Tuesday, June 5, 2018

KALABAIRAVASHTAKAM



கால பைரவாஷ்டகம் - J.K. SIVAN காலம் யாருக்காகவும் காத்து நிற்பதல்ல. ஓடிக்கொண்டே இருப்பதே காலம். அதன் ஒட்டத்தில் நாமும் கடத்திச் செல்லப்படுகிறோம். ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம் அதனால்நமது உலக வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள காலபைரவரை வணங்குகிறோம். கால பைரவர் என்று நாம் சொல்லும்போதே அவர் காலத்தை கடக்க நமக்கு வழி காட்டுபவர் என்ற அர்த்தம் கிடைக்கிறது. காலத்தை வெல்லும சக்தி கொண்டவர் கால பைரவர்.. கால பைரவர் சிவ பெருமானே. காலனுக்கே காலனானவர் அல்லவா. காலபைரவரின் வாகனம் நாய். வீட்டு மிருகங்களில் அதிகம் நேசிக்கப்படுவது நாய் தான். மிக விலை உயர்ந்த நோயானாலும், தெருவில் கிடைத்த நாய்குட்டியானாலும், ஆதிகே ப்ரேமையுடன் வளர்க்கப்படுவது நாய். நன்றியுள்ள பிராணி என்று பேர் பெற்ற ஒரே மிருகம் நாய். எங்கள் வீட்டில் ஒன்பது பத்து வருடங்களாக வீட்டில் ஒருவனாக ஒரு கருப்பு டாபர்மேன் zorro என்ற பெயருடன் வளர்ந்தான் வாழ்ந்தான் என் மடியில் மறைந்தான். நினைவில் பசுமையாக நிலைத்துவிட்டான். நாய்களை பராமரித்தும் அவற்றுக்கு உணவளித்தும் நிறைய பேர் அவற்றை காலபைரவராக வணங்குகிறார்கள். கால பைரவ அஷ்டமி டிசம்பர்/ஜனவரி மாதம் வரும் அன்று காலபைரவர் சந்நிதியில் பூஜைகள் நடைபெறும். அநேகமாக சிவன் கோவில்களில் காலபைரவர் சந்நிதிகள் இருக்கும். திருவண்ணாமலை காலபைரவர் சந்நிதி மிக பிரசித்தி வாய்ந்தது. காசியில் உள்ள காலபைரவர் சந்நிதி முக்யத்வம் கொண்டது. ஆதிசங்கரரின் கால பைரவ அஷ்டகம் காசி பைரவர் மேல் பாடப்பட்டது. கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கால பைரவ வழிபாட்டுக்கு விசேஷமானது. சிவ பெருமான் த்யான கோலத்தில் மௌன குருவாக கல்லால மரத்தினடியில் தக்ஷிணாமூர்த்தியாக காட்சியளித்து வழிபடுகிறோமோ அது போல் அவரை ஆதி மூல கால பைரவராகவும் வழிபடுகிறோம். கால பைரவர் அஷ்ட பைரவர்களாக சந்நிதியில் நமக்கு காட்சி தந்து அருள்கிறார். இந்த ஒவ்வொரு அம்சத்தைப்பற்றியும் நிறையவே சொல்லலாம். நேரமோ இடமோ இல்லை. மனம் இருக்கிறது. கும்பகோணம் - திருப்பனந்தாள் மார்கத்தில் ஏறக்குறைய 10 -12 கிலோ மீட்டர் தூரத்தில் சோழபுரத்தில் 64 பைரவர்கள் மகா பைரவேஸ்வர சிவன் கோவிலில் அருள் பாலிக்கிறார்கள். இப்போது கால பைரவாஷ்டகம் பாடுவோம் அர்த்தம் புரிந்து கொள்வோம். देवराजसेव्यमानपावनांघ्रिपङ्कजं व्यालयज्ञसूत्रमिन्दुशेखरं कृपाकरम् । नारदादियोगिवृन्दवन्दितं दिगंबरं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥१॥ கபாலத்தை கையிலேந்திய கயிலைவாசா, மகா தேவா, உனது தாமரைப் பாதங்களை அர்ச்சிப்பவன் வேறு யாருமல்ல ஸாக்ஷாத் இந்திரன், தேவாதி தேவன், உனக்கென்று ஒரு தனி ஆபரணம், யாரும் அணிய நினைக்காத அரவபுரிநூல், , நாக யக்நோபவீதம். ஒளிவீசும் மகுடம் வைரத்திலோ, வேறு எந்த கல்லோ, மணியோ அல்ல. வளர்ந்து தேயும், பிறைச்சந்திரனே உனது ஜடாமுடியில் ஒரு கிரீடம். முகத்திலோ சர்வ சாந்தம். கருணை ப்ரவாஹம் கங்கையோடு போட்டி போட்டுக்கொண்டு. மோனத்தில் ஞானமா, ஞானத்தில் மோனமா என்று அறியமுடியாத உன்னை போற்றி பாடுபவர் யார் இங்கே நிற்கிறார்கள் நீ அறிவாயா? மூடின கண் திறந்தால் தானே தெரியும். ஆம் பரமேஸ்வரா, பாடுபவர்கள் திரிலோக சஞ்சாரி நாரத ப்ரம்ம ரிஷி, யோகீஸ்வரர்கள், முநீ ஸ்வரர்கள். திகம்பரேசா, உனது ஆடையே இந்த நீலாகாசம். பனிமலை சிகரத்தில் வெற்றுடம்பு.... காலபைரவா, காசிகா புராதிநாதா. உனக்கு நமஸ்காரங்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...