ஒரு பக்க  சாய  ஜன்னல்  திரைகள் அல்ல. கோவில்களில் கூட அதைத்தானே  போடுகிறார்கள்.) 

எங்கு  திரும்பி பார்த்தாலும் நம்  கண்ணில்  படுவது   மலர்கள்  சூழ்ந்த  மலர்ச் சோலைகளாம்.   கண்ணைக்கவரும் குளங்கள்.    என்ன ஆச்சர்யம்  அந்த  குளத்தங்கரையில்  நாம்  காணும்  அனைத்து பெண்களுமே எப்படி ரதிகளாக, ரம்பைகளாகவே  இருக்கிறார்கள் ?

அந்தணர் வீதிகள்.  அக்ரஹாரங்கள். வேதம் சப்திக்கிறதே.  மந்திரங்கள் ஒலிக்கிறதே. ஹோமத்தீ  பளிச்சிடுகிறதே.  யாரோ   சிலர்  உரக்க மந்திரம் ஜெபிக்க மற்றவர்  கேட்டு கற்றுக் கொள்கிறார்களே . 
அங்கங்கே  சில  பெரிய  முற்றங்களில் அமர்ந்து  சிலர் தர்க்க வாதங்களில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களே.  அவர்கள் அனைவருமே தர்ம நீதி  சாஸ்திரங்களில் வல்லவர்கள். கேட்டுக்கொண்டிருக்கிறவர்களுமே  ஞானஸ்தர்கள்.

இதோ இந்த தெருக்களில்  யார்  நடமாடுகிறார்கள் ?  மாலைகள் புரண்டசையும்  பெரிய  மலை போன்ற   உறுத்தின  திரண்ட தோளுடையவர்களாக இருக்கிறார்களே.  வேலையும் வாளினை யும்  பெரிய  வில்லையுந்  கதையையும் விரும்பி  உபயோகிக்கிறார்கள்.  காலையும் மாலையிலும்  பகைவரை வெல்லும்  பயிற்சியில்  தொழில் பல பழகி  போர்  முறைகள் கற்று தேர்ச்சி கொள்கிரார்களோ?   அதோ  அந்தப்பக்கம் என்ன தெரிகிறதா?
 நூறு  யானைகளை  தனியாக நின்று நொறுக்க வல்ல க்ஷத்ரியர்கள் நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டு  பயிற்சிகளில் ஈடுபடுகிறார்களே .  நிறைய பேர் வேறு  வந்து போய்க் கொண்டிருக்கிறார்களே. இது அவர்கள் வாழும் இடமோ?

இந்த  அழகிய  நகரத்தில்,  ஹஸ்தினாபுரத்தில் எங்கு நோக்கினாலும்  இனிமையாக ஒலிக்கும்  இசை  முழக்கங்கள் -பல நாட்டிய மாதர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்களே.  அவர்கள்  ஆடுவதிலிருந்தே அவர்கள் வெகு காலமாக ஆடும் தேர்ந்த கலைஞர்கள் என்று தெரிகிறதே.  

பழமை வாய்ந்த இசைக் காவியங்கள் சிலவற்றை ஒரு கூட்டம்  ரசிக்கிறதே. மிக அருமையான  சிற்பிகளின்  கை வண்ணத்தில்  சிற்பங்கள்,  ஓவியர்கள்  தீட்டிய  அற்புத  ஓவியங்கள் . பேரிகைகள் முழங்க  வலம் வரும் ஜல் ஜல்  என்று ஒளித்துக்கொண்டு  வரும் மணி கட்டிய யானைகள்,  படு வேகமாக தூசியையும் புழுதியையும் கிளப்பி விட்டு   ஓடும் குதிரைகள்.  

அடேயப்பா,   பெரிய பெரிய   தேர்களில்  சிலர் செல்ல,  சிலர் மற்போர் பயிற்சிகளில் மும்முரமாக  பழகுகிறார்கள்.  அதைப் பார்க்கத்தான் எத்தனை பேர்.

எங்கும் கண்ணில் படுகிறதே,  அதைவிட  கம்மென்று  நறுமணம் வீசி,  வித வித வண்ணத்தில்,   நாக்கில் ஜலம் சொட்ட வைக்கும்  அரிய கனிவகைகள். இவை  தவிர  பள  பள  வென்று  கண்ணை பறிக்கும் மூக்கைத் துளைக்கும்  நறுமணத்தோடு பணியார வகைகள்  கூடை கூடையாக.  குளிர்ந்த  சந்தனாதி சாந்துகள் -மலர்க்குவியல்கள்,   அதையெல்லாம் வியாபாரம் பண்ணும்  மலர்விழிக் காந்தங்கள் , சுண்ணமும் நறும்புகை யும்  மக்கள்  விரும்பும் பல பண்டங்களும் உண்ண  தின்பண்டங்களும் களிப்பும்,   கேளிக்கையும், கொண்டாட்டமும் மட்டற்ற  மகிழ்ச்சி ஒன்றே தான் . எல்லா நாளும் எப்போதும் திருவிழா தானா இங்கே?

யார்  இந்த  மன்னர்?  சிவனுடைய  நண்பன்  என்பார்களே அவரா? ,
வட திசைக்கதிபதி குபேரன் என்பார்களே  அவரா? அவனுடைய  பெருஞ்செல்வம் இவரிடம் இருப்பதில் தம்மதூண்டு  (இது தமிழா?). இவரிடம் இல்லாதது என்று  ஒன்றில்லை.  அவரைச் சுற்றி  செல்வம்  சேர்க்கும் வணிகர் கூட்டம்.   எல்லாத் தொழிலிலும்  வல்லார்கள்  அருகிலேயே  இருக்கிறார்கள்.  இந்த அரசனின்   சிம்மாசனம்  அத்தனை பெரியது, பெருமையுடையது.  இந்த அரசனுடைய  ஆட்சியில் எவனுக்குமே  பயம்  என்றால்  என்ன  என்றே  தெரியாது.  

இது தான் சுருக்கமாக துரியோதனனின் ஹஸ்தினாபுரம்.

அடுத்தபடியாக  துரியோதனன் சபைக்குள்  நுழைவோம். அதற்கு முன் பாரதியாரின் வாக்கில்   ''பாஞ்சாலி சபதத்தில்''  இதை பார்ப்போம்.


துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்
                      ஹஸ்தினாபுரம்

அத்தின புரமுண் டாம்;-இவ்
அவனியி லேயதற் கிணையிலை யாம்;பத்தியில் வீதிக ளாம்;வெள்ளைப் 
பனிவரை போற்பல மாளிகை யாம்;முத்தொளிர் மாடங்க ளாம்;-எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்;நத்தியல் வாவிக ளாம்;-அங்கு;நாடு மிரதிநிகர் தேவிக ளாம்.
அந்தணர் வீதிக ளாம்;-மறை
யாதிக ளாம்கலைச் சோதிக ளாம்;செந்தழல் வேள்விக ளாம்;-மிகச்
சீர்பெருங் சாத்திரக் கேள்விக ளாம்;மந்திர கீதங்க ளாம்;-தர்க்க
வாதங்க ளாம்;தவ நீதங்க ளாம்;சிந்தையி லறமுண் டாம்;-எனிற்
சேர்ந்திடுங் கலிசெயும் மறமுமுண் டாம்.
மெய்த்தவர் பலருண் டாம்;-வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்;உய்த்திடு சிவஞா னம்-கனிந்
தோர்ந்திடும் மேலவர் பலருண் டாம்;பொய்த்த விந்திரசா லம்-நிகர்
பூசையும் கிரியையும் புலைநடை யம்
கைத்திடு பொய்ம்மொழி யும்-கொண்டு
கண்மயக் காற்பிழைப் போர்பல ராம்.
மாலைகள் புரண்டசை யும்-பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடை யார்,வேலையும் வாளினை யும்-நெடு
வில்லையுந் தண்டையும் விரும்பிடு வார்,காலையும் மாலையி லும்-பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம் போர்
நூலையும் தேர்ச்சிகொள்வோர்,-கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல் லார்.
ஆரிய வேல்மற வர்,-புவி
யாளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந் தோர்,சீரியல் மதிமுகத் தார்-மணித்
தேனித ழமுதென நுகர்ந்திடு வார்,வேரியங் கள்ளருந் தி-எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரி வார்
பாரினில் இந்திரர் போல்-வளர் 
பார்த்திவர் வீதிகள் பாடுவ மே
நல்லிசை முழுக்கங்க ளாம்;-பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்க ளாம்;தொல்லிசைக் காவியங் கள்-அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங் கள்
கொல்லிசை வாரணங் கள்-கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண் டாம்;மல்லிசை போர்களுண் டாம்;-திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண் டாம்.
எண்ணரு கனிவகை யும்-இவை
இலகிநல் லொளிதரும் பணிவகை யும்,தண்ணுறுஞ் சாந்தங்க ளும்-மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்க ளும்
சுண்ணமும் நறும்புகையும்-சுரர்
துய்ப்பதற் குரியபல் பண்டங்க ளும்
உண்ணநற் கனிவகை யும்-களி
வுகையும் கேளியும் ஓங்கின வே,சிவனுடை நண்பன்என் பார்,-வட
திசைக்கதி பதியள கேசன் என் பார்;அவனுடைப் பெருஞ்செல் வம்-இவர்
ஆவணந் தொறும்புகுந் திருப்பது வாம்;தவனுடை வணிகர்க ளும்-பல
தரனுடைத் தொழில்செயும் மாசன மும்
எவனுடைப் பயமு மிலா-தினிது
இருந்திடு தன்மையது எழில்நக ரே

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...