நமது மதம் மிகவும் வினோதமானது. எண்ணற்ற பண்டிகைகள், விரதங்கள், உபவாசங்கள், விருந்துகள், எல்லாமே தன்னுள் கொண்டது.
இங்கு ருசிக்கும் பஞ்சமில்லை, ருசியை வெறுக்கும் மன உறுதியும் உண்டு
.இரவும் பகலும் இடைவிடாமல் ஓய்வின்றி பல வருஷங் கள் உழைக்கும் இந்த தேகத்துக்கு அவ்வப்போது சற்று ஓய்வும் தேவை. ஒய்வு என்று அதை வெட்டியாக வீணாகி எ செலவழிக்காமல் இறைவன் மேல் சிந்தனையோடு செலவிடுவது தான் உபவாசம் விரதம் எல்லாம். எதையாவது நிறைவேற்ற, எதையாவது ரூ பலனை அடைவதற்கு வேண்டி அதற்காக அனுஷ்டிப்பது விரதம். உபவாசம் வெறும் இறை சிந்தனைக்காக
மேற்கொள்வது.
உபவாசம் என்றால் இறைவனோடு ஒன்றி இருக்க முயல்வது, அதாவது பாபங்களிலிருந்து விலகுவது, தீய செயல்களை, தீமைகளை எண்ணாமலிருப்பது, ஆகாரங்களை ஒதுக்குவது. அமைதியாக இறைவனை தியானிப்பது, கூட்டாக பஜிப்பது, பஜனை செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது. வாசனாதி திரவியங்களை உபயோகிக்காமல், அலங்கரித்துக் கொள்ளாமல், சுத்தமான வஸ்திரம் மட்டும் அணிந்து, பகலில் படுத்து உறங்காமல், அதிகமாக நீராகாரம், நீர் எதுவும் அருந்தாமல் இருப்பது உபவாசம்.
முக்கியமாக என்றெல்லாம் உபவாசம் இருக்கிறோம்?
இந்து மதப் புராணத்தில் பல வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
,
ரம்ஜான் சமயத்தில் இஸ்லாமியர்கள் எச்சிலைக்கூட விழுங்க மாட்டார்கள். நம்மவர்கள் நிர்ஜல உபவாசம் அதாவது உபவாச தினத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது. அனுஷ்டிப்பார்கள்.யோகிகள் முனிவர்கள், ரிஷிகள் பல நாட்கள் சேர்ந்தாற்போல் உபவாசம் இருந்தவர்கள். இதை உண்ணாவிரதம் எனலாம்.
காந்தியடிகள் பல நாள் உண்ணாவிரதம் இருந்தவர். சிலர் தேன், இளநீர், பசுவின் பால், ஏதாவது ஒன்று மட்டும் சேர்த்துக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பார்கள்.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருக்கும் வழக்கமும் உண்டு.
காலை நேரம் மட்டும், பகல் நேர உணவை மட்டும், இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருப்பவர்களும் உண்டு. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கிறவர்களும் உண்டு. .
தேய்பிறை கிருஷ்ணபக்ஷம் அன்று ஆரம்பித்து வளர்பிறை சுக்ல பக்ஷம் முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருக்கும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. .
ஒரு நாள் முழுவதும் வில்வ தளத்தையும் நீரையும், அல்லது துளசி ஜலம் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
இப்படி அவரவர் சம்ப்ரதாயம் பின்பற்றி வழக்கத்தை கடைபிடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்பதை அவரவர் உடல் நிலை, சூழ்நிலைக்கும் தகுந்தபடி ஏற்றுக்கொண்டு பின்பற்றலாம். வெறும் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.
விரதமிருப்பவர்கள் பல தெய்வங்களை வழிபடுபவர்கள். எந்தெந்த தெய்வத்துக்கு விரதமிருக்கிறார்கள் என்று வகைப்படுத்தலாம்.
பிள்ளையாரை வழிபடுபவர்கள், அவரை தியானித்து அனுஷ்டிக்கும் விரத தினங்கள்:விநாயக சதுர்த்தி
ஆவணி சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம்
பரம சிவனை வேண்டி பகதர் உபவாசம், விரதம் இருப்பது ஆனி உத்தரம், ஆருத்ரா, திருவாதிரை, சிவராத்திரி, ப்ரதோஷ விரதம், கேதாரகௌரி விரதம்
அம்பாள் உபாசகர்கள் அனுஷ்டிப்பது: நவராத்திரி, வரலட்சுமி நோன்பு, ஆடிப்பூரம்,ஆடிச் செவ்வாய்
பங்குனித் திங்கள், மாசி மகம்
முருக பக்தர்கள் பின்பற்றும் உபவாச விரத தினங்கள்: கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை வைகாசி விசாகம்
தைப்பூசம், திருக்கார்த்திகை விரதம்
வைஷ்ணவர்கள், விஷ்ணு பக்தர்கள் அனுஷ்டிக்கும் விரத உபவாசங்கள் : ஏகாதசி விரதம்,உபவாச, விரத தினங்களில் வெந்நீரில் குளிக்கமாட்டார்கள். ஸ்ராத்த தினங்களிலும் அப்படித்தான். துவாதசி அன்று பாரணை. தான தர்மங்கள் செய்து காக்கைக்கு போஜனமளித்து கோவிலுக்கு சென்று பகவானை தரிசித்துவிட்டு உணவு சாப்பிடுபவர்களும்அநேகர் இன்றும் இருக்கிறார்கள். ஒரு வேளை உணவை மட்டும் சாப்பிடாமல் விடுவது: ஏக புக்த உபவாசம்.நீர் மட்டும் பருகி உபவாசம் இருப்பது திரவ ஆஹார உபவாசம்.பழங்கள் மட்டும் சிலவற்றை சாப்பிடும் உபவாசம் பல ஆஹார உபவாசம். பல என்றால் பலவிதமான, எல்லாவற்றையும் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை, பலம் என்றால் பழம். விஹித ஆஹார உபவாசம், கொஞ்சூண்டு கொஞ்சூண்டு சாப்பிடுவது. மித ஆஹார உபவாசம் மிதமாக லிமிடெட் சாப்பாடு நிர் ஆஹார உபவாசம், எதையுமே சாப்பிடாமல் இருக்கும் உபவாசம்.நிர்ஜல உபவாசம் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது.
உபவாசம் இருப்பவர்கள் உடல் சிக்கென்று இருக்கும். எந்த வியாதியும் அணுகாது. மஹாபெரியவாளே ப்ரத்யக்ஷ உதாரணம். அவர் எதையும் தனக்கென வேண்டி உபவாசம் இருந்ததில்லை. லோக க்ஷேமத்துக்காக உபவாசம் இருந்த தெய்வம்.உபவாசத்தில் ஒவ்வொருநாளும் ஒரு தெய்வம் தியானம் செயது உபவாசம் இருப்பதுண்டு சிவபக்தர்கள் திங்கக்கிழமை , சோமவார உபவாசம் இருப்பார்கள். பரமேஸ்வரன், பார்வதிக்குகந்த நாள் செவ்வாய் மங்களவாரம் , ஹனுமான், முருக, துர்க்கை பக்தர்கள் அங்காரக உபவாசம் இருப்பார்கள்.
புதன் கிழமை கிருஷ்ணன், பாண்டுரங்கனுக்கு உகந்தநாள். வியாழன் குருவாரம், ப்ரஹஸ்பதி வாரம்.
Thursday (Guruvar or Vrihaspativar) தக்ஷிணாமூர்த்தி உபாசகர்களும் அன்று உபவாசம் இருப்பார்கள்.வெள்ளி சுக்ரவாரம் எனப்படுவது. அம்மனை வழிபடுபவர்கள், சக்தி உபாசகர்கள், துர்க்கைக்கு, காளிக்கு, சந்தோஷி மாதாவுக்கு என்று உபவாசம் இருப்பார்கள்.
சனிக்கிழமை அநேகர் சனிபகவான் அனுக்கிரஹம் வேண்டி உபவாசம் இருப்பார்கள். எள்ளு மூட்டை கட்டி நல்லெண்ணெய் விளக்கேற்றுவார்கள்.ஞாயிறு சூர்யனுக்குகந்த நாள்.
No comments:
Post a Comment