Monday, July 11, 2022

SORRY OF THE GOPIKAS

 உனைக் காணாத கண் வேண்டாம் கண்ணா -                           


 நங்கநல்லூர்  J K  SIVAN


கோபிகளின் துயரம்  -  4 - 7 ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பாகவதம்  பத்தாவது காண்டம்  தசமஸ்காந்தம்  31வது அத்யாய ஸ்லோகங்களில் அடுத்து 4 ஸ்லோகங்கள் மூலம்   பிருந்தாவன கோபியரின் வருத்தம் தோய்ந்த மனோ நிலையை அறிகிறோம். கிருஷ்ணனைப் பிரிய மனம் வருமா?

न खलु गोपीकानन्दनो भवान् अखिलदेहिनामन्तरात्मद‍ृक् ।
विखनसार्थितो विश्वगुप्तये सख उदेयिवान् सात्वतां कुले ॥ ४ ॥

na khalu gopīkā-nandano bhavān akhila-dehinām antarātma-dṛk
vikhanasārthito viśva-guptaye sakha udeyivān sātvatāṁ kule
 
கிருஷ்ணா  உன்னை நீ யார் பிள்ளையடா என்று கேட்டால் பெருமையாக ''நான் யசோதை, நந்தகோபன் பிள்ளை'' என்பாயே,  நீ உண்மையில் அவர்கள் பிள்ளை மட்டுமா? ஒவ்வொரு ஜீவனின்  இதயத்திலும் குடிக்கண்ட  அந்தராத்மா அல்லவா நீ? சர்வ வியாபி யான நீ ஸாக்ஷி  பூதமாக அமைதியாக நடப்பதை எல்லாம் கவனிப்பவன்.

 ஸாத்வதன்  Sātvata (सात्वत) ஒரு யதுகுல  ராஜாவான  தேவக ஸாத்ரவனின் மகன். ஸாத்வதனுக்கு  7 பிள்ளைகள்.  அவர்கள் பெயர்:  பஜன், பாஜிதிவ்யன், வ்ருஷ்ணி, தேவபுருஷன்.  தேவபிருஸ்தன், அந்தகன்,  மஹா போஜன்  என்பவை.  அந்த வம்சம் ஸாத்வதர்கள்.   கிருஷ்ணனுக்கு  ஸாத்வதன் என்று ஒரு பெயர். 
கிருஷ்ணா, எங்கள் தோழா,  நீ பிரம்மன் உன்னை வழிபட்டு வேண்டியதால் இந்த பூமியில் எங்களைப் பாதுகாப்பதற்கு பிறந்தவன்

विरचिताभयं वृष्णिधूर्य ते चरणमीयुषां संसृतेर्भयात् ।
करसरोरुहं कान्त कामदं शिरसि धेहि न: श्रीकरग्रहम् ॥ ५ ॥

viracitābhayaṁ vṛṣṇi-dhūrya te caraṇam īyuṣāṁ saṁsṛter bhayāt
kara-saroruhaṁ kānta kāma-daṁ  śirasi dhehi naḥ śrī-kara-graham
 
திருமகள், மஹாலக்ஷ்மி  சமேத நாராயணா, வ்ருஷ்ணி குலத்தை  தேர்ந்தெடுத்து அதில் தோன்றிய  கிருஷ்ணா,  பூவுலக வாழ்வில் பயங்கள் சூழ வாழ்ந்தோரை  பயமற்று வாழ அபயம்  அளித்தவனே,  உன் திருவடி வணங்கிய எங்களுக்கு  ஆனந்தம் தந்தவனே, உன் தாமரைக்கையால் எங்கள் சிரம் தொட்டு  எங்களை ஆதரிப்பாய். எங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யப்பா. இங்கேயே  எங்களோடு இருந்துவிடப்பா 

 व्रजजनार्तिहन् वीर योषितां निजजनस्मयध्वंसनस्मित ।
भज सखे भवत्किङ्करी: स्म नो जलरुहाननं चारु दर्शय ॥ ६ ॥

vraja-janārti-han vīra yoṣitāṁ nija-jana-smaya-dhvaṁsana-smita
bhaja sakhe bhavat-kiṅkarīḥ sma no jalaruhānanaṁ cāru darśaya

வ்ரஜ பூமியில் சகலரின் துயரைத் தீர்த்தவனே, கிருஷ்ணா, கோபியர் கொஞ்சும் ரமணா, கோபால கிருஷ்ணா, புன்னகை மன்னா, தீயோர் தீயசக்திக்கெல்லாம்  அக்னியாக சுட்டெரிப்பவனே, எங்களை ஏற்றுக்கொள்.  நாங்கள் என்றும் உனது சேவகிகள், உன் அழகிய தாமரை முகத்தை தரிசிக்கவேண்டும் என்று துடிப்பவர்கள். எங்களிடம் வா. உன் முகமலர் காட்டி எங்கள் அகம் குளிரச்செய்வாய்.

प्रणतदेहिनां पापकर्षणं तृणचरानुगं श्रीनिकेतनम् ।
फणिफणार्पितं ते पदाम्बुजं कृणु कुचेषु न: कृन्धि हृच्छयम् ॥ ७ ॥

praṇata-dehināṁ pāpa-karṣaṇaṁ tṛṇa-carānugaṁ śrī-niketanam
phaṇi-phaṇārpitaṁ te padāmbujaṁ kṛṇu kuceṣu naḥ kṛndhi hṛc-chayam

உன் தாமரைத் திருவடிகள் சாதாரணமானவையா?  எண்ணற்ற  கோடி ஜீவர்களின்  பாபங்களைப்  போக்குவதாயிற்றே.  கோவிந்தா, உன் திருப்பாதங்கள்  புல்லை மேய செல்லும் பசுக்களைப் பின் தொடர்வன  அல்லவா?  எண்ணற்ற  தேவாதி தேவர்கள், தேவதைகள், தெய்வங்கள் தொழும் புனித பாத கமலங்கள் அல்லவா?,  பாதக மலங்களைத்  தீர்ப்பவை அல்லவா?.  காளியனின் சிரத்தில்  சலங் சலங் என்று சலங்கை ஒலிக்க  ஆகியவை அல்லவா?எங்கள் நெஞ்சில் உன் பாதங்கள் படட்டும். எங்கள் ஹ்ருதயத்தில் மனத்தில் ஆசைகள் எல்லாம் விலகட்டும். .

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...