Thursday, July 21, 2022

OMEN


 

சகுனம் பார்ப்பது உண்டா?   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம் எல்லாம்  மாடர்ன்  மனிதர்கள்.  அதாவது நவ நாகரீகர்கள். மூட நம்பிக்கை பிடிக்காதவர்கள்.. ரொம்ப சரி.  நமக்கு தெரியாதது இல்லாதது ஆகிவிடுமா?  நாம்  லக்ஷியம் பண்ணுவதில்லை என்பதால்  பலனளிக்காமல் போய் விடுமா?  சில விஷயங்களை யோசிக்கும்போது இன்று கவனத்தை ஈர்த்தது  ''சகுனம்'' என்கிற வார்த்தை.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சில விஷயங்கள்  தவிர்க்க முடியாதவை.  அவற்றில் சகுனங்கள் ம் நிமித்தங்கள்  முக்கியமானவை.  இதெல்லாம் உண்மையில் உள்ளதா? எதனால்  நடைபெறுகிறது?  உண்மையா?.   சகுனம்  நிமித்தம்  ஆகியவை முழுக்க முழுக்க  ஜோசியத்தோடு  நெருங்கியவை.
பகுத்தறிவு வாதிகள் கூட  ராகுகாலம் எமகண்டம் சகுனம்  பார்ப்பவர்கள் தான். வெளியே காட்டிக் கொள்ளாததால் அவற்றை  அலட்சியம் பண்ணுபவர்கள் அல்ல.  நம்பிக்கை கொண்டவர்கள். 

 நிமித்தம்  என்பது  நாம் எதிர்பாராமலேயே  சுற்றுப்புறத்தில்  நிகழ்வது. நம்மை  எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் முதலியவை. 

நாம் ஒரு விஷயம் யாருடனோ பேசிக் கொண்டி ருக்கும்போதோ, ஒரு காரியம்  செய்து கொண்டி ருக்கும்போதோ, பக்ஷிகள், விலங்குகள், பல்லி போன்ற ஜந்துக்கள்  உண்டாக்கும் சப்தம், ஒலி,  நம் காது கேட்க யாரோ பேசும் வார்த்தை, இதெல்லாம் சில  உணர்வு களை நம்முள் ஏற்படுத்துபவை.  இது தானாக  ஏற்படுவது. நம்மால் மாற்ற முடியாது.  

சகுனம் என்பதும் இவற்றைப் போலவே இருந்தாலும், சில சமயம் நம்மால்   மாற்ற முடிபவை,  பழங்கா
லத்தில் இதெல்லாம்  அவசியம்  பின் பற்றி வாழ்ந்தார்கள்.  நாம் எங்கோ ஒரு நல்ல காரியத்துக்காக வெளியே  கிளம்புகிறோம்  என்றால்  நம் வீட்டைச் சேர்ந்த சில பெண்களை எதிரே வரச்செய்துவிட்டு கிளம்புவோம். இது நல்ல சகுனம். நாம் செல்லும் காரியும் வெற்றியாகும் என்பது நமது , மனரீதியாக  நேர்மறை எண்ணத்தை உருவாக்கும்.  நாம் நம்பிக்கையோடு  பாசிட்டிவாக  POSITIVE ATTITUDE ஓடு செய்யும்போது வெற்றியே  பெறுவோம்.  

அதே மாதிரி வெளியே கிளம்பிச் செல்கையில் எதிரில் அபசகுனமாக எதையாவது பார்த்தால், அன்று முழுவதும் செயல்படும் செயல்களில்  நமக்கு நாமே ஒரு  நம்பிக்கை  இருக்காது . அதனால் செய்பவை, சொல்பவையில் தப்பு தவறு  உண்டாகும்.  கல்யாண முகூர்த்தத்தில்  யாராவது அபசகுன வார்த்தைகள் ஐயோ, போன்ற  அமங்கல வார்த்தைகள்  பேசினாலோ, தும்மினாலோ அந்த சப்தம்   தாலி கட்டும்போது  காதில் விழவேண்டாம் என்பதற்காக கெட்டி மேளம்  வாசிப்பார் கள். இன்றும் அது தொடர்கிறது.

சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனம்  தீய  வெளிப்பாடு களை அபசகுனங்களை  விரட்டக் கூடிய அதிர்வலை களை  உடையதால்  சகுனத்தை நல்லதாக மாற்றிவிடும்.  

சங்கின் ஓலி சுப சகுனம். போர்க் காலங்களில்  வெற்றி பெற  அதை ஒலித்தார்கள் . வீட்டில் மரம் செடி பூத்தால்  சுப சகுனம். அதில்  காய்த்த காய் வாடினால் அசுப சகுனமாகும். வீட்டில் முருங்கை மரம் வளர்க்கக் கூடாது .   அதை பிசாசு  மரம் என்பார்கள்.  அது முறிந்து விழுந்தால், சுற்றுப்புறத்தில் ஓர்  சாவு  நடக்கும் என   நம்பிக்கை.யாருடனாவது  பேசிக்கொண்டிருக்கும் போது கெளளி எனப்படும் பல்லி  டிக் டிக்  என சப்தம் செய்தால்  நல்ல சகுனம்.  பஞ்சாங்கத்தில் பல்லி சொல்லுக்கு பலன் என்று  விஷயம் இருக்கி றது.

சுபசகுனத்தில் சில:   வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பது.  அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள்  இதெல்லாம் சுப சகுனம். 

அசுப சகுனங்கள்:
அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் கொட்டுவது.  உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது  விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது,  எருமை மாடு ஆகியவை அசுப சகுனமாகும்.

இது போல்  நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...