காணியுமில்லை, கோணியுமில்லை....
#நங்கநல்லூர்_jk_sivanமஹாகவி பாரதியாரின் ''காணி நிலம் வேண்டும்'' என்ற பாட்டை யாரோ ஒரு பெண் அழகாக பாடிக் கொண்டிருந்தார். அதென்ன காணி நிலம். நிலம் என்றால் நமக்கு தெரிந்தது ''கிரௌண்ட்'' சதுர அடி . எங்கோ அடுக்கு மாடியில் புறா மாதிரி வசிப்பவனுக்கு UDS என்ற கண்ணில் காணமுடியாத பிரிக்காத மொத்த நிலத்தில் துக்குணியூண்டு. அது ஏதோ அராசாங்க
முத்திரைத் தாளில் இவ்வளவு என்று சொல்வதோடு சரி. விற்கும்போதும் வாங்கும்போதும் தான் அது கவனத்துக்கு வரும்.
தனி வீட்டில் இருப்பவன் கணக்கு கிரௌண்ட், அரை, முக்கால், ஒன்று அதற்கு மேல் எத்தனை சென்ட் என்று தான் கணக்கு போட்டு சொல்வான். ஒரு கிரௌண்ட் கிட்டத்தட்ட 5 சென்ட் என்று வைத்துக்கள்லலாம். 2400 சதுர அடி . ரொம்ப பெரிய பணக்காரன் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவன்.
காணி என்பது பழங்கால நில அளவு. நமது சென்ட் கணக்கில் 134சென்ட். ஒரு ஏக்கர் 34 சென்ட் (100 சென்ட் ஒரு ஏக்கர்)
'' சிவன் ஸார், உங்களுக்கு பூர்வீகம் எது என்று கேட்கிறார்கள்.
பதில் சொல்கிறேன்.
''அங்கே நிலம் வீடு எல்லாம் இருக்கா?''
''ஆஹா இருக்கே, ஆனால் எனதில்லை''
உங்க ஊர் எது என்று ஒரு தமிழ் புலவரிடம் கேட்டபோது அவரும் இதுமாதிரி தான் பதில் சொல்லியது உலகம் முழுதும் இன்று அனைவருக்கும் தெரியும் எனக்கு
என்று தனியா ஒரு ஊர் கிடையாதே, எல்லாமே என் ஊர் தான். எல்லோரும் சொந்தக்காரங்க தான்.
.''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று பாடியவர் கணியன் பூங்குன்றனார்.
நாம் சாதாரணர்கள் இல்லை ஐயா எல்லோருமே இந்த நாட்டு மன்னர்கள்... என்றவர் பாரதியார்.
ஒரு வைஷ்ணவ ஆழ்வாரிடம் இதே கேள்வியை யாரோ கேட்டிருக்கிறார்கள். அவர் நிலம் மட்டும் அல்ல உறவு பற்றியும் பதில் சொல்லி வாயை அடைத்திருக்கிறார்., அருமையான பாசுரத்தால். அந்த வைஷ்ணவர் நம் எல்லோருக்கும் தெரிந்த தொண்டரடிப் பொடி ஆழ்வார். விப்ர நாராயணர். அந்த அற்புதமான பாடல்: (திருமாலை)
''ஊரிலேன், காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.''
''ஐயா, இது தான் என் ஊர் என்று எனக்கென்று சொந்தமாக ஒரு ஊரோ, பயிரிட்டு பிழைக்க நஞ்சை புஞ்சை வயல் எதுவும் இல்லை. உதவி செய்ய சொந்த பந்தமும் யாரும் கிடையாது.
ரெங்கம்மா, நீ தான் எனக்கு அம்மா. கிருஷ்ணா, உன் திருவடிகளிலும் பற்றில்லாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேன். மேலான பரம்பொருளே! மேகம் போல கன்னம் கருத்த வர்ண கண்ணனே! திக்கற்றவருக்கு தெய்வம் தான் துணை. ஆகவே நீயே எனக்கு துணை என்று கதறுகிறேனே காதில் விழுகிறதா உனக்கு? வா. உடனே வா, வந்து என் துன்பத்தைக் களைந்து விடு. எனக்கு உன்னையன்றி வேறு யாரும் இல்லை.
ஸ்ரீரங்கத்தில் படுத்துக் கொண்டிருப்பவனே, கொஞ்சம் எழுந்து நடந்து வா என்னிடம்.
No comments:
Post a Comment