#யக்ஷ_ப்ரஸ்னம் - நங்கநல்லூர் J K SIVAN
யக்ஷனின் கேள்வியும் தர்மபுத்ரன் பதிலும் எக்காலத்துக்கும் பொருந்தும். இதை எழுதிய வேத வியாஸர் அவருடைய கற்பனையிலிருந்து இதை எழுதவில்லை. கண்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். பாண்டவர்களை நேரில் சந்தித்தவர். அவர்களின் உறவினர் என்பது மஹா பாரதத்தில் நாம் அறிகிறோமே . தொடர்வோம்:
91.'' தர்மா, இதற்கு பதில் சொல். எந்த பலம் கொண்ட எதிரியை கூட ஒருவன் மனது வைத்தால் வெல்ல முடியும்?''''நிச்சயம் கோபம் தான் மிகவும் பலம் வாய்ந்த எதிரி. கோபத்தை வெல்பவன் தான் பலசாலி.'
92. எந்த வியாதிக்கு நிவர்த்தியே இல்லை ?
பேராசை என்கிற நோய்க்கு வெளியே எங்கும் மருந்து கிடைக்காதே.
93. எவன் புனிதன் ?
எவன் அனைத்துயிர்களிடம் அன்புடன் பழகி நன்மையே புரிகிறானோ அவனே உத்தமன்.
94. எவனை நாம் தூயவன் இல்லை என்போம்?
மனதில் அன்பு என்பதே தெரியாது, அறியாது வாழ்பவனை.
95. எது அறிவு பூர்வமற்ற செயலாகும் ?.
அதர்மமான, அநீதியான . சிந்திக்காமல் மனம் போனபடி செய்கிற செயல்.
96. பெருமை என்றால் என்ன?
ஒவ்வொருவனின் உள்ளேயும் தானே வளரும் சுய கர்வமும் எதிர்பார்ப்பும் தான் .
97. எதை சோம்பேறித்தனம் என்று சொல்லலாம்? ஸ்வதர்மத்தையும் தனது அன்றாட கடமைகளையும் செய்யாததை.
98. எது உண்மையிலேயே துயரம்?
அறியாமை
99. எதை ரிஷிகளும், ஞானிகளும் சாஸ்வதம் என்பார்கள்?
விடாப்பிடியாக தனது கர்மானுஷ்டனங்களை செய்வதை, அவரவருக்கான ஸ்வதர்மத்தின் படி ஒழுகுவது தான் நிரந்தரமானது. ஸாஸ்வதமானது
100.. எது தைர்யம் எனப்படும்?
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது.
(சபாஷ் யுதிஷ்டிரா, யக்ஷன் கேள்வி கேட்பது எளிது. நீ சரியான பதில் சொல்லி செஞ்சரி போட்டுவிட்டாயே, )
101. எது உண்மையிலேயே நல்ல ஸ்நானம் ஆகும்?
மனசிலிருக்கும் அழுக்காறுகளை நீக்குவது.
102. எதை ஒருவன் சிறந்த தர்மம் எனலாம்? மற்றவரைக் காத்து ரக்ஷிப்பது
103. எவன் உண்மையிலேயே கற்றுணர்ந்தவன்?
தர்மத்தை அறிந்தவன், புரிந்தவன்.
104 எது நாத்திகம்?
தன்னையே அறியாது, நம்பாது, இயற்கையின் ரகசியத்தை புரிந்துகொள்ளாது, தன்னால் எல்லாம் தெரியும், முடியும் என கனவு காண்பது.
அடுத்த பதிவோடு நிறைவு பெரும்.
No comments:
Post a Comment