Monday, July 18, 2022

PANCHANGAM

 பஞ்சாங்கம்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


சுனாமியைப் பற்றி,   எங்கோ ஒரு பெரிய  ஆகாயவிமானம் விழுந்து கூண்டோடு  ஆயிரக்கணக்கானவர்கள்  மரணமடைந்தது பற்றி,   விடாது மழை பொழிவது பற்றி,  பெரிய தீ விபத்து பற்றி,.....  இதெல்லாம் எப்போது நடக்கும் என்று பஞ்சாங்கத்தில் சொல்லி இருக்கிறது என்று பலர்  செயதிகளில், வாட்சப்பில்  எல்லாம்  வெளியிடுகி
றார்கள்.   வாஸ்தம்,   காலத்தையும், அதில் நிகழ்வது பற்றியும் பஞ்சாங்கம் துல்லியமாக சொல்லக்கூடியது.

பஞ்சாங்கம் கணிப்பது ரொம்ப கஷ்டம்.  என்னைப்
போல் எதையாவது எழுதுவதல்ல. துல்லியமாக கனக்குப் போடவேண்டும். சூக்ஷ்மமாக கவனமாக கிரஹங்களின் சுழற்சி, அவற்றின் சுற்று, நேரம், பிரயாணம், குறிப்பிட்ட காலம், சூரிய உதயம், அஸ்தமன நேரங்கள் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்பே  சரியாக கணக்கில் கொண்டு வரும் கணித நூல் பஞ்சாங்கம்.   பஞ்சாங்கத்தை தூக்கி எறிபபவ னுக்கு அதன் மதிப்பும் மஹிமையும்  எப்படி தெரியும்?

சூரிய  சந்திரன்  சுழற்சி    சௌரமானம், 
 சந்திரன் அசைவு:  சந்திரமானம்  .
இது பஞ்சங்கம் கணிக்க  ஆதாரமான விஷயம்.

1. சௌரமான முறை -- சூரியனின் இயக்கத்தை   ரெண்டாக  கணக்கிடுகிறார்கள்.   ஒன்று சௌர வருஷ முறை   இன்னொன்று  சாயன வருஷ முறை. இதற்குள் போகவேண்டாம். 

2.சந்திரமான முறை- சந்திரனின் இயக்கம்  அடிப்படை விஷயம்.   வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த  வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை .  இதில்  ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.   நாம் நினைப்பது போல்  365  1/4  நாள் அல்ல.

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் . 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வித்யாசம் உண்டு.  அதாவது 6 மணி 48 நிமிடம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும்.

1.திருக்கணித பஞ்சாங்கம்- சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் . திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது.

2.வாக்கிய பஞ்சாங்கம் - பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் ஒன்றுகூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாறி இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது வாக்கிய பஞ்சாங்கமாகும். காலமாற்றத்தினால்  உட்படாத, அதாவது திருத்தப்படாத பஞ்சாங்கம்  தான்  வாக்கிய பஞ்சாங்கம்.நம் முன்னோர்களின் கருத்துக்களையும் அவர்கள் பின்பற்றிய கணிதமுறைகளை இன்றளவில் எள்ளளவும் மாற்றாமல் பழமையை பிரதிபலிப்பது.   ரிஷிகள் சொன்னது என்பதால் தான்  ''வாக்கியம்''  என்று பெயர் கொண்டது. மாறுதல் எதையும்  செய்யாமல்   பழமையை அப்படியே பிரதிபலிப்பது. 
 தமிழ் நாட்டில் வாக்கிய பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது.  400 வருஷங்களுக்கு மேலாக  வாக்கிய  பஞ்சாங்கத் தில்  திருத்தமே இல்லை !

திருக்கணித முறையில் சந்திரன் கிரகநிலை மட்டும் கணக்கிட 100க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், திருத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 10 ஆண்டுக்கு ஒருமுறை வானியல் விஞ்ஞானிகள் கூடி கூடுதல் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக்கொள் கிறார்கள். 

ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டு கணிக்கப்பட்ட லஹரி அயனாம்சத்தின் அடிப்படையில் அமையும் திருக்கணித பஞ்சாங்கம் சரியானது எனலாம். லஹரி அயனாம்ஸம் சர்வதேச விஞ்ஞானி களால் விவாதிக்கப்பட்டது, அறிவியல் சஞ்சிகைகளால் ஆமோதிக்கப்பட்டது. சூரிய சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு, நவீன சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு என்பதால் அறிவியல் முறைப்படி கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது நியாயமே. மேலும் அயனம் என்பது குறிப்பிட்ட அளவிற்கு பின்னர் குறையும் மற்றும் அயனம் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்ற சில வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வானியல் அறிவியலாளர்களின் முடிவை ஏற்போம். விவரமாக அதற்குள் நாம் போகவேண்டாம். தலை சுற்றும்.

நமக்கு அர்ஜண்டாக தேவையானது   எப்போது என்றைக்கு அமாவாசை தர்ப்பண நாட்கள்? ஸ்ராத்த திதி, கிரஹண, மஹாளய தர்ப்பண கால நேரம்,  தவிர சுப முஹூர்த்தங்கள், கல்யாண காரியங் களுக்கு நல்ல நாட்கள், பண்டிகைகள்?  என்று அறிவதற்கு மட்டுமே.
ஜாதகத்திற்கு தேவையான விபரங்கள், யஜுர் உபா கர்மா, சாம, ரிக், யஜுர் வேத வேதங்களுக்கு ஏற்ப. போனஸாக இவர்கள் பஞ்சாங்கத்தில் சில பூஜா அஷ்டோத்ர, நாமாவளி ஸ்லோகங்களும் இருக்கிறதே. போதாதற்கு தேவைப்பட்டால் அபர காரிய விபரங் களும்    செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி  விஷயம் நிறைய இருக்கிறது.

இதற்கெல்லாம்  குடும்ப வாத்யாரைத் தேடி ஓடவேண்டாமே. பஞ்சாங்கம்  பார்க்க தெரிந்தால் போதும்.இப்போதெல்லாம்  வாட்சப்பில்  மந்திரங்கள்  சொல்கிறார்கள், தர்ப்பணம் சங்கல்பம் பண்ணி வைக்கிறார்கள். நிறைய வீடுகளில் வாட்சப்பில்  மந்திரம் சொல்ல கேட்டு ச்ராத்தம், பூஜைகள்  கூட  செய்கிறார்கள்.  ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவி பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

நமது கோவில்களில் இறைவழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பின்பற்றப் படுகின்றன.

தமிழ்நாட்டில் வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கங்கள் என்ன தெரியுமா?
ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம்,
திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம்.

திருக்கணித பஞ்சாங்கம் ஜாதகம் கணிக்க மற்றும் ஜாதக பலன் உரைக்க ஜோசியர்களால் பயன்படுத்தப் படுவது. திருக்கணித பஞ்சாங்கங்கள் சில: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம். வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...