குரு பூர்ணிமா குரு வந்தனம் - #நங்கநல்லூர்_JK_SIVANதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்:
இன்று 13.7.2022 குரு பூர்ணிமா என்று கொண்டாடுகிறோம். நல்லவேளை இதை சாக்கிட்டாவது குருவந்தனம் இன்று ஒருநாளாவது செய்யலாம். இந்த நாளில் தான் முன்னொருகாலத்தில் புத்தர் சாரநாத்தில் முதல் உபதேசம் செய்தார். இந்த நாளில் தான் வேத வியாசர் பிறந்தார். ப்ரம்ம சூத்ரம் இயற்றினார்.
சிவனுக்குதான் ஆதி குரு என்று பெயர். ஞானத்தை மோனமாக உபதேசம் செய்த மௌன குரு தக்ஷிணாமூர்த்தி. அவர் மேல் ஆதி சங்கரர் இயற்றியது தான் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம். அதை கீழே
विश्वं दर्पणदृश्यमाननगरीतुल्यं निजान्तर्गतं पश्यन्नात्मनि मायया बहिरिवोद्भूतं यथा निद्रया ।
यः साक्षात्कुरुते प्रबोधसमये स्वात्मानमेवाद्वयं तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥१॥
விஶ்வம்தர்பண த்றுஶ்யமான னகரீ துல்யம் னிஜாம்தர்கதம் பஶ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதானித்ரயா |யஸ்ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மானமே வாத்வயம்
தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 1 ||
காண்பதை காட்டும் கண்ணாடி உலகத்தையே கண் முன் காட்டுகிறது. அது காட்டுவது பிம்பமே. அசல் அல்ல. நகல். உலக மாயையை அப்படியே உள்ளே உணரவைக்கிறது மனம். கனவில் காண்பது கண நேரம் தான். அது போல அழியும் வஸ்துவை உணர்த்தி அழியா ஞானம் பெற வைக்கும் உன் மௌனம் ஆத்மாவை ஒரு நிலைப் படுத்தி சர்வமும் நீயே என உணரவைக்கிறதே. தெற்கு நோக்கி நீ அமர்ந்ததே காலனின் ஊர், அங்கே தான் அழியும் யாவும் முடிவாகும் என உணர்த்தவா? மௌனகுருவே உனக்கு நமஸ்காரம்.
बीजस्याऽन्तरिवाङ्कुरो जगदिदं प्राङ्गनिर्विकल्पं पुनः मायाकल्पितदेशकालकलना वैचित्र्यचित्रीकृतम् ।
मायावीव विजृम्भयत्यपि महायोगीव यः स्वेच्छया तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥२॥
பீஜஸ்யாம்ததி வாம்குரோ ஜகதிதம் ப்ராங்னர்விகல்பம் புனஃ மாயாகல்பித தேஶகாலகலனா வைசித்ர்யசித்ரீக்றுதம் |
மாயாவீவ விஜ்றும்பயத்யபி மஹாயோகீவ யஃ ஸ்வேச்சயா தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 2 |
ஓஹோ இப்போது தான் புரிகிறது, பரமேஸ்வரா நீ ஏன் கல் ஆல மரத்தடியில் ஒரு கால் மடக்கி மௌன உபதேசம் செய்கிறாய் என்று. ஆலம் விதை சிறியது. அது தனித்து பிறகு பெரிய விருக்ஷமாகிறது. திரும்ப திரும்ப விழுதே மரமாகி......அது போலவே .உன்னிலிருந்து ஒரு சிறு அணு, ஜீவனாகி பல பிறவி எடுத்து.... உன் சாஸ்வதத்தை அடைவது. நீயே எல்லாம், திரும்ப திரும்ப தோன்றி உன்னையே அடைய, அசை வெல்லாம் மாயையே என்று புரிய வைக்க அசையாத கல் ஆலமரம். ஒன்றே பல, பலவும் ஒன்றின் பிம்பமே என்று புரியவைக்க, ஜீவாத்மா-பரமாத்மா தத்வம் உணர்த்த ஒரு சின்முத்திரை... மௌன குருவே உனக்கு நமஸ்காரம்.
यस्यैव स्फुरणं सदात्मकमसत्कल्पार्थकं भासते साक्षात्तत्त्वमसीति वेदवचसा यो बोधयत्याश्रितान् ।
यत्साक्षात्करणाद्भवेन्न पुनरावृत्तिर्भवाम्भोनिधौ तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥३॥
யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே ஸாக்ஷாத்தத்வமஸீதி வேதவசஸா யோ போதயத்யாஶ்ரிதான் |
யஸ்ஸாக்ஷாத்கரணாத்பவேன்ன புரனாவ்றுத்திர்பவாம்போனிதௌ தஸ்மை ஶ்ரீகுருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 3 ||
காரிருளில் இருந்து கலர் கலராக இந்த உலக மாயையை காண்பது எல்லாமே வேறல்ல, நீயே. எல்லாமே நீயாக இருக்கிறாய் என உணர்விக்கும் மௌனம் சிறந்த பாடம். நீயே ஆசான். சம்சார சாகர மாயையி லிருந்து விடுபட்டு உன்னையே அடைய உதவுபவனும் நீயே . ஒருகாலை மடக்கி அமர்வதே என் காலைப் பிடித்துக்கொள், ஒருக்காலும் மாயையை நிஜமென நம்பி மரணத்தை தழுவாதே என்று உணர்த்தவா? உனக்கு நமஸ்காரங்கள்.
नानाच्छिद्रघटोदरस्थितमहादीपप्रभा भास्वरं ज्ञानं यस्य तु चक्षुरादिकरणद्वारा वहिः स्पन्दते ।
जानामीति तमेव भान्तमनुभात्येतत्समस्तं जगत् तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥४॥
நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹாதீப ப்ரபாபாஸ்வரம் ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதிகரண த்வாரா பஹிஃ ஸ்பம்ததே |
ஜானாமீதி தமேவ பாம்தமனுபாத்யேதத்ஸமஸ்தம் ஜகத் தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 4 ||
இந்த உடம்பு இருக்கிறதே அது உள்ளே இருக்கும் ஆன்மாவை பிணைத்திருக்கிறது. ஆன்மாவின் ஒளி யை திரை போட்டு மறைக்கிறது. ஆன்ம ஒளி வெளியேறி உலகை மகிழ்விக்க ஐம்புலன்களும் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அவற்றின் மூலமே அது வெளிப்படும் என்பதை ஒரு அழகான உதாரணம் சொல்லி விளக்கலாமா?
ஒரு பானை. அதனுள் ஒரு தீபம். தீப ஒளி அந்த பானையின் விரிசல்களில், துவாரங்களிலிருந்து பளீரென்று வெளியே வீசுகிறது..
இவ்வாறு எனது ஆன்மா ஒளிவீச, என் ஞானம் வெளிப்பட என் இந்திரியங்களை என் கட்டுப்பாட்டில் வைத்திட உதவுகிறாயா, மௌனகுருவே, ஞான தீபமே,உனக்கு நமஸ்காரம்.
देहं प्राणमपीन्द्रियाण्यपि चलां बुद्धिं च शून्यं विदुः स्त्रीबालान्धजडोपमास्त्वहमिति भ्रान्ता भृशं वादिनः ।
मायाशक्तिविलासकल्पितमहाव्यामोहसंहारिणे तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥५॥
தேஹம் ப்ராணமபீம்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஶூன்யம் விதுஃ ஸ்த்ரீ பாலாம்த ஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராம்தாப்றுஶம் வாதினஃ |
மாயாஶக்தி விலாஸகல்பித மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 5 ||
தேஹாத்ம புத்தி என்று கேள்விப் பட்டதுண்டா? இந்த உடம்பு நீ இல்லை. உள்ளே நீ உணராத ஆத்மா என்று ஒரு நுண்ணிய வஸ்து தான் நீ. இதை புத்தகம் மூலம் அறியமுடியாது. உன்னை நினைத்து த்யானம் செயது, உன் போல் அசையாமல் ஓடும் மனதை ஒடுக்கி, நிலை நிறுத்தி, உன் மௌனம் மூலம் அறியவைத்து அறியாப் பெண்டிர், சிறார் போல அலைந்த என்னை தெளிவித்த தக்ஷிணாமூர்த்தியே உனக்கு நமஸ்காரம்.
राहुग्रस्तदिवाकरेन्दुसदृशो मायासमाच्छादनात् सन्मात्रः करणोपसंहरणतो योऽभूत्सुषुप्तः पुमान् ।
प्रागस्वाप्समिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञायते तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥६॥
ராஹுக்ரஸ்த திவாகரேம்து ஸத்றுஶோ மாயா ஸமாச்சாதனாத் ஸன்மாத்ரஃ கரணோப ஸம்ஹரணதோ யோஉபூத்ஸுஷுப்தஃ புமான் |
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோதஸமயே யஃ ப்ரத்யபிஜ்ஞாயதே தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 6 ||
வருஷத்தில் சில முறை சூரியன் சந்திரன் ராகு வசம் பிடிபட்டு விழுங்கப்பட்டு விடுபடுகிறார்கள். விழுங்கப் பட்டபோது இல்லாமலா போனார்கள்? அது போலவே தான் நான் உறக்கத்தில். இதை உணர்த்தி மாயை இருளிலிருந்து அகன்று ஆன்மா ஒளிவீச செய்யும் மௌன குருவே, உன்னில் நான், என்னில் நீ என உணர்வுக்கும் தெய்வமே, தக்ஷிணாமூர்த்தியே, உனக்கு நமஸ்காரம்.
बाल्यादिष्वपि जाग्रदादिषु तथा सर्वास्ववस्थास्वपि व्यावृत्तास्वनुवर्तमानमहमित्यन्तः स्फुरन्तं सदा ।
स्वात्मानं प्रकटीकरोति भजतां यो मुद्रयाभद्रया तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥७॥
பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா ஸர்வாஸ்வவஸ்தாஸ்வபி வ்யாவ்றுத்தா ஸ்வனு வர்தமான மஹமித்யம்தஃ ஸ்புரம்தம் ஸதா |
ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 7 ||
எத்தனை வேஷங்கள் போடுகிறோம். குழந்தை, பாலகன், ஆடவன், கணவன், தந்தை, ஆபீசர், கிழவன், ஆஹா ஒவ்வொரு வேஷத்துக்குள்ளும் ஆசாமி ஒருவன் இருக்கிறானே அவனை அறியவில்லையே, வேஷதாரி வேறு,வேஷம் வேறு. ஆன்மா தான் நீ என்று ஒரு சிறிய கை விரல் சேர்த்த தத்துவத்தில் சின் முத்திரையில் அதுதான் நீ, நீதான் அது என்று உணர்த்தும் மௌன குருவே, தக்ஷிணாமூர்த்தியே. உறக்கம், விழிப்பு, கனவு, அதைக் கடந்த நிலை எல்லாமே உன் வெளிப்பாடு என்று உணர்த்தும் தெய்வமே நமஸ்காரம்.
विश्वं पश्यति कार्यकारणतया स्वस्वामिसम्बन्धतः शिष्याचार्यतया तथैव पितृपुत्राद्यात्मना भेदतः ।
स्वप्ने जाग्रति वा य एष पुरुषो मायापरिभ्रामितः तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥८॥
விஶ்வம் பஶ்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிஸம்பம்ததஃ ஶிஷ்யசார்யதயா ததைவ பித்று புத்ராத்யாத்மனா பேததஃ |
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமிதஃ தஸ்மை ஶ்ரீ குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 8 ||
உலகம் ரொம்ப வேடிக்கையானது. அது தான் ஐயா, காரண காரியங்களை, ஒவ்வொன்றிலும், காட்டுகிறது, பேதத்தை, வித்யாசத்தை காட்டி, பெரிதாக்கி, துன்புறுத்துகிறது. எல்லாமே ஒன்றென்றபோது எங்கே எது வித்யாசம்?, எது தனி அடையாளம்?, இதை உணர்த்தி சதா சர்வ ஆனந்த மையத்தில் திளைக்கச் செய்யும் தக்ஷிணாமூர்த்தி மோன குருவே நமஸ்காரம்.
भूरम्भांस्यनलोऽनिलोऽम्बरमहर्नाथो हिमांशु पुमान् इत्याभाति चराचरात्मकमिदं यस्यैव मूर्त्यष्टकम्
नान्यत् किञ्चन विद्यते विमृशतां यस्मात्परस्माद्विभोः तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥९॥
பூரம்பாம்ஸ்யனலோஉனிலோஉம்பர மஹர்னாதோ ஹிமாம்ஶுஃ புமான் இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |
னான்யத்கிம்சன வித்யதே விம்றுஶதாம் யஸ்மாத்பரஸ்மாத்விபோ தஸ்மை குருமூர்தயே னம இதம் ஶ்ரீ தக்ஷிணாமூர்தயே || 9 ||
இருப்பது போல் தோன்றும் இல்லாத இந்த பஞ்ச பூதங்கள், சூரியன் சந்திரன் அனைத்தும் ஒன்றே. அதுவே அந்த பரமாத்மன். அதன் சிறிய தோற்றம் தான் ஜீவன், ஒவ்வொன்றிலுமாக இருப்பது என்று உணர்த்தும் மஹா பிரபுவே , தக்ஷிணம்மூர்த்தியே. நீயின்றி ஓர் அணுவும் இல்லை, அசையாது என்று அறிந்து கொள்ள வைக்கும் உன் மோன உபதேசத்திற்கு எப்படி நன்றி கூறுவேன்? தக்ஷிணாமூர்த்தி உனக்கு நமஸ்காரம்.
सर्वात्मत्वमिति स्फुटीकृतमिदं यस्मादमुष्मिन् स्तवे तेनास्य श्रवणात्तदर्थमननाद्ध्यानाच्च संकीर्तनात् ।
सर्वात्मत्वमहाविभूतिसहितं स्यादीश्वरत्वं स्वतः सिद्ध्येत्तत्पुनरष्टधा परिणतं चैश्वर्यमव्याहतम् ॥१०॥
ஸர்வாத்மத்வமிதி ஸ்புடீக்றுதமிதம் யஸ்மாதமுஷ்மின் ஸ்தவே தேனாஸ்வ ஶ்ரவணாத்ததர்த மனனாத்த்யானாச்ச ஸம்கீர்தனாத் |
ஸர்வாத்மத்வமஹாவிபூதி ஸஹிதம் ஸ்யாதீஶ்வரத்வம் ஸ்வதஃ ஸித்த்யேத்தத்புனரஷ்டதா பரிணதம் சைஶ்வர்ய மவ்யாஹதம் || 10 ||
ஆத்மாவை பற்றி நான் நினைப்பதே இல்லை என்றாலும் எனக்கு அதைப் புரியவைத்தாய். மேலே அத்தனை ஸ்லோகத்திலும் அ தை விளக்கினாய். ஆத்ம ஞானம் அடைந்தவனுக்கு ஏது துன்பம்? சதானந்தத்தில் திளைப்பவனுக்கு ஏது விசாரம்.? இதை உணர்வித்த உனக்கு பல கோடி நமஸ்காரங்கள் மோன குருவே நடராஜா, தீன கருணாகரனே .. தக்ஷ்ணாமூர்த்தியே ,
தமஸோமாம் ஜ்யோதிர் கமயா'. என் அறியாமை என்கிற இருட்டு நீங்கி ஞான ஒளி பெற அருள்வாய்.
சென்னைக்கருகே, அரக்கோணம் அருகே தக்கோலம் என்ற க்ஷேத்ரத்தில் ஒரு அருமையான தட்சிணாமூர்த்தியை தரிசித்தேன். அவர் படம் இணைத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment