Tuesday, July 12, 2022

SORROW OF GOPIKAS

 உனைக் காணாத கண் வேண்டாம் கண்ணா -  நங்கநல்லூர்  J K  SIVAN


கோபிகளின் துயரம்  -  8- 11ஸ்லோகங்கள்

 मधुरया गिरा वल्गुवाक्यया बुधमनोज्ञया पुष्करेक्षण ।
विधिकरीरिमा वीर मुह्यतीर् अधरसीधुनाप्याययस्व न: ॥ ८ ॥

madhurayā girā valgu-vākyayā budha-manojñayā puṣkarekṣaṇa
vidhi-karīr imā vīra muhyatīr adhara-sīdhunāpyāyayasva naḥ

கிருஷ்ணா , உன்னிடத்தில் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது. தாமரை இதழ்க்  கண்ணா, உன்னுடைய குரல் தேன்  தோய்ந்து இனிக்கிறது. அதிலிருந்து வரும் வார்த்தைகளோ, கேட்கவே வேண்டாம். எப்படி ஒவ்வொரு சொல்லும்  ஆழமாக   மனதில் பதிகிறது. அதில் நிறைந்திருக்கும்  அன்பு, பாசம்  அப்படியே  எங்களை அடிமையாக்குகிறதே. படித்தவர் படிக்காதவர்  என்கிற வித்யாசமே அதற்கு தேவையில்லையே. யாவரையும் கட்டிப்போட்டு விடுகிறதே. எப்படி அதைக் கேட்காமல் ஒரு  நாளாவது  வாழ்வோம் என்கிற பயம்  நடுங்கச் செய்கிறது.  எங்கள் தலைவா,  எங்களை மீண்டும் உன் காந்தக் குரலால் மெய்ம்மறக்கச் செய்.

तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् ।
श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जना: ॥ ९ ॥

tava kathāmṛtaṁ tapta-jīvanaṁ kavibhir īḍitaṁ kalmaṣāpaham
śravaṇa-maṅgalaṁ śrīmad ātataṁ bhuvi gṛṇanti ye bhūri-dā janāḥ

இந்த  பந்த  உலகில் உன்னைப் பற்றிய  வர்ணனைகளும், உன் செயல்கள் பற்றிய  கதாம்ருதமும் உன் இனிய சொற்களும் மட்டுமே  ஜீவாதாரம். துயர் தீர்ப்பவை. இன்பமூட்டுபவை. பாபங்களை விலக்குபவை. அதனால் தானே  ரிஷிகள் ஞானிகள் மஹான்கள் எல்லோரும் உன் நாமத்தை ஸதா ஸர்வகாலமும்  ஜபித்து  மகிழ்கிறார்கள். உன்னைப் பற்றி  யார் பேசினாலும் கேட்க அலுக்கவில்லையே அப்பா. பேசினாலே இப்படியென்றால் உன்னைப் பற்றி இனிமையாக  பாடுவதைக் கேட்டால்..?

प्रहसितं प्रिय प्रेमवीक्षणं विहरणं च ते ध्यानमङ्गलम् ।
रहसि संविदो या हृदिस्पृश: कुहक नो मन: क्षोभयन्ति हि ॥ १० ॥

prahasitaṁ priya-prema-vīkṣaṇaṁ viharaṇaṁ ca te dhyāna-maṅgalam
rahasi saṁvido yā hṛdi spṛśaḥ kuhaka no manaḥ kṣobhayanti hi

துறுதுறுப்புக்கும்  சுறுசுறுப்புக்கும்  இன்னொரு பெயர் தான் கிருஷ்ணன்.  ஆஹா  நீ  வாய்விட்டு தலை சாய்த்து சிரிக்கும்போது என்ன அழகு!  நீ  கடைக்கண்ணால் அப்போது எங்களை பார்க்கும் பார்வை ஒன்றே போதுமே,  எத்தனையோ ஜென்மம் தவம் இருந்தால் தான் அது கிடைக்கும்.  உன்னுடைய விளையாட்டு ஒவ்வொன்றும் மெய்ம்மறக்கச் செய்பவை ஆயிற்றே. எங்கிருந்து இதெல்லாம் கற்றாய் ? ஒவ்வொரு கணமும் ஆனந்தவெள்ளத்தில் ஆழ்த்தியவனே.  நினைத்தாலே நெஞ்சில் தேன்  ஊறுகிறதே.  உன்னைக்  கண்ணார  தரிசித்து, கையாற  தழுவக்  கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.  இனி நீ இல்லாமல் நாங்கள் வாழ்வது எப்படி?

चलसि यद् व्रजाच्चारयन् पशून् नलिनसुन्दरं नाथ ते पदम् ।
शिलतृणाङ्कुरै: सीदतीति न: कलिलतां मन: कान्त गच्छति ॥ ११ ॥

calasi yad vrajāc cārayan paśūn nalina-sundaraṁ nātha te padam
śila-tṛṇāṅkuraiḥ sīdatīti naḥ kalilatāṁ manaḥ kānta gacchati

ஒவ்வொரு நாளும் நீ கன்றுகளோடும் பசுக்களோடும் வெறும் காலோடு காட்டுப்பகுதியில் அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துப் போகும்போது எங்கள் மனம் எப்படி பதைக்கிறது தெரியுமா? ஐயோ, தாமரை இதழ்கள் போல் மென்மையான  பஞ்சு போன்ற பாதங்களில் கூறிய புற்களும், கல்லும் குத்துமே, அவனுக்கு வலிக்குமோ? என்று பதறுவோம். துடிப்போம்.
 
தொடரும்  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...