''பவ ஒளஷதம்'' --- நங்கநல்லூர் J K SIVAN
சந்திரனுக்கு சோமன் என்றும் பெயர். அவன் வம்சத்தில் வந்தவர்கள் யாதவர்கள். கிருஷ்ணன் யாதவகுலத்தில் பிறந்தவன். ''யாதவ குல முரளி'' என்று எவ்வளவு பாட்டுகளில் பாடுகிறோம் கேட்கிறோம். க்ஷத்ரியர்கள் தங்களை ஒன்று சூரியவம்சம், ரவிகுலம், அல்லது சந்திரகுலம் சோம வம்சம் என்று தான் அடையாளம் காட்டிக் கொள்வார்கள். ''ராமா ரவிகுல சோமா'' என்று ராமனைப் பாடுகிறோம். ராமர் சூரியவம்சம். கிருஷ்ணன் சந்திர வம்சம்.
பிருந்தாவனம் ஒரு ஆன்மீக உலகம்.கோ லோக பிருந்தாவனம், வ்ரஜ பூமி என்று அதற்கு பெயர்.
இந்த யாதவ குலத்தில் கிருஷ்ணனாகப் பிறக்க மஹா விஷ்ணு சங்கல்பித்தார். பலராமனோடு கிருஷ்ணனும் சேர்ந்து அவதரித்த ஒரு அதிசயம். நாராயணனைப் பிரியாத ஆதிசேஷன் தான் பலராமன். கிருஷ்ணன் என்பது ஒரு பூர்ண அவதாரம். கிருஷ்ணன் விஷ்ணு தத்துவத்தின் ஆதி காரணம். கோவிந்தன் என்ற பெயர் கொண்ட தெய்வீகப் பிறவி. மஹா விஷ்ணுவின் மூச்சில் தான் கோடானுகோடி ஜீவன்கள் தோன்றுகிறது. கிருஷ்ணனை விளக்கிச் சொல்ல ஆயிரம் நாப் படைத்த ஆதிசேஷனாலேயே கூட முடியாது. கிருஷ்ணனாக அவதரித்து கண்ணன் சொன்னது, செய்த தெல்லாம் மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே. கிருஷ்ணனை ப்பற்றி எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும், பாடினாலும் ஏன் அலுக்கவே இல்லை.மேன்மேலும் ஆர்வம் பெருகுகிறது என்பது இதனாலேயே தான்.
'அர்ஜுனா, என்னை விட உயர்ந்ததோ பெரிய உண்மையோ, எதுவும் பிரபஞ்சத்தில் இல்லையடா"" என்கிற அர்த்தத்தில் ஒரு ஸ்லோகம்:
मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय। मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव।।7.7।।
mattah parataram nanyat kincid asti dhananjaya:
குருக்ஷேத்திர போர்க்களத்தில் இதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கும்போது அவன் காலடியில் அமர்ந்து கிருஷ்ணன் எளிமையான ஒரு தேரோட்டியாக தான் உணர்த்துகிறார். நமக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே கிருஷ்ணன் இதை அப்போதே சொல்லி இருக்கிறார் .
கீதையையோ,பாகவதத்தையோ, கிருஷ்ணன் சரித்ரத்தையோ சொல்பவன், எழுதுபவன் விஷ்ணு தத்துவத்தை கொஞ்சமாவது அறிந்திருந்தால், தெரிந்திருந்தால் அவனது சொல், எழுத்து எடுபடும் . இல்லாவிட்டால் சர்க்கரை தேன் என்று ஆயிரம் பக்கம் எழுதி, நூறு நாள் சொன்னாலும் காகிதம் இனிக்காது, செவியில் ஏறாது.
வாழ்க்கையை வாழத் தெரியாதவன், பசுவை கொல்பவனுக்கு சமம். அவனுக்கு கிருஷ்ணன் புரியாது. ரசிக்காது. ஏனென்றால் கிருஷ்ணன் பசு இரண்டையும் பிரிக்கமுடியாது. கிருஷ்ண னை அறியாமல் வாழ்வது தற்கொலைக்கு சமானம் என்று சொல்லலாமா?

அற்புதமான இந்த மானுட வாழ்க்கையை வாழத் தெரியாதவன் தானே உயிரை மாய்த்துக் கொள்ள, தற்கொலைக்கு தயாராகிறான். மஹான்கள் கிருஷ்ணனை ஸ்மரித்து, பாடி, ஆடி, பரவசமாகி, படித்து, பேசி, நமக்கு எத்தனையோ பேரின்ப வழிகளை காட்டி இருக்கிறார்கள். ஏன்? பவ ரோகம் எனும் இந்த பிறவிநோயினின்றும் விடுபட இது ஒன்றே வழி. ஆகவே தான் கிருஷ்ணன் கதைக்கு ''பவ ஒளஷதம்'' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உலக வாழ்க்கை யின் பற்றுதல்கள் விலக உதவும் மருந்து.
சிறுவன் துருவன் தவமிருந்தான். பல வருஷங்கள் கழிந்து நாராயணன் எதிரே தோன்றினான்.
''உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் துருவா''
'' பகவானே எனக்கு எல்லாம் கிடைத்து திருப்தியாக இருக்கிறேன். இந்த உலக பற்று புலன்களின் ஆதிக்கம் என்னை விட்டு அகல அருள்வாய் பரந்தாமா. அது ஒன்றே போதும்'' என்றான் துருவன்.
''சுகப்பிரம்ம மஹரிஷி, கிருஷ்ணனின் தாமரைப்பதங்கள் எனும் படகின் மூலம் என் தாத்தா அர்ஜுனனும், மற்றவர்களும்,குருக்ஷேத்திர யுத்தம் எனும் கடலை கடந்து அதில் எதிர்ப்பட்ட பீஷ்மர் துரோணர் எனும் திமிங்கிலத்தை கூட வெல்லமுடிந்தது. கடக்க முடியாத சமுத்தி ரத்தை ஒரு கன்றுக்குட்டியின் குளம்பு சுவடு போல சுலபமாக கடக்க முடிந்தது.

என் தாய் உத்தரை, '' கிருஷ்ணா நீயே கதி'' என்று சரணடைந்தபோது கையில் சுதர்சன சக்ரம் ஏந்தி என் தாயின் கர்ப்பத்தில் குடியேறி, கிருஷ்ணன், அஸ்வத்தாமன் என்னை அழிக்க எய்த பிரம்மாஸ் திரத்தை தடுத்து என் உயிர் காத்து இந்த பாண்டவ வம்சம் அழியாமல் காத்ததை உங்கள் மூலம் அறியும் போது ஆனந்த பரவசமடைந்தேன்.
விஸ்வரூபம் காட்டி ''இந்த உலகில் அதர்மம் நீங்க தர்மம் தழைக்க நான் வருவேன்'' என்று உத்தரவாதம் அளித்த கிருஷ்ணனிடம் என் நன்றி உணர்ச்சியை நான் எப்படி வெளிப்படுத்து வேன் '' என்று கதறுகிறான் பரீக்ஷித்.
அப்பவ்வப்போது ஸ்ரீ மஹா பாரதம், ஸ்ரீமத் பாகவதம், புராணங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பக்கத்தை திருப்பினால் கூட இந்த மாதிரியான அற்புத சம்பவங்கள் பற்றி அறிய முடிகிறது. அந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிரவில்லையானால் தலை வெடித்துவிடும் என்ற பயமும் இருக்கிறது.
No comments:
Post a Comment