Thursday, July 7, 2022

RAMAKRISHNA PARAMAHAMSAR

 அருட்புனல் -   நங்கநல்லூர்  J K   SIVAN 


பரமஹம்ஸரின்  பக்தி 

தக்ஷிணேஸ்வரம் நிசப்தமாகவும்,  அமானுஷ்ய மாகவும் இருந்தது.  காற்று குளிர்ந்து வீசியது.  நீளமாக பரந்து விரிந்த கங்கை ஜலம் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது.  எங்கும் கண்ணுக் கெட்டிய தூரம்  யாருமே இல்லை.  அமைதியான  சூழ்நிலை.  சுற்றிலும்  அடர்ந்த மரங்கள்.கங்கையின்
 நீரோட்டத்துக்கு  பாந்தமாக  மேலே கருமேக கூட்டம். பறவைகளின்  ஆனந்த சப் தாஞ்சலி.  மென்மையான குளிர்ந்த காற்றில்  நறுமண மலர்களின் வாசம்.  எதிரே  பவதாரிணி நிற்கிறாள். அவள் முகத்தை பளிச்சிட் டுக் காட்டும்  சுடர் விடும் தீபம் அசையாமல் எரிகிறது. 
தரையில் சிலையாக  கால்களை பத்மாசனத்தில் மடக்கி  கண்மூடி ஆழ்ந்த த்யானத்தில் ராமக்ரிஷ்ணர்.   ஓம்  என்று அனாஹத சப்தம் நெஞ்சில் கேட்கிறது.  உலகம் அவருள்ளே  ஏன் இப்படி  உருள்கிறது?  கடல் அலைகள் ஏன் கொந்தளிப்புடன் ஆர்ப்பரிக்கிறது? அதோடு கலந்த  உலகம் உருளும் சப்தத்தின் எதிரொலியுமா சேர்ந்துவிட்டது?   ஓஹோ  அஷ்டாங்க சித்த யோகம் பலித்தது.

 தெய்வீக அன்னையின் உருவமொன்றே அவர் மனதில் பதிந்து மற்றதெல்லாம் உதறித்  தள்ளி வெகு நேரமாகிவிட்டதே.

அட  இதென்ன ஆச்சர்யம்?    அவர் மனதில்  காணும்   ஓவென்ற பேரிரைச்சலுடன் கங்கை அல்லவோ கொப்புளிக்   கிறாள்.  அந்த ஆழமான  நதியிலிருந்து புறப்பட்ட யார் இந்த   திவ்ய சுந்தரி?  ஓஹோ  அவள் பூரண கர்ப்பவதியாக மெதுவாக  அசைந்து அசைந்து வயிற்றின் சுமையோடு  எங்கே போகிறாள்?

 ராமகிருஷ்ணர்  வாசம் செய்யும்    பஞ்சவடியை நோக்கி  எதற்கு  நடந்து வந்தாள்?  அவளது அழகிய முகத்தில் புன்சிரிப்பு.  தொடர்ந்து  அவள் அமர்ந்தாள்,படுத்தாள்,  பிரசவித்தாள்.  ''குவா குவா'' என்று ஒரு பச்சிளம்  பிறந்த சிசு.  அதை அரவணைத் தாள் .  அப்புறம்?

''ஐயோ,  இதென்ன.  அழகானவளாக  தோன்றிய அந்த தாய்,  எப்படி திடீரென்று சிவந்த கண்களோடு தொங் கிய நாக்கோடு கூறிய பற்களை நறநறவென்று கடிக்கிறாள்.  அந்த சிசுவை வாயருகே கொண்டு சென்றாள் . ஒரே கடி. ரத்தத்தை உறிஞ்சினாள். அந்த சிசுவை ஒரே வாயில் விழுங்கினாள். நடந்தாள் . கங்கையில் இறங்கினாள் .மறைந்தாள்.  

என்ன  அர்த்தம் இதற்கு? திடீரென்று எதற்கு இந்த அசம்பாவித, பயங்கர காட்சி ?...... ஒன்றுமே புரியவில்லையே .  மார்பு படபடவென்று துடிக்கிறதே.  அதிர்ச்சி  தாங்கமுடியாமல்  உடம்பு வியர்க்கிறதே .

ராமகிருஷ்ணர்  உடலிலிருந்து குண்டலினி சக்தி உயிர் பெற்றது. தூங்கிக்  கொண்டிருந்த சர்ப்பம் வளைந்து நகர்ந்தது. மேலே எழும்பியது. சுழுமுனை கால்வாயில் ஊர்ந்து மேலே சென்றது. ஆறு ஸ்தானங்களில் நின்றது.  ஸஹஸ்ரார ஆயிரம் தாமரை இதழ்களில் சென்று ஐக்யமானது. ராமகிருஷ்ணர் சமாதி நிலையில் ஆழ்ந்தார்.

''இனி உன்னைத் தேடி நிறைய சீடர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழி காட்டு'' என்று ஏதோ அவர் உள்ளே சொல்லியது.

பக்தியில் மூன்று வகை. தமோ, ரஜோ, ஸத்வ பிரிவுகள்.  பக்திமானாக இருந்தும் ஒருவனிடம் அதிகாரம், கர்வம், கோபம், முதலானவை தென்பட்டால் அவன் தமோ குண பக்தன். செல்வம் பெற, உலக சுகங்கள் பெற கடவுளை வேண்டும் பக்தன் ரஜோகுண பக்தன். உலக விருப்பு வெறுப்பு அற்று பகவானை திருப்தி பண்ண நினைத்து, பூரண விஸ்வாசம், எல்லோரிடமும் அன்புடன் வேண்டு பவன் சத்வகுண பக்தன்.

இந்த  மூன்றில் எதுவுமே  இல்லாமல், மனம் முழுவதாக இறைவனை மட்டுமே நினைந்து தன்னை இழந்தவன் பூர்ண பக்தன். அவன் தான் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டாதவன். எந்த நிலையிலும் கடவுள் ஒருவரையே மூச்சாக கொள்பவன்.

வைதிக பக்தி சாஸ்த்ர விதிகளுக்குட்பட்டது. இப்படி உபாசிப்பவன், ஸ்தோத்ரம், பிரார்த்தனை, விரதம்,  உபவாசம், யாகம் ஹோமம்,  பஜனைகளில் ஈடுபடுபவன். இதிலேயே ஊறினவ னால் பர பக்தியில் தான் ஈடுபட முடியும். அதி தீவிர கடவுள் சிந்தனை ஒன்றே எங்கும் எதிலும் என்றும் கடவுளே என அவனை மாற்றும். உலக  சம்பந்த  மில்லாத தெய்வீகனாக  அவன் அப்போது மாறிவிடுவான்.   அவனுக்கு தந்தை, தாய், மனைவி, மக்கள், சுற்றம் எஜமானன், வேலைக் காரன், நண்பன் எல்லாமே கடவுள் தான். இந்த உறவு களில் தான்  ராமகிருஷ்ண பவதாரிணியை தனது  தாயாகக்   கண்டார்.

கண்ணன் வாழ்ந்த காலத்தில் கோபியர் ஆறு வயது கண்ணனை தமது வாழ்வின் ஜோதியாக கண்டனர். அவர்களது தூய அன்பு அவனை கட்டுண்ட மாயனாக பண்ணியது. தீராத அந்த விளையாட்டுப்  பிள்ளை அவர்கள் மனதில் ஆரா அமுதென இடம் பெற்றான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...