Saturday, June 30, 2018

HANUMAN




' ராம நாடகம்'' J.K. SIVAN

இது இதுவரை நீங்கள் கேட்காத, படிக்காத, அறிந்திராத, கதைகளில் ஒன்றாக இருந்தால் பரம சந்தோஷம். தெரிந்தவர்கள் மறுபடியும் புரிந்து கொள்ளலாம். கிருஷ்ணனுக்கு கோபம் வராது!

கிருஷ்ணனும் பலராமனும் துவாரகையில் அரசர்களாக ஆட்சி பாரத்தை செவ்வனே ஏற்று நடத்தி வருகிறார்கள். பெரிய ராஜா ராஜா பலராமன். சின்ன ராஜா கிருஷ்ணனைத் தேடி மக்கள் அன்றாடம் வெள்ளமாக மக்கள் வந்து தங்கள் குறைகள், தேவைகள், ஆலோசனைகள், அனைத்துக்கும் சொல்வது பலராமனுக்கு ஆச்சர்யமாக இருந்தது மட்டுமல்லாமல் கொஞ்சம் மனத்தில் "நம்மைத் தானே அரசன் என்ற முறையில் நாடவேண்டும்" என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டு வந்தது. இதை கிருஷ்ணன் கவனித்து விட்டான். பொறுமையாக பலராமனாக இதை வெளிப்படுத்த தக்க சமயத்திற்காக காத்திருந்தான். ஒருநாள் பேச்சோடு பேச்சாக பலராமன்

" கிருஷ்ணா, ராஜ்ய பாரங்களில் அதி முக்யமான வேலைகளை உன்னிடம் ஒப்படைக்கலாமென்று நினைக்கிறேன். அதற்கு உன் நேரம் அதிகம் செலவழியும் என்று தோன்றுகிறது. இந்த அன்றாட மக்கள் குறை தீர்ப்பு போன்ற வேலைகளை குறைத்துக் கொள்வது உனக்கு உதவுமே”!

" ஆம், அண்ணா, எனக்கும் அத்தகைய எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது. நான் நிறைய பிரயாணம் செய்யவேண்டும். மற்ற அரசர்களை எல்லாம் சந்தித்து செய்ய வேண்டிய வேலைகள் நின்று போய் இருக்கின்றதே!. நாளை முதல் மக்களை நீங்களே சந்தித்து அவர்கள் தேவையைப் பூர்த்திசெய்வது நல்லது என்றே எனக்கு தோன்றுகிறது.தண்டோரா போட்டு மக்களுக்கு செய்தி சொல்ல ஏற்பாடு செய்கிறேன்" என்றான் கிருஷ்ணன்.

அதே நேரத்தில் கிருஷ்ணனுக்கு , கருடன் போக்கும் கொஞ்ச நாளாக சரியில்லை என்று தோன்றியது. கருடன் இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை. தானே இன்றியமையாதவன். அரக்கர்களை எல்லாம் அழிப்பதில்

தன்னை விட சிறந்த வீரன் இல்லை. கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தானே என்ற மனப்பால் நிறைய குடித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் நாரதர் கிருஷ்ணனைக் காண துவாரகை வந்தபோது கருடன் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கிருஷ்ணன் தானே நேரில் அங்கு வந்தபோது காத்திருந்த நாரதரை உள்ளே அழைத்துச் செல்கிறான்.

''நாரத முனிவரே, எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்'.
"கட்டளை இடுங்கள் பிரபோ"
"கதலிவனம் சென்று அங்கு ஹனுமானைக் கண்டு இங்கே அழைத்து வாருங்கள்"

நாரதர் கதலிவனம் சென்ற போது ஹனுமான் வழக்கம்போல் கண் மூடி "ராம ராம ராம" என்று ஜெபத்தில் இருந்தார். கண் திறந்தபோது எதிரே நாரதரிஷி நிற்பதை கண்டார். ஆனந்தித்தார்.

''வாருங்கள் திரிலோக சஞ்சாரி நாரதரே. ரொம்ப நாளாயிற்று தங்களை பார்த்து''
"வானர ஸ்ரேஷ்டரே நான் உங்களை பார்க்க வந்ததே ஒரு காரியமாகத்தான். கிருஷ்ணன் தங்களை அழைத்து வர சொன்னார்"
"யார் கிருஷ்ணன்"
"கிருஷ்ணன் தான் ராமனாக இருந்தவர்"

ஹனுமான் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. மீண்டும் ராம ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார். வெகுநேரமாக காத்திருந்தும் ஹனுமான் தியானம் கலையவில்லை. நாரதர் திரும்பிச் சென்றார்.

"எங்கே ஹனுமான்? அழைத்து வரவில்லையா" என்று கிருஷ்ணன் கேட்டபோது நாரதர் நடந்ததை சொன்னார். கிருஷ்ணன் சிரித்தான்.
"மீண்டும் சென்று ராமர் அழைத்தார் என்று சொல்லுங்கள். அப்போது தான் வருவார்"

மறுபடியும் எதிரில் நாரதர் நிற்பதை கண்ட ஹனுமான் விழியை உயர்த்தி “என்ன” என்று ஜாடையாக கேட்க "உங்களை ராமர் அழைத்தார்" என்ற அடுத்த கணமே கை கூப்பி "ராம ராம" ஜபத்துடன் நாரதன் பின்னாலேயே நடந்தார் ஹனுமான்.

துவாரகை நந்தவனத்தில் ஹனுமனை விட்டு விட்டு நாரதர் மறைந்தார்.

“ராம ராம” ஜெபத்தில் கண் மூடி நின்ற ஹனுமான் கண் விழித்து பார்த்தபோது தான் ஏதோ ஒரு வனத்தில் இருப்பதை கண்டபோது அவருக்கு லங்காவில் ராவணன் அரண்மனை நந்தவனம் நினைவில் வர கோபத்தோடு ''இன்னுமா அந்த நந்தவனம் பச்சை பசேலென்று இருக்கிறது'' என்று துவாரகா நந்தவனத்தை அழித்து தீமூட்ட தொடங்கினார்.

யாரோ ஒரு வானரன் கிருஷ்ணனின் அரண்மனை நந்தவனத்தை அழிக்கிறான் என்ற விஷயம் முதலில் கருடனுக்கு தெரிந்து அவன் கோபமுடன் ஹனுமானோடு மோதி எதிர்கொள்ள முடியாமல் காயமுற்று தோல்வியோடு திரும்பினான். வீரர்கள் அனைவரும் படுகாய முற்று வீழ்வதைக்கண்ட பலராமன் தானே ஹனுமனை எதிர்த்து அவனைப் பிடிக்க முயற்சித்து பலராமனின் "பலம்" வாயுபுத்திரன் முன் செல்ல வில்லை. வாலால் சுருட்டி தூரே எறிந்தான் ஹனுமான்.

"ஆஞ்சநேயா'' என்ற பழக்கமான குரல் திடீரென்று கேட்டது.

ஆச்சர்யத்துடன் நின்ற ஹனுமான் கண்கள் எதிரே நின்ற ராமனை நோக்கின. சீதையுடன் ராமன் தன் முன்னே நிற்பதைக் கண்ட ஹனுமான் "என் தெய்வமே உங்களைக் காண என் கண் பாக்கியம் செய்திருக்கிறது" என்று கீழே விழுந்து வணங்கினான்.

ஹனுமான் கண்களுக்கு மட்டும் கிருஷ்ணன் ராமனாக தோன்றியதால் பலராமன், கருடன் மற்றும் கூடியிருந்தோர் அனைவரும் "ஹரே கிருஷ்ணா" என்று வாய் நிறைய போற்றினார்கள். ஆஞ்சநேயன் அவர்களை மாற்றி விட்டிருந்தானே .

SWAMIJI'S TIME:           J.K. SIVAN

                THE VEDHAS


With regard to the whole Vedic collection of truths discovered by the Aryan race, this also has to be understood that those portions alone which do not refer to purely secular matters and which do not merely record tradition or history, or merely provide incentives to duty, form the Vedas in the real sense.
The Vedas are divided into two portions, the Jnâna-kânda (knowledge-portion) and the Karma-kânda (ritual-portion). The ceremonies and the fruits of the Karma-kanda are confined within the limits of the world of Mâyâ, and therefore they have been undergoing and will undergo transformation according to the law of change which operates through time, space, and personality.
Social laws and customs likewise, being based on this Karma-kanda, have been changing and will continue to change hereafter. Minor social usages also will be recognised and accepted when they are compatible with the spirit of the true scriptures and the conduct and example of holy sages. But blind allegiance only to usages such as are repugnant to the spirit of the Shastras and the conduct of holy sages has been one of the main causes of the downfall of the Aryan race.
It is the Jnana-kanda or the Vedanta only that has for all time commanded recognition for leading men across Maya and bestowing salvation on them through the practice of Yoga, Bhakti, Jnana, or selfless work; and as its validity and authority remain unaffected by any limitations of time, place or persons, it is the only exponent of the universal and eternal religion for all mankind.
The Samhitas of Manu and other sages, following the lines laid down in the Karma-kanda, have mainly ordained rules of conduct conducive to social welfare, according to the exigencies of time, place, and persons. The Puranas etc. have taken up the truths imbedded in the Vedanta and have explained them in detail in the course of describing the exalted life and deeds of Avataras and others. They have each emphasised, besides, some out of the infinite aspects of the Divine Lord to teach men about them.

Friday, June 29, 2018

HINDU WEDDING RITES



''டும் டும் டும் கல்யாணம் '' - 7 - J.K. SIVAN .

மீண்டும் ஒரு குறிப்பாக சொல்வது

நமது ஹிந்து சனாதன கல்யாணங்களில் சப்தபதி என்ற ஏழு அடி சத்ய பிரமாணம் மிக முக்கியமானது. கடைசி வரை வாழ்க்கையில் இதை கடைபிடித்தவர்களும் உண்டு. என் முன்னோர்களில் பலர் அவ்வாறே வாழ்ந்தவர்கள். தெய்வங்கள்.
தஞ்சாவூர் தமிழில் ''ஏழு தப்படி'' ஏழு காலடி என்று அர்த்தம். தப்பான அடி அல்ல. மாப்பிள்ளை, பெண் இருவரும் கையைபிடித்துக்கொண்டு ஹோம குண்டத்தையும் கல்யாணம் செய்து வைக்கும் வாத்தியாரையும் சுற்றி வருகிறார்கள். அவர் ஏதோ மந்திரம் சொல்கிறார். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் தம்பதியர் பகவானை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அதாவது வாத்தியார் சொல்லும் மந்திரத்தை 'தப்பில்லாமல்' திருப்பிச் சொல்வதின் மூலம். இந்த ஏழு அடி எடுத்து வைப்பதன் அர்த்தம் போன கட்டுரையில் விரிவாக சொன்னேன்.

சுருக்கமாக சொல்லப்போனால்: கல்யாணம் பண்ணுவதற்கு வழிமுறை:

1. முதலில் ''வது வர குண பரிக்ஷம்'' - இதன் மூலம் ஒரு பையன் பெண்ணுக்கு தகுந்தவனா அல்லது பெண்பையனுக்கு ஏற்றவளா என்று சோதிப்பதற்காகத்தான், பெரியவர்கள் சம்பந்தம் பேசுமுன் சகல விபரங்களையும் கேட்டு அறிவார்கள். பொருத்தம் பார்ப்பது இதற்காகத் தான். இதெல்லாம் அப்போது....

2.' வரப்ரசேன, வரவரித்தி கர்மா'' -- தக்கவர்களை அனுப்பி பெண் கேட்பது. பெண்வீட்டார் முதலில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை தேடுதல் வழக்கமானது. இப்போது இதற்கென சில ப்ரோக்கர்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது எவரையாவது ''பிடிப்பது'' தனக்கு ஆதாயம் பெறுவது.

3. ''வரி நிஸ்சயம்.'' பெண்ணையோ பிள்ளையையோ தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்து கொள்ளுதல்.

4. ''மண்டபகரணம்'' - ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து கல்யாண ஏற்பாடு இப்போது அவசியமாகி விட்டது. ஒன்றரை வருஷத்துக்கு முன்பே கல்யாண மண்டபம் தேடி பிடித்தபிறகு தான் கல்யாணம் வைத்துக் கொள்ளமுடியும். அப்போதெல்லாம் பெண் வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு விமரிசையாக கல்யாணம் நடக்கும். ஊரில் எல்லோரும் பங்கேற்று கல்யாணம் நடக்கும். ஊர்லே கல்யாணம் மார்லே சந்தனம். இப்போது புத்தகத்தில் கதைகளில் மட்டுமே இதை படிக்கலாம். முடிந்தவர்கள் அவசியம் தங்களது குல தெய்வ ஊரிலே கல்யாணம் வைத்துக்கொள்ளலாம். சில கோவில்களில் கல்யாணம் செய்ய அனுமதி உண்டு. இடமும் இருக்கும்.

5. 'வது கிரஹ கமனம்'' : பிள்ளை பெண் வீட்டுக்கு செல்வது. அதற்கு முன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பரிச்சயம் இல்லை. இப்போது படித்து சந்தோஷமாக ''பேத்தல் '' என்று சொல்லி சிரிக்கலாம். தடை இல்லை.

6. 'நாந்தி ச்ராத்தம், புண்யாஹவாசனம்' - முன்னோர்கள் தேவர்கள் ஆசியை வேண்டுதல்.
ஹோமங்கள், ப்ரீதிகள் தொடர்வது..

வேதங்களில் '' தைல ஹாரித்ர லேபனம்'' என்று மஞ்சள் குங்குமம் தடவி பெண்ணை அலங்கரிப்பது பற்றி வருகிறது. ஒருவிதத்தில் மெஹந்தி, நலங்கு இது தான் இப்போது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

'மதுபர்க்கம்'' - பிள்ளையை பெண் வீட்டுக்கு அழைத்து பாலும் பழமும் கொடுப்பது. கல்யாண மண்டபத்திலேயே இது ஊஞ்சலில் இப்போது நடைபெறுகிறது. அந்த காலத்தில் 7 நாள் கல்யாணம் நடக்கும். இப்போது கல்யாணம் ஆகுமுன்பே சாயந்திரம் நிச்சயதார்த்தம், வரவேற்பு கல்யாணமாகாத ''தம்பதிகளோடு'' போட்டோ வாழ்த்து, அடுத்தநாள் காலை கல்யாணம். மத்தியானம் இடத்தை காலை பண்ணவேண்டும்.

மாப்பிள்ளையை விஷ்ணுவாக பெண்ணை லக்ஷ்மிதேவியாக பாவித்து உபசரிப்பது வேதங்களில் சொல்லப்படுகிறது.

'7. 'பரிதாபன, சம்நஹனம்'' என்பது புது வஸ்திரங்களை பெண்ணுக்கு உடுத்தி இருப்பில் தர்ப்பையை இடுப்பில் கட்டுவது. ,

8. 'ப்ரதிஸர பந்தனம்' : பெண்ணின் இடது கரத்தில், பையனின் வலது கரத்தில் காப்பு கட்டுவது.

9. ''பரஸ்பர சமிக்ஷண'' : அந்தக்காலத்தில் பெண்ணும் பிள்ளையும் நேரில் பார்த்துக்கொள்வதே கல்யாணத்தின் போது தான். தயவு செய்து சிரிக்காதீர்கள்..

10 ''ஆர்த்ராக்ஸத்ரோபனம்'' என்பது முழு நெல், அரிசியை பாலில், நெய்யில் கலந்து இருகையாலும் பெண்ணின் இரு கரத்தில் மாப்பிள்ளை கொடுப்பதும் அதேபோல் பெண் பிள்ளையின் கரங்களில் அளிப்பதும் ஒரு வழக்கம். இருவரின் சேர்ந்த கரங்களில் ஒரு தங்க காசு பெண்ணின் தந்தை அளிப்பார். இப்போது அதெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

வாத்யார் ரெண்டு பேருக்கும் கங்காஜலம் த்ருவ தர்ப்பையால் ப்ரோக்ஷணம் செய்வார்.கங்கண தாரணம் நடைபெறும்.

11. மங்கள சூத்ர தாரணம் - இதுவே முக்கிய நிகழ்ச்சி.

12 ''உத்தரீய ப்ராந்த பந்தனம்'' : மஞ்சள் கிழங்கு பாக்கு வெற்றிலையை பிள்ளையின் அங்கவஸ்திரத்தில் முடிந்து வைத்து ரெண்டு பேர் வஸ்திரத்தையும் இணைத்து முடிச்சு போட்டுவிடுவார்கள்.

'13. 'அக்னிஸ்தாபன ஹோமம்'' : ஹோமத்தீ வளர்த்து மந்திரங்கள் சொல்வது.

14. ''பாணிக்கிரஹணம்'' : பெண்ணின் கரத்தை பிள்ளை பற்றுவது.

15. ''லாஜ ஹோமம்'' : பெண் அல்லது பெண்ணின் சகோதரனோ அக்னியில் பொரி இடுவது. இது யமனுக்கு த்ரிப்தியை அளித்து எங்களை நீண்டநாள் வாழ வையப்பா என்று வேண்டுவது. ஒரு குட்டி லஞ்சம் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம்.

'16. 'அக்னி பரிணாயணம்: தீயை மூன்று முறை வலம் வருவது என்று தான் வேதங்களில் சொல்வது. ஆனால் ஏழுமுறை என்பது பின்னர் வழக்கமாகிவிட்டது. அதுவே சப்தபதி.

17. அஸ்மாரோஹணம்: அம்மி மிதிப்பது. கஷ்டங்களை, துன்பங்களை எதிர்கொள்வேன் என திடம் செய்து கொள்வது

18. மூர்தபிஷேகம் : பெண்ணுக்கு அபிஷேக ப்ரோக்ஷணம்:

19. ஸூர்யோதிக்ஷணம் : சூரியனை வணங்குவது.
ஹ்ரிதயஸ்பர்ச இருவரும் நெஞ்சைத்தொட்டு உள்ளன்போடு பிரார்த்திப்பது.

இன்னும் சொல்கிறேன்

RADHAKRISHNA



கோபம் அடங்கியது.... J.K SIVAN வீடு என்றால் உயரமாக மாளிகையாக பரந்து இருந்தாலும் பாரதியார் பாடியது போல் காணி நிலம் அதில் குடிசை, தென்னைகள், பசு கன்றுகள் பூஞ்சோலை, செடிகள் இருந்தாலும் ஒன்றுதான். வீடு மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. நாளெல்லாம் உழைத்து தனது குடிசைக்கு திரும்புகிறவன் அனுபவிக்கும் இன்பந் எழுத முடியாதது பிருந்தாவனத்தில் ராதையின் வீடு ரொம்ப பெரியது அல்ல. அழகிய குடில் .நிறைய கன்றுகள் பசுக்கள் சூழ்ந்து இருப்பது. சுற்றிலும் பூக்கள் செறியும் மரங்களும் மல்லி கொடிகளும் துளசி செடிகளும் நறுமணத்தைஅள்ளி வீசிக்கொண்டேயிருக்கும். காற்றுக்கும் தான் என்ன ஓரவஞ்சனை!!. எப்போதும் மந்த மாருதமாக வீசி அந்த வீட்டை சுற்றிக்கொண்டே இருக்கும். எனினும் அருகே இருந்த அனேக வீடுகளுக்கும் கூட நறுமணம் பரவ உதவும். பூசி மெழுகிய வழவழவென்ற மண் தரையில் வீட்டின் முன் வாயிலில் கோலம் ஒன்றை பெரிதாக அன்று விடியற்காலையில் ராதா போட்டுக் கொண்டிருந்தாள். பெரிய கோலம் போட்டால் கிருஷ்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும். இன்று எப்படியும் வந்து விடுவான். பார்க்காமல் இருக்கவே முடியாது. ரெண்டு நாளாகவே அவனைக் காணோம். முந்தாநாள் சாயந்திரம் யமுனைக்கரையில் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணனிடம் அவள் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும் போது அவன் தன்னுடைய புல்லாங்குழலையே பார்த்துக்கொண்டு அதை தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான் அல்லவா?. அப்போது தான் அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது. வாயாடினாள் . எதிர்த்து பேசி கோபித்தாள் . அதெல்லாம் இப்போது கோலம் போடும்போது ஞாபகத்துக்கு வந்தாலும் மனதுக்கு இனித்தது. கை கோலம்போட்டாலும் மனதில் அவனுடைய அழகு மாறாத புது கோலமாக நின்றது. அந்த நிகழ்ச்சி மனதில் திரும்ப படமாக ஓடியது. ராதை ஏதோ கேட்டாள் . அவன் கவனிக்க வில்லை. மறுபடியும் கேட்டால். ;ஹுஹும்.. கண்ணன் கவனம் அவன் கையில் உள்ள புல்லாங்குழல் மீது. ராதைக்கு தன்னை அவன் அலட்சியம் பண்ணுகிறான் என்று கோபம். "நீ என்னை விரும்பவே இல்லை. எப்போதும் உனக்கு அந்த புல்லாங்குழல் தான் சிநேகிதி. நீ அதோடேயே இருந்துகொள். என்னை இனிமேல் பார்க்க வரவேண்டாம்" ''ராதா.... என்று ஆரம்பித்து கண்ணன் ஏதோ சொல்வதற்குள் அவள் விடுவிடுவென்று எழுந்து நடந்து விட்டாள். நேற்று முழுதும் அவனை பார்க்கவே இல்லையே தவிர அவள் மனம் பூரா அவனையே நினைத்துக் கொண்டு இருந்தது. . அவள் நாள் பூரா சாப்பிடவே இல்லை. இன்று அவனை வரவேற்கத் தான் கோலம் பெரிதாக போட்டாள். அவனுக்கு நீலம் பிடித்த நிறம்!! எனவே அவள் சேலையும் இன்று நீல நிறத்தில் இருந்தது. அவன் அவள் வீட்டுக்கு வந்தால் எப்போதும் தடவி அணைத்துக் கொஞ்சும் அந்த பொன்னிற கன்னுக்குட்டி வீட்டு வாசலிலேயே வரவேற்பாக கட்டப்பட்டு இருந்தது. மிரள மிரள விழித்துக்கொண்டு காரணம் புரியாமல் அது காத்திருந்தது. சூரியன் மெதுவாக மேலே எழும்பி விட்டான். பகல் வந்துவிட்டது இன்னும் அவன் வரவில்லை. சாயந்திரமும் ஆகிவிட்டது இன்னும் கண்ணனைக் காணோம். ஏன் வரவில்லை? சரி , அவன் வராவிட்டால் எனக்கென்ன?? நானும் அவனை இனி பார்க்கமாட்டேன், பேச மாட்டேன்" வாய் தான் முணுமுணுத்தது. ஆனால் கண்கள் அவனை தேடின. அவள் தோழியர் இருவர் வந்திருந்தனர். எப்போதும் அவளுடன் தான் நிறைய தோழியர்கள் இருப்பார்களே!. "அந்த கிருஷ்ணன் இங்கு வந்தால் அவனை வீட்டுக்குள் விடவேண்டாம். நான் சொன்னேன் என்று சொல்லுங்கள்" தொடர்ந்து உணவே இன்றி வாடினாள் ராதா. கிருஷ்ணன் வந்தான். உள்ளே நுழைய முயன்ற அவனை தோழிகள் "கிருஷ்ணா!, நீ ராதையை பார்க்க வரவேண்டாம். உன்னை உள்ளே விடாதே'' என்று ராதை சொல்லிவிட்டாள்" “அதெப்படி? நான் அவளை கண்டிப்பாக பார்த்தே தீருவேன்" அவர்களை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்ற அவனை அவர்கள் உள்ளே விடவில்லை. என்னவெல்லாம் சொல்லியும் அவர்கள் மசிய வில்லை. கிருஷ்ணன் திரும்ப போய் விட்டான். கண்ணன் திரும்பி போன செய்தி கேட்ட ராதைக்கு அழுகை அழுகையாக வந்தது. கிஷ்ணனை அவள் தானே உள்ளே விடாதே என்றவள். “நான் ஏன் கிருஷ்ணனோடு சண்டை போட்டேன்? எதற்கு அவனை பிடிவாதமாக பார்க்க மாட்டேன்” என்று சொன்னேன். எவ்வளவு பெரிய தப்பு பண்ணிவிட்டேன். இதை தான் பெண்புத்தி பின் புத்தி என்கிறார்களோ?'' மனம் சல்லடைக்கண்ணாக துளைத்தது. விளக்கு வைக்கும் நேரம். வாசலில் ஒரு ஜோசியம் பார்க்கும் பெண் போய்க் கொண்டிருந்தாள். “அவளைக் கூப்பிடு” என்று ராதை சொல்லி தோழியர்களும் அவளை உள்ளே அனுப்பினார்கள். அழகிய அந்த ஜோசியக்காரி ராதையின் முகத்தைப் பார்த்ததுமே சொல்லி விட்டாள் "பெண்ணே உனக்கு மன நிலை சரியில்லை. உன் பிடிவாதம் தேவையற்றது. நீயே வரவழை த்துக்கொண்ட துன்பத்திற்கு நீயே தான் விடை தேட வேண்டும். காரணமற்ற கோபத்தைஎல்லாம் இனி விடு. எங்கே, உன் கையைக் காட்டு?”. ராதையின் கையை தானே அந்த ஜோசியக்காரி எடுத்து பிடித்து தடவிக் கொடுத்துவிட்டு ரேகைகளை படித்தாள். நீ விரும்பும் உன் ஜோடி உன்னை என்றும் விடாது. அந்த புண்ய புருஷன் உனக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம். அந்த மனிதன் முற்றிலும் மாறுபட்ட மனிதன். தெய்வம் என்று உன் கை சொல்கிறதே. மனதால் ஒன்று பட்ட உங்களை எந்த காலத்திலும் யாரும் பிரிக்கவே முடியாது. ராதைக்கு மயக்கம் வந்து விட்டது. அந்த ஜோசியக்காரியின் கண்ணும் அவள் தொடலும் சிரிப்பும் எங்கோ ஏற்கனவே பரிச்சயமானது போல் ராதைக்கு தோன்றவே அந்த ஜோசியக்காரியை உற்று பார்த்தாள். அவள் குரலில் வித்யாசம் இருந்தாலும் பேசும் விதம் பழகிய விதம் புரிந்து விட்டது. அப்படியே அந்த ஜோசியக்காரியை ஆலிங்கனம் செய்து கொண்டு தன் கண்ணீரால் அவள் முகத்தை நனைத்தாள். ஜோசியக்காரியும் மனமகிழ்ந்து அவளை அணைத்துக்கொண்டாள் (ன்). ஆம், அவள் இல்லை அவன் - கிருஷ்ணன் தான் ஜோசியக்காரியாக உள்ளே நுழைந்தவன். ராதையை ஒருகணம் கூட பிரியாத அந்த அதிசயப்பிறவி கிருஷ்ணனாக வந்தால் உள்ளே விடமாட்டார்கள் என ஒரு ஜோசியக்காளரியாக அவள் மனம் அறிந்து அங்கே வந்தவன். ஜோசியக்காரியை அணைத்த ராதையின் கைகள் அவள் இடுப்பில் செருகியிருந்த புல்லாங்குழலின் மீது பட்டதும் அவள் சந்தேகம் தீர்ந்தது. புல்லாங்குழலை வெளியே எடுத் தாள். "இந்த புல்லாங்குழல் மேல் கோபம் கொண்டு தானே உன்னை இரண்டுநாள் பார்க்கவில்லை, வாடி நொந்தேன். பாவம் அது ஒரு தவறும் செய்யவில்லையே, என்னுடைய மன்னிப்பு உனக்கல்ல இந்த புல்லாங்குழலுக்கே “ என்று அதை எடுத்து அணைத்து முத்தமிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். கிருஷ்ணன் ரசித்து கொண்டே இருந்தாலும் அவன் மனம் உள்ளூர சொல்லியது: "ராதா, நீ எனக்கு எப்படியோ அப்படியே அந்த மூங்கில் புல்லாங்குழலும். எனக்கு உன்னை பார்க்கும்போது உள்ள சந்தோஷம் நீ இல்லாத நேரத்தில் நான் உன்னை நினைக்கும்போது இது, உன்னையே என் ஜீவ நாத இசையாக வெளிப்படுத்தும் என் இணை பிரியாத ஆத்மாவின் உருவம்''. .

Thursday, June 28, 2018

RAMANA MAHARSHI


BHAGAVAN SRI RAMANA'S TALKS :  J.K. SIVAN 

IT IS NOT DIFFICULT TO UNDERSTAND BHAGAVAN RAMANA IF YOU READ THE QUESTIONS PUT TO HIM AND THE ANSWERS GIVEN BY HIM, SLOWLY, CONCENTRATING ON EACH WORD ATTENTIVELY WITH INVOLVEMENT AND INTEREST TO LEARN.- It is made simple for you so that you will enjoy His teaching profusely. JKS

                      CONSCIOUSNESS 


Devotee   : It is said that Sri Ramakrishna saw life in the image of Kali which  he worshipped. Can it be true?
Maharishi Ramana.: The life was perceptible to Sri Ramakrishna and not to all. The vital force was due to himself. It was his own vital force which manifested as if it were outside and drew him in. Were the image full of life it must have been found so by all. But everything is full of life. That is the fact. Many devotees have had experiences similar to those of Sri Ramakrishna.

D.: How can there be life in stone? It is unconscious.
M.: The whole universe is full of life.You say the stone is unconscious.   It is your self-consciousness which now speaks of unconsciousness.  When a person wants to see if there is an article in a dark room he takes a lamp to look for it. The light is useful for detecting the presence and the absence of the thing. Consciousness is necessary for discovering if a thing is conscious or not. If a man remains in a dark room one need not take a lamp to find him. If called, he answers. He does not require a lamp to announce his presence.  Consciousness is thus self-shining.

Now you say you were unconscious in sleep and self-conscious in the wakeful state. Which is the Reality? The Reality must be continuous and eternal. Neither the unconsciousness nor the self-consciousness of the present is the Reality. But you admit your existence all through. The pure Being is the reality. The others are mere associations. The pure Being cannot be otherwise than consciousness. Otherwise you cannot say that you exist. Therefore consciousness is the reality. When that consciousness is associated with upadhis you speak of self-consciousness,
unconsciousness, sub-consciousness, super-consciousness, human-
consciousness, dog-consciousness, tree-consciousness and so on. The
unaltering common factor in all of them is consciousness.

Therefore the stone is as much unconscious as you are in sleep. Is
that totally devoid of consciousness?

AINDHAAM VEDHAM


ஐந்தாம் வேதம் J.K. SIVAN
43 காட்டுத் தீ

ஜனமேஜயன் திறந்த வாய் மூடாமல் வைசம்பாயனர் தனது முன்னோர்கள் பாண்டவர்களை பற்றி கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தான். இரவு வெகுநேரம் அவர்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். மீண்டும் எப்போது பொழுது புலரும், எப்போது வைசம்பாயனர் மறுபடியும் தொடர்வார் என்ற ஆர்வத்திலேயே அவன் பொழுது போனது. நாமும் அவனோடு சேர்ந்து கேட்போம்.

அபிமன்யு பிறந்ததை பாண்டவர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். யுதிஷ்டிரன் ஆயிரக்கணக்கான பசுக்களையும் திரவியங்களையும் பொன்னையும் பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தான். துவாரகையில் கிருஷ்ணன், பலராமன் குடும்பத்தில் எல்லோருக்குமே அபிமன்யு செல்லப் பிள்ளையாயிற்றே. சுபத்ரையின் செல்வன் அல்லவா?

அழகில், வீர்யத்தில், கம்பீரத்தில், மாமன் கிருஷ்ணனைப் போலவே இருந்தான். வெகு சீக்கிரத்தில் தந்தை அர்ஜுனனிடம் வில்வித்தை பயிற்சி மிக நன்றாகப் பயின்றான்.

இப்படி சந்தோஷமாக காலம் செல்ல ஒரு நாள் கிருஷ்ணனும் அர்ஜுனனும் தனியே ஒரு கானகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பிராமணன் அவர்களை நெருங்கி வணங்கி நின்றான்.

''யாரப்பா நீ என்ன வேண்டும் உனக்கு?'' என்றான் அர்ஜுனன்

''மஹாராஜாக்களே, நீங்கள் தான் என் பசியைப் போக்கவேண்டும்'' என்று வேண்டினான் அந்த பிராமணன் .

''நீ யார் என்றே சொல்லவில்லையே, உனக்கு என்ன உணவு வேண்டுமோ கேள் அதை அளிக்கிறோம் '' என்று அர்ஜுனன் சொல்ல,

''நான் அக்னி'' எனக்கு அதோ தெரியும் காண்டவ வனம் வேண்டும். அதை நான் எரிக்கமுடியாமல் இந்திரன் தடுத்துக் கொண்டிருக் கிறான். ஏனேனில்அந்த கானகத்தில் அவன் நண்பன் தக்ஷகன் என்கிற ஒரு நாக ராஜன் வாழ்கிறான். எப்படியாவது எனக்கு வேண்டிய உணவை அளிக்கிறேன் என்று சொல்லிய நீங்கள் அந்த காண்டவ வனத்தை நான் அழித்து கபளீகரம் பண்ண உதவ வேண்டும்''

''வைசம்பாயன ரிஷியே, என்ன காரணத்தால் அக்னி காண்டவ வனத்தை தீக்கிரையாக்க விரும்பினான்?'' என்று ஜனமேஜயன் குறுக்கே ஒரு கேள்வி கேட்கிறான்? எனவே ஒரு புது கதை ஆரம்பிக்கிறது:

ச்வேதகி என்று ஒரு ராஜா. அந்த கால மற்ற ராஜாக்களைப் போல அவனும் ஒரு பெரிய யாகம் பண்ணி அதிக சக்தி பெற முயன்று நிறைய பிராமணர்களை அணுகினான். அவர்கள் அவனை மதிக்கவில்லை. அவன் அவர்களிடம் நிறை தான தர்மங்கள் தருவதாக வாக்களித்தும் அவர்கள் அந்த யாகத்தை நிறைவேற்றி தர முன் வரவில்லை. பக்தியிலோ, தகுதியிலோ குறைந்தவனா நான், என்ன காரணத்தால் நீங்கள் எனக்கு உதவ தயங்குகிறீர்கள்? என்று கேட்ட ச்வேதகி நீங்கள் உதவாவிட்டால் நான் மற்ற தேசங்களுக்கு சென்று அங்குள்ள பிராமணர்களையாவது கெஞ்சி இந்த யாகத்தை நிறைவேற்றுவேன்.''

''அரசே, எங்களால் இதை நிறைவேற்ற இயலவில்லை, அரசே நீங்கள் ருத்ரனிடம் செல்லுங்கள் அவர் உதவுவார்'' என்றனர் அந்தணர்கள்.

ச்வேதகி கைலாசம் சென்றான். கடுந்தவம் இருந்தான். பரமேஸ்வரன் அவன் முன் தோன்றி, ''பக்தா உன் தவத்தை மெச்சுகிறேன்.உனக்கு என்ன வேண்டும் சொல்'' என கேட்க,

''பரமேஸ்வரா, தாங்கள் என் யாகம் சிறப்பாக நடைபெற உதவ வேண்டும்''

ச்வேதகி, நான் யாகத்தில் உதவி செய்பவன் அல்ல. உன் தவத்தை மெச்சி அதற்காக உனக்கு உதவ முன் வருகிறேன். அனால் ஒரு நிபந்தனை. பன்னிரண்டு வருஷங்கள் அந்த யாகத்தில் ஒரு வினாடியும் வீணாகாமல் நீ பூரண பிரம்மச்சரியம் அனுஷ்டித்து உன் யாகத்தீயில் நெய் வார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் செய்தால் நீ கேட்கும் உதவி உனக்குண்டு''.

ச்வேதகி அவ்வாறே செய்து பரமசிவன் திருப்தி அடைந்தான். ''ச்வேதகி நான் உனக்கு வந்து உதவ இயலாது என்று சொன்னேன். இருப்பினும் எனக்கு ஈடான ஒரு பிராமண ரிஷி இருக்கிறார் அவரை நீ சென்று உதவி கேட்டால் அவர் உனக்கு உதவுவார்.

''அந்த ரிஷி யார் சுவாமி?
''அவர் பெயர் துர்வாசர் ''.

யாகத்திற்கு சகல ஏற்பாடுகளும் செய்து ச்வேதகி ருத்ரனிடம் மீண்டும் சென்றான். சிவன் துர்வாசரை கூப்பிட்டு ச்வேதகியின் யாகத்தை நடத்திக் கொடுக்க கட்டளையிட்டு யாகம் இனிது வெற்றிகரமாக முடிந்து எண்ணற்ற பிராமணர்கள் திருப்தியாக தானங்கள் பெற்று சென்றனர்.

இதற்கிடையே, அக்னி பன்னிரண்டு வருஷங்கள் ச்வேதகியின் இடைவிடா யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யைப் பருகி மகிழ்ந்தான். எனவே திருப்தியோடு புத்தொளி பெற்று திகழ்ந்தான். நிறைய ஹோமாக்னி நெய்யை உண்ட அவனுக்கு யாகம் முடிந்ததும் மீண்டும் பழைய நிலையை அடைய முடியவில்லை. மேலும் அக்னி அதிக பசி கொண்டவன் ஆனான். வேறு வழியின்றி பிரம்மாவிடம் சென்று தனது பசியை தீர்க்க வேண்டியபோது. நீ காண்டவ வனம் சென்று அதை அழித்து உன் பசியை தீர்த்துக்கொள் என்றார் பிரம்மா.

அக்னி காண்டவ வனம் சென்றான். அது எரியத் தொடங்கியது. அக்னியின் நண்பன் வாயு அவனுக்கு உதவ அக்னி பெரிதாகி வனத்தை கபளீகரம் பண்ணத் துவங்கினான். காட்டில் வாழ்ந்த ஜீவராசிகள் அனைத்துமாக சேர்ந்து அக்னியின் முயற்சியை தடை செய்ய அக்னி வாடினான். தக்ஷகன் என்ற நாகராஜன் இந்திரனுக்கு வேண்டியவன். ஆதலால் வருணன் அவனுக்கு உதவ அக்னியின் எண்ணம் நிறைவேற தடங்கல் இருந்தது.

பசி தீராத அக்னி மீண்டும் பிரம்மாவை நாட, '' இந்திரனால் உன் முயற்சியில் தோல்வி காண்கிறாய். உனக்கு ஒரே வழி, இப்போது அந்த காண்டவ வனத்தில் நர நாராயணர்கள் அர்ஜுனனும் கிருஷ்ணனும் இருக்கிறார்கள். அவர்கள் உதவியால் தான் உன் காண்டவ வன பசி தீர வாய்ப்பு. உடனே செல்'' என்றார் பிரம்மா.அக்னி ஓடினான் கிருஷ்ணனிடம்.

AINDHAM VEDHAM IN TWO PARTS FOR CHILDREN IN TAMIL AVAILABLE AS DONOR COPIES.

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர்   --    ஜே.கே சிவன் 

                                                        கீதாஞ்சலி 


                                      
                                   
   

That I want thee, only thee---let my heart repeat without end. All desires that distract me, day and night, are false and empty to the core.

As the night keeps hidden in its gloom the petition for light, even thus in the depth of my unconsciousness rings the cry---`I want thee, only thee'.
As the storm still seeks its end in peace when it strikes against peace with all its might, even thus my rebellion strikes against thy love and still its cry is---`I want thee, only thee'.
இன்றோ நேற்றோ அல்ல, பல காலமாகவே, ''நீ வேண்டும் நீ வேண்டும்''   என்று என் இதயத்தில் ஒரு  அயராத துடிப்பு.    மூச்சு துடிப்பு எத்தனையோ அத்தனை இந்த துடிப்பும்  ஆகும். இன்றுவரை அதற்கு முடிவே இல்லை. வேறே ஏதாவது எண்ணங்கள் என்னை ஆக்கிரமிக்கிறதா, ஆக்கிரமித்ததா என்று பார்த்தால்  நிச்சயம் இல்லை என்று தான் சொல்வேன். வேறே  துடிப்பு இருந்தது என்று நான் சொன்னால் அது அக்மார்க் பொய்.

வெளிச்சம் வேண்டும், ஒளி தேவை என்று இரவு தனது   வேட்கையை இருளில்  எங்கே வைத்திருக்கும். மறைத்து தான் வைத்திருக்கும்.  பொழுது விடிய, சூரியன் வர,  அதுவரை தேடியது, தேவையானது  கிடைக்க காத்திருக்கவேண்டும்  அல்லவா?    அதே போல் தான் என்னுடைய  இதயத்திலும், என்னென்னவோ குழப்பங்களில் அடிப்படியாக  அந்த ஒரு தேடல், வேட்கை இருந்து கொண்டே இருக்கிறது.  அது வேறொன்றுமில்லை ''நீ வேண்டும்  எனக்கு நீ வேண்டும், நீ மட்டுமே  வேண்டும் ''

ஒரு அருமையான உதாரணம் சொல்லட்டுமா?  புயல் சீற்றத்தோடு  மரங்களை எல்லாம் சாய்த்தவாறு ஒரு அமைதியான கிராமத்தை உருக்குலைக்கிறது.கடைசியில் என்ன ஆயிற்று?  தனது பலம் குறைந்த காற்று இருந்த இடம் தெரியாமல் அந்த கிராமத்தில் மறைந்தது.  எஞ்சியது என்ன  ஏற்கனவே இருந்த அமைதி தானே. நடுவில் தானே  புயல் அதன் சீற்றம். அமைதியான ஊர் அதை ஏற்றுக்கொண்டு  பின்னர் தானே மட்டும் தான் இருக்கிறது. வந்தது போய்விட்டதே.  என் மனததில் பெரும் போராட்டம். நினைவுக்கு அப்பால், நினைவு தப்பி,  என் மனது   எந்த வேகமான, சக்தியான உணர்வு, உணர்ச்சிகளால்   பாதிக்கப்பட்டாலும், அடிநாதமாக எப்போதும் ஆரம்பம் முதல் இப்போது வரை இருப்பது ஒரு மெல்லிய ஏக்க ஸ்வரம் தான்  ''கிருஷ்ணா, எனக்கு நீ வேண்டும்''
When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.                                                                                                                                                  When grace is lost from life, come with a burst of song.                                                                                                                                                                                            When tumultuous work raises its din on all sides shutting me out from beyond, come to me, my lord of silence, with thy peace and rest.                                                     When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king, and come with the ceremony of a king.                                                           When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful, come with thy light and thy thunder.
என்ன செய்வேன். என் இதயம் பாறையாக உறைந்து விட்டது.  கடினமாக  ஆகி உஷ்ணம் அதிகரித்து  பாளம் பாளமாகி விட்டதே. வா கிருஷ்ணா  வா இந்த கடின பாறை இனியும் வெயிலில் சூட்டில்  வெடிக்க வேண்டாம். உன் கருணை மழையைப்  பொழி. என் மனம், இதயம்,  குளிரட்டும் உன் அன்பால்.  தேடிப்பார்த்தேன். என்  வாழ்வில்  உன் கருணை, பேரன்பு காணோம் அப்பா,  வா  உன் திவ்ய சங்கீதம் என் மனதை உருக்கி  இளகச்செய்து  அதில்  உன்  பேரன்பையும் அருளையும்  பெறட்டும்.
எண்ணற்ற  அலைபோல்  என் ஆரவாரமான  செயல்பாடுகள்  என்னைப்  பிடித்து தூர தள்ளுகின்றன. நீ  இருப்பதற்கு எதிர்ப்பாதையில் நான் செலுத்தப்படுகிறேன்.  அவற்றை பிளந்து நீ என்னருகில் வா கிருஷ்ணா, வா வா  வந்து என் மனதில் அமைதியை நிரப்பு.  அலைபாயும்  இதயத்திற்கு அமைதியைக்கொடு . ஒய்வு தா. 
நீ என் ராஜா,  ஒரு மஹா ராஜா, இதோ பார்  என்னை.   மூடிய  அறையில் மூலையில் சுருண்டு  என் இதயம் நோஞ்சானாக கூனி குருகி  தவிக்கிறதே.  மூடிய கதவை படார் என்று உதைத்து திறந்து உள்ளே வா என் மஹாராஜா, என் இதயத்தைத்  தட்டிக் கொடுத்து உனது இருப்பிடமாக ஆக்கிக்கொள் .
எப்போதும்  என் மனம் ஒரு இனம் புரியாத மாயை  மயக்கத்தில் வாடி, ஆசை புழுதியில் கண் இருண்டு , குருடாகி, புரள்கிறதே,  பரிசுத்த, பரிபூர்ண  தெய்வமே,  வா,  எழுந்திரு, விழித்துக் கொள்.    உன் பேரன்பு மின்னல் ஒளி கண்ணை ஒளிபெறச்செய்ய,   தைரியம் ஊட்டும் இடியுடன்  என்னைக் காத்திட வா  கேசவா. 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...